Posts

ஒவ்வொன்றும் ஒரு விதம்

வாரிசென்று வந்தது வருடம் ஒன்று வரிசையாக,  நல்லவேளை நின்றது நான்காவது வந்ததுமே. வேளா வேளை தவறாமல் வாய்க்குணவு கிடைத்துவிடும் பெரிதாய்த் தாங்கல் ஏதுமின்றி வளர்ந்துவிட்ட பிள்ளையெலாம் பள்ளி சென்றன உள்ளூரிலே! படிப்பில் ஒன்று படுசுட்டி! பரவாயில்லை இரண்டாவது! மற்ற இரண்டும் எப்படி என்றால்- எழுத்தென்றால் புரியாது, எண்ணென்றால் விளங்காது! ஆனால் நான்கும் சென்றன அன்றாடம் அந்தப் பள்ளிக்கு! படிக்கும் குழந்தை படித்து விடும், ஆடும் குழந்தை ஆட்டமாடும் ஒன்றிரண்டு ஊரைச்சுற்றும் வீட்டுப் பொறுப்பு கை வந்தால் அதிலே நல்ல பேரெடுக்கும். படிப்பேனில்லை பாட்டேனில்லை,  கேள்வி கேட்க ஆளில்லை, குறிக்கோளும் வைப்பதில்லை லட்சியமும் தேவையில்லை, வருகின்ற வாழ்வதனை வந்தவண்ணம் ஏற்கலாம். வளர்ந்துவிட்ட பிள்ளைகளின் வருமானத்தை நோக்கினால், ஒன்றுக்கொன்று வேறுதான்....  குறைவாய் ஈட்டும் குழந்தைக்கு  கூடக் கொடுப்பார் பெற்றோரவர்.... எளிமையான கோட்பாடு! ஏன் இல்லை  என்ற கேள்வி என்றும் இஙகே வந்ததில்லை! இருப்போருக்கு இருக்கட்டும், இல்லாருக்கு நாம் கொடுப்போம்,  இதுவேதான் வாழ்க்கையிங்கு சில காலம் முன்னாலே.... 👩‍?...

வெல்வெட் பூச்சி

வெல்வெட் பூச்சி 🐞🐛 சின்னஞ்சிறு வயது தாண்டி  சிறுமியாக இருந்த காலம், சுற்றிப் படர்ந்த நிலத்திலே மரங்களடர்ந்த பரப்பிலே, பல்லுயிரெங்கும் பெருகி செழித்திருந்த காலத்திலே... மேலிருந்து கீழே வந்து விழுந்து தெறித்த மழையிலே, கீழிருந்து மேல் வந்து நெளிந்து நகரும் புழுக்கள்,  எண்ணிலடங்கா கால்களுடன் எங்கெங்கும் ரயில் பூச்சி, செக்கச் சிவந்த நிறத்தில் நிலமெங்கும்  வெல்வெட் பூச்சி.... உலாப் போக எழுந்து வந்து ஊர்ந்து போன பூச்சிகளை, தீப்பெட்டியில் போட்டெடுத்துப் பிடித்தடைக்கும் விளையாட்டு... பின்னோக்கிப் பார்க்கிறேன் பிழையென்று உணர்கிறேன்! தீப்பெட்டி திறந்தவுடன் சின்னஞ்சிறு காலெடுத்துத் தப்பித்தோட எத்தனித்த செக்கச்சிவந்த பூச்சியே, என்றும் நீ என்னையே மன்னிக்க மாட்டாயே... வாயில்லா ஜீவனதை வதைக்காதே என்று,  யாரேனும் கூறி இருந்தால் கண்டிப்பாய் சிந்தித்து  மாறியிருப்பேன் மனதளவில்! 🐝🦟🦗🐜🐛🦋🐞🦂🕷️🕸️🐌 சிறுவர் விளையாட்டு என்னுடைய குழந்தை மற்றும் சிறுவயது பருவத்தில், காலப்பருவங்களுக்கு ஏற்ப விளையாட்டுக்கள் மாறும். எப்போதும் இருக்கும் ஸ்கிப்பிங்குடன்,  காற்று காலத்தில் பட்டம் ...

பழுது பார்த்தல்

பழுது பார்த்தல்🔨🔧 காரின் கதவு நசுங்கிப் போனால்  'டிங்கர்' என்று செய்வார்கள், அன்றைய காலத்தில்! இன்னொரு கதவை வாங்கி மாட்டு இருக்கவே இருக்கு காப்பீடு இன்றைய காலத்தில்! ஆடை கொஞ்சம் கிழிந்து விட்டால் தைத்து அணிந்தோம் அன்றைய நாளில்,    இன்று கொஞ்சம் கிழிந்தாலும் எறிந்துவிடு பழந்துணியை புதியதாக வாங்கலாம்! செருப்பின் கதையும் இதுவேதான் கொஞ்சம் பிய்ந்தால் புதிதேதான்! மாவரைத்துத்  துணிதுவைத்து, மிளகரைத்து சாறெடுத்து துணையிருக்கும் இயந்திரம், பழுதானால் பண்ட மாற்றம்! பழுது பார்த்து வேலை செய்தால்  பழையது ஓடும் பல நாட்கள்! பழுதுபார்க்கும் கலையை நீங்கி,  புதிய பொருளை மீண்டும் வாங்கி, வளமை சுருங்கி பூமியது பாலை போல ஆகிவிடும் பேரன் பேத்தி வரும்போது! 🧵🧶✂️📌🧷🥾👢👞🥿🔨🔧 நாங்கள்  ஒரு பதினைந்து வருடம் முன்பு முதன் முதலில் வாங்கிய கார் மாருதி 800. நீல நிறத்தில் பார்வைக்கு கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருக்கும் வண்டி அது. திருமணமான பின் பல வருடங்கள் நான் எவ்வளவு கேட்டும் கார் வாங்காமல் டபாய்த்த என் வீட்டுக்காரர் எங்கள் வீட்டுக்கு பாப்பாத்தி  நாய்க்குட்டி வந்ததும் ஓரிரு மாத...

சுசீலா

https://youtu.be/0xoZ1wctHug குளிர்ச்சியான குரலிலே இனிமை சேர்ந்து சொட்டுதே காதில் வந்து பாயுதே தேன் கலந்த பாடலே! தெலுங்கு பேசும் வாயிலே தெள்ளத் தெளிவு தமிழுமே கணீரென்ற குரலிலே கனிவும் கூட சேருதே! சோகத்திலே அமிழ்ந்திருக்க சுகமாகத் தூக்கிவிடும், களிப்பு வந்து கூத்தாட சமநிலைக்குக் கொண்டுவரும்.. சுற்றிலுள்ள தொல்லையெல்லாம் சற்று தூரம் சென்று விடும், சுசீலாவின் குரலமுதம்  சுமந்து வரும் பாட்டாலே! கண்ணதாசன் வரிகளை விஸ்வநாதன் ராகத்திலே இந்தக் குயில் பாடினால் இன்னலான நேரத்திலும் வீண்கவலை குறையுமே! 📻 🎼🎵🎶🎧📻📷🎼🎶🎵 தேனினும் இனிய.... நான் சிறுவயதில் ரேடியோவில் பாடல் கேட்க ஆரம்பித்தது முதல் இன்று என்னுடைய ஸ்மார்ட்போனில் கேட்கும் பாடல்கள் வரை சுசீலாவின் குரலுடனே தான் வளர்ந்து,வயதாகியிருக்கிறேன். அநேகமாக என் வயதையொத்த அனைவருக்கும் இந்த அனுபவம் தான் இருக்கும்.... அந்தக்காலத்தில் UMS என்ற ஒரு பெரிய ரேடியோ எங்கள் வீட்டில் இருந்தது, கிட்டத்தட்ட அது ஒரு இரண்டு அடி நீளமும் ஒன்றரை அடி உயரம் ஒரு அடி அகலமும் இருக்கும். இரண்டு பெரிய குமிழ்கள்..... அதில் ஒன்றைத் திருப்பினால் ஒலி அதிதமாகும்,  இன்னொ...

டையப்பர் 👶

சாயம் போன ஆத்தா சேலை தாத்தாவோட பழைய வேட்டி, துவைத்துத்  துண்டாய்க் கிழித்து வைத்தால், சின்னச்சின்னப் பயனுண்டு! சிறு மழலை வீட்டினிலே!   சின்னஞ்சிறிய குழந்தைக்கு  படுத்துக்கொள்ள போர்த்திக்கொள்ள, மேலும் கீழும் அணிந்துகொள்ள, துவைத்தால் சுளுவில் காய்ந்துவிட,  நைந்தால் தூக்கிப் போட்டுவிட, காசில்லாமல் கிடைத்திடுமே குழந்தைத் துணிமணிகளிங்கே! கிழிபடாத புடவையிலே தொட்டிலொன்றும் கிடைத்திடும்..! இந்தக் காலக் குழந்தை, அணிவது வேட்டி சேலையல்ல.... மரத்தை வெட்டித் தயாரிக்கும்  டயாப்பர் என்னும் கோமனம்! டயப்பர் அணிந்த தோலும் ஒவ்வாமையில் சிவந்து வீங்க வலியில் குழந்தை அழுது சிவக்க, புண்ணில் நாமும் மருந்தைப் பூச, '👶 இன்றுதானே பிறந்தேன்? பிறந்துமே புண்ணா? இடர்களேதான் வாழ்க்கையா?' இன்றைய உலகின் அழிவுப்பொருளே, கழிவுப்பொருளாம் பெரும் பூதம், வளரவிடாமல் தடுக்க வேண்டும், கண்ணே இன்று நீயும் நானும்! கழிவுப் பொருளில் பெரும்பங்கு, வகிப்பதென்பது டயப்பர் இங்கு! நான்கு பருத்திப் புடவை மற்றும் வெள்ளை வேட்டியில், நினைக்க இயலா நன்மை எல்லாம்  நம்மிடமே வந்துசேரும்... புதிய கோட்பாடேதுமில்லை  பழ...

ஆமைப் பெண்🐢

ஆமைப் பெண்🐢 இயற்கை விஞ்ஞான உலகத்திலே சுமார் முப்பது வருடம் முன்னாலே, cane turtle ஆமையைக் காணவில்லை பல காலம்? இருக்கா  இல்லையா சந்தேகம்! ஆமை பற்றிய எல்லாமே அறிந்து வருவேன் நானேயென்று கேரளநாட்டுப்பயணம் சென்று தனியே போனார் இளம் மங்கை விஜயா என்பதவர் பெயராம்! பழங்குடித் தலைவரைத் தேடிப்பிடித்து, அங்குமிங்கும் அலைந்து திரிந்து, காட்டிலுள்ள குகைக்குள்ளே தன்னந்தனியே பலநாள் இருந்து,  கண்டுபிடித்தார் ஆமையை! கொண்டுவந்தார் ஒன்றிரண்டை, சென்னைப் பாம்பு பண்ணைக்கு. அதிலே சிலது  முட்டையிட்டு மெல்லமெல்லக் குஞ்சு பொரிக்க, எழுபது வருடம் யாருமறியா ஆமைக்குட்டி பழக்க வழக்கம் நேரில் கண்டு பதிவுசெய்தார் விஜயா என்ற ஆமைப்பெண்ணவர்! கொண்டு வந்த ஆமை, சைவம் தான் உண்ணும் என்றிருந்த எண்ணம், மாற்றிக்காட்டும் வண்ணம், புழுவும் பூச்சியும் தின்றது,  நான் அசைவம் என்று சொன்னது,    ஆமையன்று விஜியிடம்! இன்னும் பல பாம்புகள் வேறு சில ஆமைகள், போன்றவற்றைப் பண்ணையில், பரிவுடனே தான் வளர்த்து குணங்களை கண்பார்த்து ஏட்டிலே தான் பதித்தார்! எந்தக் காடென்றாலும், விஜியுடன் சென்றால் கவலையில்லை, எல்லாத்திசையும் அ...

தமிழன்டா 🔔⚖️

தமிழன்டா...! 🔔⚖️ பண்டைய செந்தமிழ்நாட்டினிலே,  அறிவுச்சுடராம் புலவர்கள், இலக்கியம் வேண்டும்  நம் நாட்டில்,  என்ற எண்ணம் எழுந்ததுமே , சங்கத்தமிழில் இலக்கியங்கள்  எழுதிக் கொடுத்தார் அக்கணமே! 🙏 அதன்பின்னர் வந்த மன்னராம் ராஜராஜ சோழனாம்,  கோவிலொன்று வேண்டுமென்று  மனதில்     எண்ணம் வந்ததுமே, எப்படி இப்படிச் செய்தார் என்று இன்றும் வியக்கும் வண்ணம்,  கற்கோவில்  கட்டினார் கல்லில்லாதஞ்சையிலே! இன்று வந்த பாரதி  விடுதலையென்று எண்ணினான், எழுந்து வந்த எண்ணத்தை, தீப்பொறி பறக்கப் பாடி தமிழரைத் தட்டி எழுப்பினான்! இவர்களில் யாரும்  என்றுமே,  அன்றைய தமிழ்த் திருநாட்டினிலே, அப்படி இப்படி செய்தார்கள் என்பதைக் கூறித் தூங்கவில்லை.... இன்றைக்கென்ன தேவை என்பதை எண்ணிப் பார்த்தார்கள்... அதையும் உடனே செய்தார்கள்! இன்றைய தமிழ்த்திரு நாட்டினிலே பழைய பெருமை பேச்சினிலே பயன்கள் எதுவும் இல்லையே! வெறும் பேச்சைப் புறக்கணித்து, செயல்வீரர் தோற்றமெடுத்து, அவரவர் மனதின் எண்ணத்தில் எந்தக் காரியம் முக்கியமோ, அந்தக் காரியம் அவர் செய்தால், நாளைய தமிழர் நமையெல்...

கிடைத்தது கை கடிகாரம் 🧐

கிடைத்தது கைகடிகாரம் 🧐 பள்ளிக்கூடம் படித்த காலம் பால்ய நண்பன் கூறிய கதை,  கைக்கடிகாரம் கிடைத்த கதை. ஸ்வெட்ஸர்லாந்து கம்பெனியின் ஃபேவர்லூபா கைக்கடிகாரம், வட்ட வடிவக் கண்ணாடி உள்ளே  எண்களிருந்தன  முத்துப்போலே! அணிந்திருப்பவர் யாரென்றாலும் அணியும் கைக்குத் தனி ஒரு மதிப்பு!  பரீட்சையன்று தொலைந்தது  ஃபேவர்லூபா கடிகாரம், பள்ளி செல்லும் நேரம் வந்தது, கைகடிகாரம் கிடைக்கவில்லை..    வீட்டிலிருந்த அனைவருமே வந்து விட்டார் அறைக்குள்ளே! அங்கே பார்த்தார் இங்கே பார்த்தார் அலமாரியென்றும் மேசையென்றும், இழுப்பறையுள்ளும் புத்தகப் பையிலும், பதறிப் பதறித் தேடினார்கள், அனைவருக்கும் வந்தது பதட்டம் ஆனாலும் அது கிடைக்கவில்லை!   அனைவரும் இறுதியில் வெளியே செல்ல,  அறையை மூடிய நண்பன்,  அமைதியாகத் தலையைக் குனிந்தான், சிந்தனை செய்தான் சில நேரம்,  அறையில் சூழ்ந்த அமைதி  அலாதியான அமைதி...... மெல்லக்கேட்டது 'டிக்...டிக்'  ஓசை  ஓசை நோக்கி நடந்த நண்பன்,  கண்ணில் பட்டது கைக்கடிகாரம் கட்டிலுக்கடியில் இருட்டிய மூலையில்! பிரியத்துடன் கட்டிக் கொண்டான், ...

மருந்து மருத்துவம்

மருந்து💊        💉மருத்துவம்         🍔🍅 🍯     🥥🥭🍊🥗💊 🍇🥝 💊  🥣🍛🍲 🍱 🥙 🌮🍕🍛🥣    🥪 💉  💊   💉         🍳 🍒 🍜 பசி வந்த வாய்க்கு  ருசி என்ன தெரியும்? எந்த உணவென்றாலும்  விருந்தாகுமந்த உணவு, செரிமானம் ஆகி நல்ல  சத்தெனச் சேருமந்த உடலிடம். இயற்கையான பசியும் அளவான உணவும் தருமிந்த ஆரோக்கியம் வேறெதிலே வரும்? உணவந்த உடலுக்குத்  தேவையென்ற போதும், அளவுக்கு மீறி   அதையே நாம் உண்டால் அதுவும் ஒரு விஷமாகும் உடம்புக்குள் ஏறி! நோய் வந்த உடம்பை நன்றாக நாம் நோக்கி, நோய்க்கான காரணம் எதுவென்று தெளிந்து, அதற்கான மருந்தை  அளவாக நாம் கொடுத்தால் அருமருந்தாகாதா   நோய் வந்த உடம்புக்கு? நோயில்லா நல் உடம்பில் தேடி நோயைக் கண்டு, அதற்கென்று கூறி  அளவில்லா மருந்துகளைத் தின்னென்று நாம் கொடுத்தால், பசியில்லா வயிற்றிலே பெருவிருந்து கொடுத்தது போல அஜீரணமாகாதா? நோய் தீர்க்கும் மருந்தேதான் அதற்குமொரு அளவுண்டு, மீறினால் விஷமே தான் நன்றாக நாமறிவோம்- அறிந்தபடி நட...

தரம் 🍎

Image
   🍎 தரம்  பாடுபட்ட பணத்தால் பொருளொன்று வாங்கி வீடு வந்து சேர்ந்தால், விரைவில்  பழுதாகி மறுபடியும் அதையே வாங்க வந்த  காலம், ஏனிந்தக் கோலம் ? தரமாகக் கொடுத்தால் நீண்ட நாள் தாங்கினால், மீண்டுமதே விற்க முடியாதே நமக்கு என்றதொரு கணக்கோ? தரமான பொருளாக நாமாகக் கொடுத்தால், வாங்கிடும் மனம் வாழ்த்திடும்  நம்மை என்றதொரு கணக்கு  இல்லையோ நமக்கு? தரமுள்ள பொருளுக்கு விலையதிகமென்பதால் வேகமுள்ள விற்பனை நடக்காதிங்கென்று, வியாபாரிகள் நீங்கள் எண்ணிணீரோ மனதில்? செல்லும் காலம் செல்ல பெருகும் வணிகம் பெருக வளரும் லாபம் வளர...... தரமான பொருளிலுண்டு நிலையான லாபமென்றும்! உணர்த்துவது நமக்கதை ஆப்பிளின் கணினிக் கதை! கணினியின் உள்ளே ஒழுங்கென்ன தேவை ? வெளியிலேஅழகிருக்கு வேலையில் தரமிருக்கு, உள்ளழகு எதற்காக? யார்பார்க்கப் போகிறார்கள்? என்றலுத்தார் ஆப்பிளின் தொழிலாளி ! யாருமதை பார்த்தாலும் பார்க்கவில்லை என்றாலும், உள்ளிருக்கும் ஒழுங்கும்  தேவையிங்கு எனக்கு, ஆகையினால் உள்ளேயும் அழகிருக்கவேண்டும், என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் முதலாளி! வாங்குவோர் களிப்படைந்தால் விற்போர் செழிப்படை...

குப்பை

குப்பை  'வீட்டைச் சுற்றி மரம் வளர்த்தால் வீசும் காற்று சுத்தமாகும்' என்ற சொல்லைக்கேட்டு, 'வீட்டின் முன்னே மரம் வளர்த்தால் வாசல் நிறைய இலை விழுமே வாரிப்போட யார் வருவார்?' என்ற கேள்வி வருவதுண்டு.... மரத்தின் இலை மண்ணுக்குரமாம், மண்ணிலிருந்தே வந்திடுமாம் மனிதன் உண்ணும் உணவெல்லாம்... காரை தினமும் எடுத்துக் கொண்டு கடையில்  பொருள்கள் பலவும் வாங்கி கூடை நிறைய நெகிழிப்பை கொண்டு நாம் வருகின்றோமே! ஆற்று நீரை அடைத்துக்கொண்டு  கடலின் உயிரைக் கொன்றுகுவிக்கும்  நெகிழிப் பொருளே உண்மையில் குப்பை! உண்மை குப்பை எதுவென்று உணரா மனிதர் நாமல்லாம், உணர்ந்து மாறுவதென்னாளோ... உலகம் அன்றே மாறிவிடும்! சுத்தம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்பதின் கருத்துப்படிவம் மாறல் வேண்டும் நீரும்  காற்றும் நன்றாய் நமக்குத் தேவை என்றால் இவ்வுலகில்!! 🌳🌴🌿🌱🌲☘️🍀🌴🌳🌲🌳 பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேராசிரியருடன் உரையாட நேர்ந்தது. அவர் பள்ளிக் குழந்தைகளை அடிக்கடி மலைகள் மற்றும் காடுகள் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று இயற்கையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அடிக்க...

கோடை குளிர் பானம்

கோடை குளிர் பானம் கரோனா வந்ததிங்கு படைகொண்டு தாக்க கைதியாய் ஜெயிலுக்குள் அனுப்பியது நமையெலாம், ஆயிற்று திங்களொன்று உள்ளுக்குள் நாம் சென்று, கிடைப்பதைத் தின்று விட்டுக் களிப்புடன் இருக்கிறோம்!😀 கோடை காலம் ☀️  வந்திங்கு நாட்கள் பல ஆகியும் தொடவில்லை நாம் யாரும் கோலாவும் பெப்ஸியும்,🥤 செயற்கையாய் செய்துவந்த இன்னும் பல பானமும்! குளிர்பானம் இல்லாமல் குறையொன்றும் காணவில்லை சிறை வாழ்க்கையதிலேயும்.... கோடையிலும் தொடாத குளிர்பானம் கோலாவை கரோனா போனாலும்  கைதொடுதல் வேண்டாம்! நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லதாம் அதுவே, உடலுக்கும் உயிர் காக்கும் நன்மையும் அதுவே! மண்ணிலுள்ள  நீரையெல்லாம் உறிஞ்சியெடுத்து, மட்டில்லா சர்க்கரையை அதில் கலந்து,  குடியெனக் கொடுத்துவிடும்  குளிர்பானம், இலவசமாய் வந்தாலும்  இங்கேயது வேண்டாம்! 🥤🥥 🥤🥥🥤🥥🥤🥥🥤🥥 செயற்கைக் குளிர்பானங்கள் நான் பள்ளியில் படித்த காலத்தில் பான்டா என்றோரு குளிர்பானம் இருந்து.   ஆரஞ்சு வண்ணத்தில் சிறிய பாட்டிலில் பார்க்க அழகாக இருக்கும், குடிக்கவும் நன்றாக இருக்கும். பின்னர் சில வருடங்கள் கழித்து அது இல்லை. நம்...

சிக்கன் மட்டன்

சிக்கன் மட்டன் பசி வந்த நேரம் கூட்டமாக மேயும் மானினத்தைக் கண்டு, ஓட்டமாக ஓடிப் போய் வேட்டையாடி உண்ணும் காட்டுப் புலிகளும்..... சாகும் அந்த நிமிடம் வரை வாழ்ந்த மானுமே, காட்டினுள்ளே ஓடியாடித் திரிந்திருந்ததே, செழித்திருந்த பச்சைகளை உண்டு வாழ்ந்ததே! பிறந்து வந்த நிமிடம் முதல் கூண்டுக்குள்ளேயே  கைதியாக வைக்கவில்லை அந்தமானையே, அருமையான மிருகமான காட்டுப் புலியுமே! கூண்டுக்குள்ளே கோழியும் கொட்டிலுள்ளே ஆட்டையும் அடைத்து வைத்து வளர்த்து வந்து வெட்டி உண்ணும் ஓரினம் மனிதனென்னும் மானுடம். பிறக்கும் உயிர் எல்லாமே சாக வேண்டுமே ஐயப்படவில்லை அதை யாருமிங்கேயே! சாகும்வரை ஓடியாடும் சுதந்திரமில்லையெனில்.. கூண்டு வாழ்க்கை என்பது பிறந்ததுமே சாவது! பிறந்து வந்த நிமிடம் முதல் கூண்டிலடைந்து, கால்கள் கெஞ்ச நிற்பதற்கு, குற்றமென்ன செய்ததந்த சிறியக்கோழிக்குஞ்சு? நன்றி இல்லா மனிதனுக்கு உணவாகிப் போவதே, மகாபெரிய பெரிய குற்றம்... அதை உணரவில்லை கோழியே! ............ இல்லை உணர்ந்ததோ என்னவோ யாரறிவாரோ! 🐑🐏🐃🐂🐄🐔🐓🐣🐤🐥 கடாவெட்டும் கோழிக் குழம்பும் ______________________________...

முருகன்

Image
முருகன் மனம் கவர்ந்த அழகன் மால்மருகன் முருகன் சின்னஞ்சிறுவயதிலே  சிந்தை வந்த சரவணன். கையில் ஏந்தும் வேலும், நீரணிந்த  நெற்றியும் இதழ் நிறைந்த புன்னகையில் அழகன் எந்தன் வேலன்! கம்பீர உருவத்தை நினைத்த மறுகணத்தில் மனதில்உறுதி தருமே குமரன் அவன் பலமே! எதுவென்றாலும் துணையிருப்பேன் அச்சமின்று மறந்து விடு, எந்தச் சூழல் என்றாலும் எந்தன் வேலை ஏந்திக் கொண்டு, அருகில் வந்து நின்றிடுவேன்! மனிதன் உன்னைக் காத்திடுவேன், மயிலும் பாம்பும் சேவலையும், கூடச் சேர்ந்து காத்திடுவேன், மலர்ந்து சொல்லும் பாவனையில் சிரிக்கும் முருகன் உருவமே!  🙏 இளமையில் பக்தி எங்களுக்குக் குழந்தை பருவத்தில் முருகனின் அறிமுகம் பள்ளிப்படிக்கும் காலத்தில் வருடம் ஒருமுறை பழனி செல்வதுதான். அம்மாவும் அப்பாவும் ஏதோ வேண்டுதல் இருந்ததற்காக ஆறு வருடங்கள் விடாமல் பழனி சென்றார்கள். ஏதாவது கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து இருப்பார், அல்லது நண்பரின் காரில் அழைத்துச் செல்வார் அப்பா. காரை நிறுத்திவிட்டு வின்ச்  எனப்படும் ஒரு கயிற்றால் இழுக்கப்படும் வண்டியில் மலையின் மேலே போவோம். ஓரிருமுறை யானப்பாதையில...

வெயிலின் சுகம்

வெயிலின் சுகம் சித்திரை மாத வெயிலை தேகம் தாங்கமுடியலை! சுள்ளென சூடாய் அடித்து வேர்வை ஆறாய் ஓட, குளித்த குளிர்ச்சி குறைய, கோடைப் பருவம் பிடிக்கவில்லை சீக்கிரம் சென்றால் பரவாயில்லை! ஆனால் பாரு சின்னப்பையா! அந்த வெயில் தேவை பையா! வெயில் இல்லா பூமியிலே விளையும் பயிர் எங்கனம் வரும்? வெயிலும் நன்மை என்பதை விரும்பி மனம் ஏற்றுக்கொண்டால், உடம்பும் அதனைத் தானாகவே ஏற்றுக்கொண்டு மாறி விடும்! பிள்ளைப் பிராயம் பள்ளியிலே உச்சி நேர வெயிலிலே உணவின் பின் ஆடிய ஆட்டம்  நினைவில் நன்றாய் நிற்கிறது, ஆட்டம் கவனமாய் ஆடிய பின்னர், ஓட்டம் ஓடி அருந்தும் தண்ணீர், அதனினும் சுவை ஏதும் உண்டோ? ஆறாய்ப் பெருகும் வியர்வை அதன்பின்னே வரும் குளிர்ச்சி இரண்டும் நமக்கு என்றும் தேவை, ஆரோக்கியமாய் உடலைக்காக்க, காற்றைப் பதமும் குளிரும், ஆக்கி கொடுக்கும் யந்திரம் நமக்கென்றும் தேவையில்லை! ☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️ வெயில் அனுபவங்கள் பள்ளி கல்லூரி காலங்களில் கோடை விடுமுறைக்கு கிராமத்துக்குச் செல்வோம் அத்தை ஊருக்கு. அந்த ஊருக்கும் கோவைக்கும் சீதோஷ்ன   நிலையில் நிறைய வேறுபாடு இருக்கும் அங...

யானையின் நாகரிகம்

யானையின் நாகரிகம் 🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘 காடு விட்டு காடு செல்லும் கரியதொரு யானைக்கூட்டம் பயிர் விளையும் பூமி வழியே பாங்காக நடந்து செல்லும் கண்ணுக்கினிய காட்சிதனை கண்டேன் நானும், வாட்ஸ்அப் குழுமமொன்றிலே! வேடிக்கை பார்க்க வந்த வாடிக்கை கூட்டம், அமைதியாகப் இருந்திருந்தால், ஆறறிவென்று கூற அடையாளம் வந்திருக்கும்! யானைக்கூட்டம் நிம்மதியாய் வாழுமிடம் போயிருக்கும்! அமைதியாக நடந்து செல்லும் அழகான கூட்டமொன்று..... தொண்டை கிழியக் கத்திக்கொண்டு, கையும் காலும் ஆட்டிக்கொள்ளும் அநாகரிகக் கூட்டமொன்று.... அறிவு யாருக்கைந்திங்கே யாருக்குண்டு ஆறறிவு? 🤔😀 நாகரிகம் அறியாத மனிதர் வாழும் பூமியிலே  பிறந்து விட்ட பாவத்தை செய்த யானை கூட்டம் அந்தோ பாவம் பரிதாபம்! நடந்து செல்ல நிம்மதியில்லை நித்திய தொல்லை மனிதராலே! 🐘🌍🐘🌎🐘🌏🐘🌏🐘🌏 யானையைப் பற்றி படிக்கும் பொழுதெல்லாம் எனக்கு நம்மைவிட உயர்ந்த அறிவு மிகுந்த நாகரிகமடைந்த ஒரு விலங்கினைப் பற்றி படிப்பது போல உணர்வு ஏற்படும். குறிப்பாக இந்தக் காணொளியில் யானைகள்  ஒரு இரண்டு மூன்று முறை   சத்தம் போடும் மனிதர்களைத் த...

தொண்டைவலியும் தூதுவளையும்

தொண்டைவலி தூதுவளை மேனி எங்கும் முள்ளுடன் வேலி மேலே படர்ந்து வந்து, சித்திரம் போல்  இலையுடன் செழித்திருக்கும் தூதுவளை! இரண்டு நாளாய் தொண்டைவலி சோறுதண்ணி இறங்கவில்லை, அடித்துப் போட்ட கட்டைப் போல் அசரிக்கை தாங்க வில்லை.... பூண்டு மிளகு சீரகத்தை புளி தக்காளி உடனெடுத்து, தூதுவளை இலைகள முள்ளுடனே பறித்துவந்து, எல்லாம் சேர்த்து மையைப் போல் மின் அம்மியில் அரைத்து வைத்து..... கரிவேப்பிலை கடுகு காயத்துடன் வெங்காயம், நல்லெண்ணையில் தாளித்து, அரைத்த மையில் உப்பிட்டு கரைத்துப்போட்டு கொதிக்கவிட்டு, சொட்டு நெய்யில் குடித்து வந்தேன் நாளில் இரண்டு வேளை, நான்கு நாளில் பறந்தது தொண்டை வலி வேதனை! 🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵 சளிக்கு தூதுவளை இலைகளை  அரைத்து ரசம் வைத்துக் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், நான் அதை அவ்வளவாக செய்தது இல்லை. ஆனால் அந்தச் செடியை வளர்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு, திருப்பூரில் என் அம்மாவுடன் இருந்த பொழுது, அதிசயமாக தானே முளைத்து வந்த ஒரு செடிக்கு, அடிக்கடி தண்ணீர் விட்டு என்னென்னவோ செய்து பார்த்தும் மிக மிக மெதுவாகத்தான் அது வளர்ந்...

கல்யாண வேளை

கல்யாண வேளை கல்யாணமெல்லாம்  மாறியது கரோனாக் கிருமி சொன்னபடி, இருப்பது அளவாய் இருபது பேர் மீறிப் போனால் முப்பது பேர் சிரித்துப் பேசித் தாலி கட்டி, சொந்தம் ஒன்றாய்  உணவருந்தி, கோவில் விட்டு வீடு சேர்ந்து களைப்பில்லாமல் கனிவோடு கடமையெல்லாம் பார்த்தது! தேனிலவை வீட்டிலேயே தேடிக்கொண்ட புதிய ஜோடி, வாழத்தொடங்கிய முறையின்று வேறுபட்டு வந்தது! கலாட்டா கூட்டம்  ஏதுமின்றி ஆரம்பித்த புதிய வாழ்வு, அருமையாக அமையவேண்டி அனைத்து மக்கள் வாழ்த்துக்களும் மனையிலருந்து பறந்தன மானசீக எண்ணமாக! இந்த மணம் முடிந்தது எந்தக் குறையும் இல்லாமல் பணம் நிறைய மீந்தது பெற்றோர் இருவரிடமுமே! சொந்தமெல்லாம் மகிழ்ந்தது பயணவேலை மிச்சமென்று! திருமணம் எவ்விதம் முடிந்தாலும் எல்லாம் எங்களுக்கொன்றே என்று,  இனிமையாகப் பறந்தது இளைய ஜோடிப் புறாவொன்று!  🕺👩‍❤️‍👨👫🌹💐🌹💐👫👩‍❤️‍👨💃 என் தோழி தன் கணவரின் சகோதரர் மகன் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்து விட்டுச் சென்றார் இரண்டு மாதங்களுக்கு முன்பு. என் மாமன் மகன் தன் மகளுடைய நிச்சயதார்த்தத்துக்கு அழைத்திருந்தார் கண்டிப்பாக வரவேண...

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

வைரஸ் வழங்கும் வாய்ப்பு கற்றது எல்லாம் வீணின்றி உற்ற துணையாய் வைத்திருக்க, என்னது கற்றோம் எதைப் பெற்றோம் என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால்..... சரித்திரம் திரும்பி வந்தது இங்கே ஆண்டுகள் நூறு ஆன பின்னே! சட்டென உலகம் ஸ்தம்பித்தது, சுதாரித்தெழ நேரமில்லை! வீட்டினுள் இருந்தால் பிழைப்பாய் மனிதா...... விடுதலை கிடைப்பதெப்பொழுதென்று, கணித்துச் சொல்வது கடினமப்பா, என்று சொன்னது வைரஸ் கிருமி! வாழ்க்கையென்றால் இதுதானா...! வல்லிய சிந்தனை வந்தது இன்று🤔! சிங்கம் புலி யானை என்று விலங்கினைக் கூண்டில் அடைத்தோம், வேடிக்கையாக்கி கேளிக்கை செய்தோம், உடன்பிறந்த உயிரையெல்லாம் கொன்று நாமும் தின்று முடித்தோம், விலங்கிடம் வாழ்ந்துவந்த கிருமி வெளியே வந்தது நம்மைத் தாக்க! 'நாமே நிலையிந்த உலகில் இல்லை' நித்திய உண்மை சத்தியமென்று விளங்கவைத்தது நமக்கது இன்று! 'மனதில் மின்னும் லட்சியங்கள், எழுந்துவரும் எண்ணங்கள், நீராய் ஓடும் நினைவுகள், எல்லாம் ஒன்றாய் சேர்த்துவைத்து, இயற்கையுடன் இயைந்த வாறு பாதை மாற்றி செலுத்திப் பாரு, எண்ணம் பின்னால் தொடரும் வாழ்க்கை எவ்வாறுள்ளதென்பதை...

ஒரே மரம்

ஒரே மரம் 🌿 வீசிய காற்றில் வீழ்ந்ததும் இரண்டு வீட்டின் இடையிருந்த இரும்பு வேலி மேலே சாய்ந்து, முக்கால்வாசி சாய்ந்த நிலையில் எங்கள் வீட்டுப் பின்பக்கம் நீண்டு நின்ற முருங்கைமரம்! விழுந்த பின்னும் உயிரோடு வாழ வைக்கும் அருமை மரம்! சாளரமருகில் சிறிய இலைகள் சலசலவென்று காற்றில் ஆட, பூத்துக் குலுங்கும் வெள்ளைப் பூவில் பறந்தமரும் தேனீக்கள், கண்ணுக்கினிய விருந்தாகும் வீட்டுச் சிறையினுள்ளே நமக்கு! கண்ணென்ன கண்ணே, கண் மட்டும் இல்லை, கரோனாகாலக் கஷ்டத்தில்  வயிற்றுக்கும் விருந்தாய் வருவேன் நானே, என்றதந்த முருங்கையிலை! வானலியில் நல்லெண்ணை வாசனைக்குப் பூண்டுப்பல்லு வதக்கி விட்ட வெங்காயம் 🌰 உடன் வதங்கும் தக்காளி 🍅 இறுதியாக கை நிறைய இறங்கும் இந்த இலையும் பூவும் 🌿 அனைத்தும் வதங்கி ஆறியபின்னே மின்அம்மியில் அரைத்தெடுத்து தேவைக்களவாய் நீரைக்கலந்து அடுப்பின் மேலே கொதிக்க விட்டால் அருமையான முருங்கை சூப்! இறக்கியபின் பால் சேர்த்து உப்பும் மிளகும் உடன் சேர்த்தால் ருசியில் தூக்கும் இந்த சூப்!🍵 தேனி வந்து தேனருந்த🐝 இலையும் பூவும் மயிலுண்ண அணில்கள் ஆடி ஆட்டம் போட...

வீட்டுச் சிறை

வீட்டுச் சிறை வாசலுக்கு வரலாம் வானம் அளக்கலாம், வீதியில் நிற்கலாம் வேடிக்கை பார்க்கலாம், வீட்டுக்குள் சென்றால் விரும்பிய திரைப்படம் காணொளியில் காணலாம்! உற்ற குடும்பம் உடன் இருப்பதாலே வேண்டுவதைப் பேசலாம் சிரித்து மகிழலாம், மற்றவரோடு நாமுறவாட    கையிலே என்றும்  கைபேசி உண்டு... தினமும் குளிக்கலாம் திண்ணையில் நடக்கலாம்... ஆயிற்று இன்றோடு மூவேழு நாட்கள் அடைப்புக்குள் நாமெல்லாம் முழுவதும் சென்று, இருந்தும் இன்னும் பண்டங்கள் உண்டு, எண்ணியதும், வேண்டிய உணவருந்திக் கொள்ள. இத்தனை இருந்தும் 'ஐயோ பத்தலை'! எப்போது கலக்கலாம் மாந்தர்தம் அலையிலே என்றொரு ஏக்கம் எல்லார் மனதிலும்... தற்கால அடைப்புக்கு இத்தனை எனில்...... சொல்லவும் வேண்டுமா ஆயுளுக்கும் அடைபடும் ஜீவனின் வேதனை? இன்றேனும் விடுதலை செய்யலாம் அல்லவா? கட்டிவைத்த நாயும் கூண்டில் உள்ள பறவையும் குப்பியிலே மீனும்  இனியேனும் வேண்டாம் விடுவித்து விடலாம்...... 🐦🦜🐘🐎🐄🐃🐖🐒🦈🐥🐣🐔 பெட்  ஷாப்பும் தெரு நாய்களும் சமீபத்திய  நிகழ்நிலை செய்திகளில்  பெங்களூரில் செல்லப் பிராணிகள்...

வந்தது வைரஸ்

வந்தது வைரஸ் வந்தாலும் வந்தது வைரஸ் கிருமி சொல்லாமல் சொன்னது- சோம்பேறி மனிதா, சொல்கிறேன் கேளடா! அவரவர் வேலையை அவரவர் செய்யடா! சொந்தமாய் சமைத்து பாத்திரம் கழுவி, துணியைத் துவைத்து தேவைக்குத் தேய்த்து, விளையாட்டாய் வீட்டைப் பெருக்கி முடித்து, வேலை அனைத்தும் செய்து மகிழு, செய்து பார்த்தால் தெரிந்துவிடும் வீட்டு வேலயும் சுளுவென்று!வீட்டின்பின்னே இடமிருந்தால் வேண்டிய காயைப் பயிர் செய்யலாம், பயனுள்ள வேலை அதுவேயடா! பாடம் சொல்லப்பிறந்து வந்தது புத்தம் புதிய கரோனா! அடடா வேலையை நன்றாய் நாமே ஆடிப்பாடி செய்தாலே அலுப்பென்பது இருக்காதே அறிந்துகொண்டோம் உன்னாலே! என்று சொல்வது நானில்லை எல்லா நாட்டின் மனிதரும்தானே! தனனானானே தன்னானே! 💃🕺🕴️👯👭🦸🧚🤼🏌️🏋️🚵🚴 வீட்டில் வேலை தோழி ஒருவர் பாத்திரம் கழுவிக் கழுவி கை பொத்துப் போய்விடும் போலிருக்கிறது என்று க்ரூப்பில் குறிப்பிட்டு இருந்தார், கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. சரி 'சிங்கில்' இருக்கும் ஓட்டையை அடைத்து அதில் நிறைய சோப்புத் தண்ணீர் நிரப்பி அதில் பாத்திரங்களை ஊரப் போட்டு விட்டால் சிறிது நேரம் கழித்து சிரம...

புயலின் பின்னே

புயலின் பின்னே ஆட்டம் ஆடாமல் ஓட்டம் ஓடாமல் அதிவேகப் புயலிலே நின்ற இடத்தில் நிற்கிறோம்! நின்றால் பரவாயில்லை, நிந்தனை செய்யாமல் நல்லவை நடக்குமென்று சிந்தனை செய்திடுவோம்... நல்லவை என்றால் என்னவை என்று என் மனம் சொல்லுவதை நான் இங்கு வைக்கின்றேன், மாற்றுக்கருத்திருந்தால் மறக்காமல் கூறுங்கள்..... இன்றுவரை நல்லதென்றால், மனிதனுக்கு நல்லதை, மட்டும் நாம் சிந்தித்தோம். மிருகத்தைக் கொன்றோம், மருந்தினை ஆராய்ந்தோம் மிருகத்தின் மேனியிலே முடிந்தவரை நீட்டினோம் மனிதனின் ஆயுளை! நீண்டநாள் வாழ்ந்திடும நம்மால் பயனிந்த பூமிக்கு என்னவென்று எண்ணவில்லை நாமெல்லாம்? இன்று வந்த கரோனா ஸ்தம்பிக்க வைத்தது மனிதனின் வாழ்க்கையை, உலகெல்லாம் நாடெல்லாம்... ஒருநாள் ஓய்ந்திடும் கரோனாப் புயல்  ஓய்ந்தபின் வந்திடும் புதியதோர் உலகம்! புதியதோர் உலகில், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி அளவாக நாம் நுகர்ந்து அனைத்துயிர் காக்க ஆறறிவு மனிதர் நாம் அழகாக முடிவெடுத்தால் நமக்குமது நன்மையே! ஒருவேளை இச்செயலை முன்பே நாம் செய்திருந்தால்  கரோனா என்னும் புயல் மையமே கொள்ளாமல் மனிதனைத் தொடாமல் மறைந்தே இரு...