வெயிலின் சுகம்

வெயிலின் சுகம்

சித்திரை மாத வெயிலை
தேகம் தாங்கமுடியலை!
சுள்ளென சூடாய் அடித்து
வேர்வை ஆறாய் ஓட,
குளித்த குளிர்ச்சி குறைய,
கோடைப் பருவம் பிடிக்கவில்லை
சீக்கிரம் சென்றால் பரவாயில்லை!

ஆனால் பாரு சின்னப்பையா!
அந்த வெயில் தேவை பையா!
வெயில் இல்லா பூமியிலே விளையும் பயிர் எங்கனம் வரும்?
வெயிலும் நன்மை என்பதை
விரும்பி மனம் ஏற்றுக்கொண்டால்,
உடம்பும் அதனைத் தானாகவே
ஏற்றுக்கொண்டு மாறி விடும்!

பிள்ளைப் பிராயம் பள்ளியிலே
உச்சி நேர வெயிலிலே உணவின் பின் ஆடிய ஆட்டம்  நினைவில் நன்றாய் நிற்கிறது,
ஆட்டம் கவனமாய்
ஆடிய பின்னர்,
ஓட்டம் ஓடி அருந்தும் தண்ணீர்,
அதனினும் சுவை ஏதும் உண்டோ?

ஆறாய்ப் பெருகும் வியர்வை
அதன்பின்னே வரும் குளிர்ச்சி
இரண்டும் நமக்கு என்றும் தேவை,
ஆரோக்கியமாய் உடலைக்காக்க,
காற்றைப் பதமும் குளிரும், ஆக்கி கொடுக்கும் யந்திரம் நமக்கென்றும் தேவையில்லை!

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

வெயில் அனுபவங்கள்

பள்ளி கல்லூரி காலங்களில் கோடை விடுமுறைக்கு கிராமத்துக்குச் செல்வோம் அத்தை ஊருக்கு. அந்த ஊருக்கும் கோவைக்கும் சீதோஷ்ன   நிலையில் நிறைய வேறுபாடு இருக்கும் அங்கே வெய்யில் சக்கை போடு போடும். கோடை காலத்தில் சரியான வெயில் அடிக்கும். ஊர் சென்றவுடன் ஒரு இரண்டு நாட்கள் என்னால் எழுந்திருக்க கூட முடியாது. அவ்வளவு அலுப்பாக படுத்து விடுவேன். மூன்றாவது நாள் ஏதோ மாய மந்திரம் நடந்தது போல் உடம்பு தன் சகஜ நிலைக்கு வந்துவிடும். எப்பொழுதும் போல் எல்லா வேலைகளும் செய்வேன். ஆரம்பத்தில் எனக்கு இது புரியவில்லை பிறகுதான் புரிந்தது உடம்பு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறது என்று. 'அக்கிளமடைஸேஷன்'
(acclamatisation) என்ற வார்த்தையின் அர்த்தம அப்பொழுதுதான் நன்றாக விளங்கியது.

என் குழந்தைகள் சிறுவர்களாக இருந்தபோது பல வருடம் மதுரையிலும் காங்கேயத்தில் இருந்து விட்டுப் பிறகு பெங்களூரிலும் பல வருடங்கள் இருந்தோம். என் இளைய மகனுக்கு எப்பொழுதுமே வெயில் ஆகாது அவன் அடிக்கடி பெங்களூர் வீட்டை ஏசி செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே இருப்பான் எங்களுக்கு சிரிப்பு வரும் பெங்களூரில் ஏசியா என்று.

அங்கே போன முதல் வருடம் குளிர் மிகவும் அதிகமாகவும் வெயில் மிக கம்மியாகயாகவும் தோன்றியது.நான் அங்கு வேலை பார்த்த மருத்துவமனையில் என் அறையில் ஏசி காற்று வரும் குழாயைப் பாதி அடைத்து வைத்து விட்டேன் குளிர் தாங்கமுடியாமல்!
அடுத்த வருடம் மீண்டும் உடம்பு அதற்கு அட்ஜஸட் ஆகிவிட்டபடியால் குளிர் கம்மியாகவும் வெயில் அதிகமாகவும் தோன்றியது!

வயதாக ஆக உடம்பில் அட்ஜஸ்ட் செய்யும் தன்மை குறைகிறதா, அல்லது ஆரோக்கியம் இல்லாத உணவும் குறைவான உடற்பயிற்சி பழக்கங்களும் சேர்ந்து இப்படி உடம்பை ஆக்கிவிட்டதா தெரியவில்லை. இப்போதெல்லாம் வெயில் காலம் முழுவதுமே எனக்கு கொஞ்சம் களைப்பு அதிகமாகத்தான் இருக்கிறது. உடம்பு அட்ஜஸ்ட் ஆக மறுக்கிறது வெயில் காலங்களில் எப்பொழுதும் நிழலைத் தேடியே நான் ஓடுகிறேன், எனக்கு நல்ல வெயிலில் சிறிது நேரம் நின்றால் மைகிரேன் தலைவலி  வந்துவிடும் வந்தால் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கூட படுத்த படியே இருக்க வேண்டி வரும். இந்தப் பிரச்னை ஒரு 25 வயதிலிருந்து எனக்கு இருக்கிறது.
சமீபமாக அருகில் ஒரு சிறிய மின்விசிறி வைத்துக்கொள்கிறேன். முன்பெல்லாம் அடிக்கடி ஏசி உபயோகிப்பேன் இந்த வருடத்திலிருந்து ஏசி உபயோகிப்பது இல்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி