விருந்து

  விருந்து


பூப்போல் அரிசி சாப்பாடு கடைந்த மொச்சை பருப்போடு, 

முழுசாய் பிஞ்சாய் கத்தரிக்காய் 

மிதக்கும் எண்ணைக் குழம்போடு,

சிவந்த நிறத்தில் பக்கத்தில்

வறுத்த உருளைக்கிழங்கும்,

பருப்புத் தண்ணி தக்காளி சேர்த்து வைத்த ரசமும்,

வாசத்தோடு வந்தது பாசம் நிறைந்த கைகளிலே,

ஜதியுடனாடி வந்தது ஜவ்வரிசிப் பாயாசம்,

பரந்து விரிந்த அப்பளம் 

பக்கம் உப்பும் ஊறுகாய்,

புதிதாய் பயின்று செய்வித்த, தாவரத்தயிரும் கிண்ணத்தில்!

தின்று முடித்துத் திரும்பினால் தாம்பூலத்தில் ஏலக்காய்..

சத்தாய் சுண்ணம் சேர்ந்து

சிவந்த வாயில் மணந்தது!


இந்தப்பக்கம் திரும்பினால் 

இலையோடுண்டு

இன்னொரு விருந்து!

மணக்கும் மட்டன் பிரியாணி

தொட்டுக்கொள்ள பச்சடி,

அரைத்த கோழிக் குழம்பும்

அரிசிச் சோறும் சேர்ந்து,

அவித்த முட்டை அருகிலே

வைத்திருக்கும் இலையிலே,

உப்பிருக்கு ஓரத்தில்

சுக்கா வறுவல் பக்கத்தில்,

பள்ளிப்பாளைய வறுவலில் பதுங்கியிருந்த வரமிளகாய்!

அடுத்து வந்த ரசமும் 

எருமைத் தயிரும் கோப்பையில்,

உண்ட களைப்பு ஓடிப்போக

சுக்குக் காப்பி குப்பியில்,

நாவில் விருந்து சேரும் முன்

கண்ணுக்கழகாய் 

காட்சி விருந்தாய்!


விருந்திரண்டும் அந்த இடத்தில், 

இலையில் வந்து சேரும் முன்னே,

இருந்த கதி என்னவென்று இனிமேல் சென்று பார்ப்போமா?


கூண்டில் அடைத்த கோழிக்குஞ்சு

கட்டிப்போட்ட ஆட்டுக்குட்டி,

கத்திக் கதற வெட்டிப்போட்டு, 

குஞ்சின் உயிர் போகும் முன்னே கொதிக்கும் நீரில்

போட்டெடுக்கும் நம்ப முடியா குரூரம்...


பரந்து விரிந்த வயல்களிலே சிரித்து படர்ந்த பயிர்களுமே, பறித்து முடித்த பின்னாலும் மறுபடி வளரும் கத்தரிக்காயும், 

எடுத்த மொச்சை விதையிலிருந்து 

எழுந்து முளைக்கும் இன்னொரு பயிரும்...


இலையில் வந்து விழுந்த பின்னும் 

இலைக்கு வந்து சேரும் முன்னும்,

கண்ணுக்கழகு

மனதுக்கிணக்கம்

வீரநனிசைவம்!

சேரும் முன்னால் இருந்த கோரம் 

மறைத்து வைத்த வியாபாரம், அசைவமென்னும் அநியாயம்!



என் அசைவ அனுபவங்கள்


பள்ளி முடித்து கல்லூரி செல்லும் ஆரம்ப காலத்தில், எங்கள் குலதெய்வக் கோயிலில் கிடாய் வெட்டி விருந்து வைத்திருந்தது. எனக்கு உடம்பு சரியில்லாமல் படிக்க முடியாமல் போன பிறகு ஓரளவு சரியாகி திரும்பவும் படிக்க ஆரம்பித்த சமயம், என் தாய் வேண்டி இருந்தார்கள்... குலதெய்வ கோயிலுக்கு வந்து பூமுடி கொடுத்து,கிடா வெட்டுகிறேன் என்று.  அதன் நிறைவேறுதல் தான் இந்த விருந்து.


கோயிலுக்கு அருகிலேயே ஒரு சிறிய ஆறு ஓடும். பூமுடி கொடுத்துவிட்டு அந்த ஆற்றில் குளித்து வந்து, கிடாய் வெட்டி, எங்கள் அத்தையின் கை வண்ணத்தில் மணக்கும் அடசல் குழம்பு வைத்து, அனைவரும் உண்டு மகிழ்ந்து விட்டு ஊர் திரும்பினோம். அந்தக் காலங்களிலும், அதற்கு முன் சிறுவயது பருவங்களிலும், இதுபோன்ற கிடாய் வெட்டு விருந்துகளுக்கு நான் சில முறை சென்றிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அந்த ஆட்டுக்குட்டியை வெட்டும் காட்சி 'மிஸ்' பண்ணக் கூடாது என்ற எண்ணத்தில் ஓடிப் போய் நின்று பார்ப்பேன். 


இன்று அதை நினைத்துப் பார்த்தால், என் இதயமே நின்று விடும் போல அதிர்வாய் இருக்கிறது. அப்பொழுது இருந்த எனக்கும் இப்பொழுது இருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? 'அவேர்னஸ்' என்று ஆங்கிலத்தில் கூறுவார்களே, அந்த விழிப்புணர்வு  ஒன்றுதான் வித்தியாசம்.


50 வருடங்கள் தேவைப்பட்டது, எண்ண ஓட்டங்களில் இயல்பாக எனக்கு இதுபோன்ற ஒரு விழிப்புணர்வு வருவதற்கு. யாரேனும் ஒருவர் அந்த நாட்களிலேயே என்னைக் கொஞ்சம் ஒரு தட்டு தட்டி அந்த ஆட்டுக்குட்டி எப்படி வலியால் துடிதுடித்து இறந்து இருக்கும் தெரியுமா? உன்னை ஒரு சிறு ப்ளேடினால் கீறினால் உனக்கு எப்படி வலிக்கிறது? அதன் மூச்சு குழாயை நாம் கத்தி கொண்டு அறுக்கிறோமே, எண்ணிப் பார்க்க முடியாத வேதனை அல்லவா அது?

என்று கொஞ்சம் சொல்லி இருந்தால் கண்டிப்பாக நான் அப்பொழுதே மாறி இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அப்படி மாற முயன்றாலும் என்னை சுற்றி இருக்கும் சமூகமும், குறிப்பாக அசைவ விரும்பிகளும் என்னை அப்படியே விட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான். தாங்கள் விரும்பி செய்யும் ஒன்றை அனைவரும் செய்ய வேண்டும் என்று விரும்புவது பொதுவான ஒரு மனித இயல்பு. இதில் எந்த விதமான நல்ல எண்ணமும் இல்லை, கெட்ட எண்ணமும் இல்லை. இது ஒரு இயல்பு, அவ்வளவுதான்.

இந்த இயல்புக்கு காரணம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை, ஒரு 'கம்பெனி' வேண்டும் என்ற எண்ணமாக இருக்கலாம். அந்த சமூகத்தின் வற்புறுத்தலை மீறி நம் சிந்தனையில் நாம் நிலையாய் நிற்பதற்கு ஒரு மன உறுதி, அதற்குமேல் மனத்தெளிவு மிகத் தேவை. அந்த வயதில் எனக்கு அது இருந்திருக்கும் என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த வயதில் இருந்தே மனித உயிர் வேறில்லை, சிறு மிருகங்கள் மட்டும் பூச்சிகளின் உயிர் வேறில்லை

என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருந்தது. எல்லா உயிர்களும் ஒன்றே தான், பெரிய உயிர் ஒன்றைக் கொன்றால் என்ன பாவமோ, அதேதான் சின்னப் பூச்சியை கொன்றாலும் என்று என் அடி மனதில் ஒரு எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். எப்பொழுதும் உள்ளே இருந்தாலும் அந்த எண்ணம் வலுவாக வெளிப்படுவதற்கு இத்தனை வருடங்கள் ஆகியிருக்கின்றன!


இதற்குமேல் குறிப்பாக, சமீப காலங்களில், கொஞ்சம் தாங்களாகவே சிந்தனை செய்து, பிற உயிர்களைக் கொன்று அவற்றைத் தின்று தான் மனிதன் வாழ வேண்டும் என்ற தேவை இல்லை, நமக்கு தாவர உணவே போதுமானது என்ற உண்மையை உணர்ந்து இருக்க முயன்றாலும், நாம் இத்தனை வருடமாக உண்டு பழகிய அசைவம் பால், மற்றும் முட்டை, தேன் முதலியவற்றை நாம் விடாமல் இருக்குமாறு அந்தந்த உணவுகளை வைத்து வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் சூழ்ச்சி செய்கின்றன. 


நம் கண்ணில் இந்த கோரக் கொலைகளை காண்பிக்காமல் மறைத்து, மிகவும் அழகான பார்சல்களாக சிக்கன், மட்டன், லெக் பீஸ், பிரஸ்ட் பீஸ் என்று அலங்காரமான பொட்டலங்களில் கிடைக்குமாறு  பார்த்துக்கொள்கின்றனர். அதேபோல் பாலையும் பல பல வடிவங்களில், டெலீஷியஸ் பட்டர், சுத்தமான புனிதமான தூய்மையான ஆரோக்கியமான பால், அத்தனையும் பாலின் சத்து,

வீட்டில் செய்யும் நெய் ,

போன்ற வாக்கியங்களினால் அலங்கரிக்கின்றனர். இதனால் பால் என்பது ஒரு புனிதமான, தெய்வீகமான உணவு என்பது போன்ற ஒரு மாயையை உருவாகிறது.

உண்மையில் அது பசுவிடமிருந்து திருடப்பட்ட கன்றுக்குட்டியின் உணவு, என்பதை சாமர்த்தியமாக நம்மிடமிருந்து மறைத்து விடுகிறார்கள். 


கண்டிப்பாக இன்று பள்ளி செல்லும் பல குழந்தைகளிடம் நாம் பால், நெய், வெண்ணெய் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால், குறைந்தது பாதிப் பேராவது 'டிபார்ட்மென்ட் ஸ்டோரில்' உள்ள குளிர்சாதன பெட்டிகளில் இருந்து வருகிறது என்றுதான் கூறுவார்கள். அதே பாலில் இருந்துதான் வெண்ணை வருகிறது என்பது கூட அனைவருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. 

( நான் மருத்துவக் கல்லூரி படிக்கும் பொழுது என் தோழி ஒருவர் வெண்ணெயை உருக்கினால் நெய் கிடைக்கும் என்பதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டது இப்பொழுது நினைவு வருகிறது.....)

சிறிய கன்றுகுட்டியுடைய உணவை பிடிங்கிக் கொண்டு வந்திருக்கிறோம் என்று தெரிந்தால் அந்தப் பள்ளிக் குழந்தைகளில் பாதிப்பேர் அந்த உணவை உண்பார்களா என்பதே சந்தேகம்தான்! உண்மை மறைக்கப்பட்ட ஒரு  அறியாமையான நிலையைவிட, எப்பொழுதுமே உண்மையை எதிர்நோக்குவதே நல்லது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கிருக்கிறது.

உண்மையை உணர்ந்த விழிப்புணர்வில் உதித்த ஒரு நல் வாழ்வு நனி சைவா வாழ்வுமுறை!


My version of Falafel


Soak Chickpeas overnight

Wash clean

Add garlic

Onions 

Ginger

Jeera powder

Dhania powder

Chilly powder 

Curry leaves

Coriander leaves

Chillies 

Salt 

Turmeric powder 


Grind to coarse paste 

Make into patties 

Deep fry .


Picture







My version of Falafel


Soak Chickpeas overnight

Wash clean

Add garlic

Onions 

Ginger

Jeera powder

Dhania powder

Chilly powder 

Curry leaves

Coriander leaves

Chillies 

Salt 

Turmeric powder 


Grind to coarse paste 

Make into patties 

Deep fry .



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி