ஒரே மரம்

ஒரே மரம் 🌿


வீசிய காற்றில் வீழ்ந்ததும் இரண்டு வீட்டின் இடையிருந்த
இரும்பு வேலி மேலே சாய்ந்து,
முக்கால்வாசி சாய்ந்த நிலையில்
எங்கள் வீட்டுப் பின்பக்கம்
நீண்டு நின்ற முருங்கைமரம்!
விழுந்த பின்னும் உயிரோடு வாழ வைக்கும் அருமை மரம்!

சாளரமருகில் சிறிய இலைகள்
சலசலவென்று காற்றில் ஆட,
பூத்துக் குலுங்கும் வெள்ளைப் பூவில்
பறந்தமரும் தேனீக்கள்,
கண்ணுக்கினிய விருந்தாகும்
வீட்டுச் சிறையினுள்ளே நமக்கு!

கண்ணென்ன கண்ணே,
கண் மட்டும் இல்லை,
கரோனாகாலக் கஷ்டத்தில்  வயிற்றுக்கும் விருந்தாய் வருவேன் நானே,
என்றதந்த முருங்கையிலை!

வானலியில் நல்லெண்ணை
வாசனைக்குப் பூண்டுப்பல்லு
வதக்கி விட்ட வெங்காயம் 🌰
உடன் வதங்கும் தக்காளி 🍅
இறுதியாக கை நிறைய
இறங்கும் இந்த இலையும் பூவும் 🌿
அனைத்தும் வதங்கி ஆறியபின்னே
மின்அம்மியில் அரைத்தெடுத்து
தேவைக்களவாய் நீரைக்கலந்து
அடுப்பின் மேலே கொதிக்க விட்டால்
அருமையான முருங்கை சூப்!
இறக்கியபின் பால் சேர்த்து
உப்பும் மிளகும் உடன் சேர்த்தால்
ருசியில் தூக்கும் இந்த சூப்!🍵

தேனி வந்து தேனருந்த🐝
இலையும் பூவும் மயிலுண்ண
அணில்கள் ஆடி ஆட்டம் போட
எட்டுக் காலை கொண்ட பூச்சி
வீட்டைக் கட்டி இரை தேட 🕸️,
பலவித பறவை வந்தமர்ந்து ஆசுவாசம் தேடிக் கொள்ள,
இத்தனை உயிரைக் காத்து நின்று
மனிதனுக்கும்  உணவாகும்
சாய்ந்தும் வாழும் முருங்கை மரம்!

என்னால் எதற்கு என்ன பயன்
என்பதை எண்ணிப் பார்க்கின்றேன்
சிந்தைக்கெதுவும் தெரியவில்லை 🤗!


Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி