வந்தது வைரஸ்

வந்தது வைரஸ்

வந்தாலும் வந்தது வைரஸ் கிருமி
சொல்லாமல் சொன்னது-
சோம்பேறி மனிதா,
சொல்கிறேன் கேளடா!
அவரவர் வேலையை
அவரவர் செய்யடா!

சொந்தமாய் சமைத்து பாத்திரம் கழுவி,
துணியைத் துவைத்து தேவைக்குத் தேய்த்து, விளையாட்டாய் வீட்டைப்
பெருக்கி முடித்து,
வேலை அனைத்தும் செய்து மகிழு,
செய்து பார்த்தால் தெரிந்துவிடும்
வீட்டு வேலயும் சுளுவென்று!வீட்டின்பின்னே இடமிருந்தால்
வேண்டிய காயைப் பயிர் செய்யலாம்,
பயனுள்ள வேலை அதுவேயடா!
பாடம் சொல்லப்பிறந்து வந்தது
புத்தம் புதிய கரோனா!

அடடா வேலையை நன்றாய் நாமே
ஆடிப்பாடி செய்தாலே அலுப்பென்பது இருக்காதே அறிந்துகொண்டோம் உன்னாலே!
என்று சொல்வது நானில்லை
எல்லா நாட்டின் மனிதரும்தானே!
தனனானானே தன்னானே!


💃🕺🕴️👯👭🦸🧚🤼🏌️🏋️🚵🚴


வீட்டில் வேலை

தோழி ஒருவர் பாத்திரம் கழுவிக் கழுவி கை பொத்துப் போய்விடும் போலிருக்கிறது என்று க்ரூப்பில் குறிப்பிட்டு இருந்தார், கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. சரி 'சிங்கில்' இருக்கும் ஓட்டையை அடைத்து அதில் நிறைய சோப்புத் தண்ணீர் நிரப்பி அதில் பாத்திரங்களை ஊரப் போட்டு விட்டால் சிறிது நேரம் கழித்து சிரமப்படாமல் லேசாகத் தேய்த்துக் கழுவி விடலாம் என்று ஒரு யோசனை சொன்னேன். சரிவருமா இல்லையா தெரியவில்லை.

எங்கள் வீட்டில் நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம் அவரவருக்கு வேண்டியது அவரவர்அமைத்துக் கொள்கிறோம். நால்வருமே 'low carb diet'  என்பதால் பெரும்பாலும் முட்டை, பால், மற்றும் காய்கறிகள் தான். அரிசியை சேர்ப்பதில்லை பருப்பும் அதிகமில்லை. அதனால் சமையல் மிகவும் சுலபமாக இருக்கிறது. துணியை துவைக்க வாஷிங் மெஷின், அதுவும் பெரிய கஷ்டமாக தெரியவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் துவைக்கிறோம். துவைத்து காயப்போடுவதைவிட மடிப்பதுதான் மிகவும் சிரமமான வேலை, பிடிக்காத வேலைகூட. நான் துணிகளை மடிப்பது போல் எடுத்துக்கொண்டு வந்து என் கணவர் கண்ணில் படும்படி போட்டு விட்டுப் போய் விடுவேன். சிறிது நேரம் கழித்து ஏதோ ஞாபகத்தில் அழகாக மடித்து வைத்து விடுவார்.நல்ல மூடில் இருக்கும்போது வெளிப்படையாக கேட்கலாம்... இல்லாதபோது இதுதான் வழி.

அடைப்பு நாட்கள் எனக்கு ஒரு எதிர்பாராத சிறிய விடுமுறை போலதான் படுகிறது, சில விஷயங்கள் தவிர....... நமக்கு வேண்டியது சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் பொழுது கிடைக்காது, ஓட்டலில் போய் (மிகவும் பிடித்த வேலை) உணவு உண்ண முடியாது போன்றவை..... ஒரு வகையில் அதுவும் ஒரு நல்லதுதான் என்று நினைக்கிறேன்.

இரண்டு வேளையும் பால் வந்துவிடுகிறது, காய்கறிகள் நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு வகையில் கிடைத்துவிடுகின்றன. ஆகையால் நன்றாகவே சமாளித்துக் கொண்டு இருக்கிறோம். வலையின்துணைகொண்டு திரைப்படம் நிறைய பார்த்துக்கொள்கிறோம்.
சில நேரங்களில் குற்ற உணர்வாக இருக்கிறது சும்மா அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று......

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி