யானையின் நாகரிகம்

யானையின்
நாகரிகம்

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

காடு விட்டு காடு செல்லும் கரியதொரு யானைக்கூட்டம் பயிர் விளையும் பூமி வழியே பாங்காக நடந்து செல்லும் கண்ணுக்கினிய காட்சிதனை
கண்டேன் நானும், வாட்ஸ்அப் குழுமமொன்றிலே!

வேடிக்கை பார்க்க வந்த
வாடிக்கை கூட்டம்,
அமைதியாகப் இருந்திருந்தால்,
ஆறறிவென்று கூற அடையாளம் வந்திருக்கும்!
யானைக்கூட்டம் நிம்மதியாய் வாழுமிடம் போயிருக்கும்!

அமைதியாக நடந்து செல்லும் அழகான கூட்டமொன்று.....
தொண்டை கிழியக் கத்திக்கொண்டு,
கையும் காலும் ஆட்டிக்கொள்ளும்
அநாகரிகக் கூட்டமொன்று....
அறிவு யாருக்கைந்திங்கே
யாருக்குண்டு ஆறறிவு?
🤔😀

நாகரிகம் அறியாத
மனிதர் வாழும் பூமியிலே  பிறந்து விட்ட பாவத்தை செய்த யானை கூட்டம்
அந்தோ பாவம் பரிதாபம்!
நடந்து செல்ல நிம்மதியில்லை
நித்திய தொல்லை மனிதராலே!

🐘🌍🐘🌎🐘🌏🐘🌏🐘🌏

யானையைப் பற்றி படிக்கும் பொழுதெல்லாம் எனக்கு நம்மைவிட உயர்ந்த அறிவு மிகுந்த நாகரிகமடைந்த ஒரு விலங்கினைப் பற்றி படிப்பது போல உணர்வு ஏற்படும். குறிப்பாக இந்தக் காணொளியில் யானைகள்  ஒரு இரண்டு மூன்று முறை   சத்தம் போடும் மனிதர்களைத் திரும்பிப் பார்த்தன....  ஆனால் தாக்க வரவில்லை.
விஷயத்தைப்  பெரிதாக்காமல் திரும்பவும் தங்கள் பயணத்தை தொடர்ந்தன.
அந்த யானைகளின் விவேகமும், நாகரீகமான நடத்தையும் ஆச்சரியமாக இருந்தது.

பல நேரங்களில் விலங்குகளின் இந்த நடத்தை எனக்கு அளவில்லாத ஆச்சரியத்தைக் கொடுக்கிறது என்பதே ஒரு அகங்காரம்தான். எதற்கு ஆச்சரியப்பட வேண்டும்!? அவர்களது இயல்பு நாகரீகமாக நடந்து கொள்வது தான்.... நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் மனிதராகிய நாம் தான் நாகரிகமானவர்கள் என்று, அப்படி அல்ல என்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.

ஆப்பிரிக்க நாட்டில் ஒரு பெரிய முரட்டுத்தனமான யானைக்கூட்டம்.... அதைக் காப்பாற்றி பல வருடங்களாக தன்னுடைய காட்டில் பேணி  வந்த மனிதர் இறந்துவிட்டார். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்தக் காட்டில் வெகு தூரத்தில் இருந்து யானைகளுக்கு அவர் இறந்தது எப்படி தெரியும் என்பது அதிசயம்தான். அத்தனை யானைகளும் பல  மைல்கள் நடந்து வந்து அவர் வீட்டைச் சுற்றி இரண்டு நாட்கள் உணவில்லாமல் இருந்து, இறந்தவருக்கு மரியாதை செலுத்திவிட்டு சென்றன என்று படித்தேன். இதைவிட ஒரு உயர்ந்த நாகரிகத்தை நாம் எங்காவது பார்க்க முடியுமா?

👇🏼
https://youtu.be/K7mli4LnN0s







Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி