கோடை குளிர் பானம்

கோடை குளிர் பானம்

கரோனா வந்ததிங்கு படைகொண்டு தாக்க
கைதியாய் ஜெயிலுக்குள் அனுப்பியது நமையெலாம்,
ஆயிற்று திங்களொன்று உள்ளுக்குள் நாம் சென்று,
கிடைப்பதைத் தின்று விட்டுக்
களிப்புடன் இருக்கிறோம்!😀

கோடை காலம் ☀️  வந்திங்கு நாட்கள் பல ஆகியும்
தொடவில்லை நாம் யாரும்
கோலாவும் பெப்ஸியும்,🥤
செயற்கையாய் செய்துவந்த
இன்னும் பல பானமும்!
குளிர்பானம் இல்லாமல்
குறையொன்றும் காணவில்லை
சிறை வாழ்க்கையதிலேயும்....

கோடையிலும் தொடாத குளிர்பானம் கோலாவை
கரோனா போனாலும் 
கைதொடுதல் வேண்டாம்!
நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லதாம் அதுவே,
உடலுக்கும் உயிர் காக்கும் நன்மையும் அதுவே!
மண்ணிலுள்ள  நீரையெல்லாம் உறிஞ்சியெடுத்து,
மட்டில்லா சர்க்கரையை அதில் கலந்து, 
குடியெனக் கொடுத்துவிடும்  குளிர்பானம்,
இலவசமாய் வந்தாலும் 
இங்கேயது வேண்டாம்!

🥤🥥 🥤🥥🥤🥥🥤🥥🥤🥥

செயற்கைக் குளிர்பானங்கள்

நான் பள்ளியில் படித்த காலத்தில் பான்டா என்றோரு குளிர்பானம் இருந்து.   ஆரஞ்சு வண்ணத்தில் சிறிய பாட்டிலில் பார்க்க அழகாக இருக்கும், குடிக்கவும் நன்றாக இருக்கும். பின்னர் சில வருடங்கள் கழித்து அது இல்லை.
நம் ஊரில் தயாராகும் பானம் ஒன்று வந்திருந்தது. எனக்கு பல நாட்கள் ஒரு ஏக்கம் இருந்தது, அந்தக் காலத்தில் அவ்வளவு ருசியான வெளிநாட்டு பானம் எல்லாம் எவ்வளவு சல்லிசாக கிடைத்தது, இப்பொழுது இல்லையே என்று......
பிறகு பல வருடங்கள் கழித்து திடீரென்று போன பான்டா திரும்பி வந்தது!
இருந்தாலும் அந்த பழைய வண்ணமும் சுவையும் இல்லை என்பது என் எண்ணம். அதுவும் போக பல விதமான பானங்கள் வந்துவிட்டன இன்று ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு.... செயற்கை பானம் என்றும், பழரச பானம் என்றும்,   தாகத்திற்கு ஒரு பானம், வெயிலுக்கு ஒரு பானம், உடல் சக்திக்கு ஒரு பானம் என்று...,...கணக்கிலடங்கா!

இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை என்பது என் கருத்து, வெளிநாட்டுப் பானம் என்றாலும் சரி, நம்ம ஊர் பானம் என்றாலும் சரி..... காரணம் அவற்றில் கலந்துள்ள அளவில்லாத சர்க்கரையும் செயற்கையான வண்ணங்கள் மற்றும் ஏனைய பிற பொருட்களும். கோலாவை வெயில் தாங்காமல் சிறிது அதிகமாக நான் என்றாவது குடித்துவிட்டால் பல்லெல்லாம் கூச்சமெடுத்து, வாய்க்குள் எரிவது போல்  இருப்பதை கவனித்திருக்கிறேன்.
அந்த நாள் முழுவதும் எனக்கு கொஞ்சம் உடம்பு சங்கடமாகவே இருக்கும், என்ன என்று சரியாகக் கூற இயலாது.
அதிலிருந்து நான் அதை குடிக்கும் அளவைக் குறைத்து வந்து தற்சமயம் சுத்தமாக விட்டு விட்டேன்.... எல்லாமே பட்டால் தான் தெரிகிறது.
🙄

இதிலொரு விஷயம் பல படங்கள் இப்பொழுது வெளிநாட்டு கம்பெனிகள் செய்யும் மோசடிகளையும், விவசாயத்தை அழிக்கும் விதமாக செய்யும் மோசடி, போன்றவைகளை படம் பிடித்துக் காட்டுவது போல் திரைப்படம் தயாரித்து வெளியிடுகிறார்கள்.
ஆனால் அவர்களே பல வருடங்களுக்கு முன்பு இந்த வெளிநாட்டு பானங்களுக்கு நிறைய விளம்பரங்கள் கொடுத்து இருக்கிறார்கள்.

இப்பொழுது  சமூக அக்கறையோடு படம் தயாரிப்பவர்கள் இந்த செயற்கை பானங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? 
அன்று விளம்பரங்களில் அவர்களே கூறியது போல் இந்த வெயிலில் தினமும் அதைக் குடிக்கிறார்களா, இல்லை கெடுதல் என்று தவிர்க்கிறார்களா?🤔
நடிப்பவர்களுக்கு உடம்புதான் முதலீடு, ஆரோக்கியம் மிக முக்கியம்.
இந்தக் குளிர்பானங்கள் மற்றும் படங்களில் அவர்கள் கணக்கில்லாமல் குடிக்கும் இன்னபிற பானங்களை வீட்டில் கணக்கில்லாமல் குடிக்கிறார்களா?அல்லது நடிப்போடு சரியா?😯


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி