புயலின் பின்னே

புயலின் பின்னே

ஆட்டம் ஆடாமல் ஓட்டம் ஓடாமல்
அதிவேகப் புயலிலே
நின்ற இடத்தில் நிற்கிறோம்!
நின்றால் பரவாயில்லை,
நிந்தனை செய்யாமல்
நல்லவை நடக்குமென்று சிந்தனை செய்திடுவோம்...

நல்லவை என்றால் என்னவை என்று
என் மனம் சொல்லுவதை
நான் இங்கு வைக்கின்றேன்,
மாற்றுக்கருத்திருந்தால்
மறக்காமல் கூறுங்கள்.....

இன்றுவரை நல்லதென்றால், மனிதனுக்கு நல்லதை,
மட்டும் நாம் சிந்தித்தோம். மிருகத்தைக் கொன்றோம்,
மருந்தினை ஆராய்ந்தோம்
மிருகத்தின் மேனியிலே
முடிந்தவரை நீட்டினோம்
மனிதனின் ஆயுளை!
நீண்டநாள் வாழ்ந்திடும நம்மால் பயனிந்த பூமிக்கு என்னவென்று
எண்ணவில்லை நாமெல்லாம்?
இன்று வந்த கரோனா ஸ்தம்பிக்க வைத்தது மனிதனின் வாழ்க்கையை, உலகெல்லாம் நாடெல்லாம்...

ஒருநாள் ஓய்ந்திடும்
கரோனாப் புயல் 
ஓய்ந்தபின் வந்திடும் புதியதோர் உலகம்!
புதியதோர் உலகில்,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி
அளவாக நாம் நுகர்ந்து
அனைத்துயிர் காக்க
ஆறறிவு மனிதர் நாம்
அழகாக முடிவெடுத்தால் நமக்குமது நன்மையே!

ஒருவேளை இச்செயலை முன்பே நாம் செய்திருந்தால்  கரோனா என்னும் புயல்
மையமே கொள்ளாமல்
மனிதனைத் தொடாமல்
மறைந்தே இருக்குமோ?



🦇🐍🐖🐁🦉🦅🐬🦀🦐🐛🌊🌴🌳

கரோனா சிந்தனைகள்

கடந்த சில வாரங்களாக எங்கள் வீட்டில் உணவுப் பழக்கங்கள் மிகவும் மாறிவிட்டன.
நாங்கள் அனைவரும் low carb எனப்படும் மாவுப் பொருள் குறைந்த உணவுதான்  எடுத்துக் கொள்கிறோம்.
ஆகையால் அரிசி மற்றும் பருப்பு களுக்கு வேலையே இல்லை. முக்கியமாக பால், காய்கறிகள்,மற்றும் முட்டை எடுத்துக் கொள்கிறோம்.
சில மாதங்களாக முட்டை நான் தவிர்த்து வந்தேன்.
இந்த low carb dietஇல் வேறென்ன எடுப்பது என்று அறியாமல் முட்டை எடுக்கிறேன்.

அதில் இந்தப் பதினைந்து நாட்களாக இன்னும் சில மாற்றங்கள்....
பொதுவாகக் காய்கறி வெட்டும் போது  நான்,
கொஞ்சம் நிறைய  வெளியே வீசி விடுவேன்.
இப்போதெல்லும் எதையும் கழிப்பதில்லை..மிக ஜாக்கிரதையாக பயன்படுத்துகிறேன்.
வெங்காயம் பல நேரங்களில் ஒன்று மட்டும் பயன்படுத்துகிறேன்.
உணவு கிடைப்பது எவ்வளவு அருமையான விஷயம் என்பது உரைக்கிறது!

இதுவரை நான்/நாம் செய்து வந்த பல காரியங்கள் தேவையற்றவையாகவும்
மேம்போக்கானவையாகவும்
படுகின்றன.பலரின் உயிரைக்காவு வாங்கும் கரோனா, நம்மை விட்டு வைத்தால், வரும்காலத்தில் நம்வாழ்க்கை முறையைக் கொஞ்சம் மாற்றி அமைக்கலாமா என்ற எண்ணம் வருகிறது.
பூமியிலிருந்து அளவுக்கு மேலாக நுகர்ந்து கொண்டே இருக்கும் நாம் நம் தேவைகளை குறைத்துக் கொண்டு பூமியை வளமாக வாழ விடு வழிவகுத்தால் நன்றாக இருக்குமோ?

இந்த அடைப்புக்காலம் முடிவடைவதற்குள் பூமியின் சுற்றுப்புற சூழல் மாசு மிகவும் குறைய வாய்ப்பிருக்கிறது இது ஒரு மகிழ்ச்சிகரமான விஷயமே.
நாமிந்த ஒரு மாத காலமாக எவையவை எல்லாம் இல்லாமல் வாழப் பழகினோமோ அப்படியே எதிர்காலத்திலும் வாழ்ந்தால் தவறில்லை.... பார்க்கப் போனால் மிகவும் நன்மையோ?

என்னுடைய டாக்டர்  தோழி தன் முகநூல் பக்கத்தில்  செய்த பதிவில், வெறிச்சோடிக்கிடக்கும் மருத்துவமனைகளை பற்றி குறிப்பிட்டு இருந்தார். நோயாளிகள் அனைவரும் எங்கே போய்விட்டனர்? இல்லத்தில் நன்றாகத்தான் இருப்பார்கள் போலும்! சாதாரண சளி காய்ச்சல்,இலேசான முழங்கால் வலி மூட்டு வலி எல்லாம் மருத்துவமனை போகாமல், விட்டால் சிறிது நாட்களில் தானே குறைந்துவிடும் என்ற பேருண்மை புலப்பட்டு இருக்கிறது, அதுவும் நல்லதற்கே என்று குறிப்பிட்டிருந்தார், இந்த விஷயம் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது......


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி