Posts

புகைபோக்கி

Image
 புகைப்போக்கி             சமையற்கட்டில் வேலை செய்தால்         சுற்றிச்சூழும் புகை நிறைய..           அடைத்துவைத்த கூரை வழியே           எப்படிச் செல்லும்  கரும்புகை வெளியே?                 அந்தக் கால வீட்டில்      இருந்தது         அருமையான       புகை போக்கி!            அடுப்பை எரித்தால் எரியும்           புகையும்  தாளிதம் செய்தால்      கிளம்பும்           புகைச்சலும் வெளியே செல்லத் தடம் தேவை!          காற்றும் ஒளியும் வீட்டின் உள்ளே           வந்துபோகத் தடம் தேவை!          பாதை மட்டும் விட்டால் போதும்,           உள்ளும் வெளியும் செல்லும் வேலை         ...

நின்னு போன நெஞ்சு

 நின்னுபோன நெஞ்சு சில நாட்களுக்கு முன் என்னைப் போன்ற ஒரு பெண்மணி கூறிய விஷயங்கள்: ஏனுங்கோவ்.. எனக்கு ஒரு சந்தேகமுங்க... இந்தக் கம்ப்யூட்டர் வந்ததனாலே,  காயதம் யூஸ் பண்றதல்லாங் கொறைஞ்சு போச்சுன்னு சனம் பேசுதுங்க? ஆனாலுங்க எனக்கென்னமோ, இப்ப எச்சாத்தே யூஸ் பண்ணறாப்பல இருக்குதுங்க. அன்னிக்கொருநாளு பேங்கில போய்யுங்க, ஆடிட்டரு கேட்டாருன்னு ஸ்டேட்டுமென்டு வாங்கீட்டு வல்லாமுன்னு போனமுங்க! அங்க அவிய அதைய எடுத்துக் குடுத்ததப் பாத்து ஒரு நிமிசொ என்ற நெஞ்சு நின்னுறுச்சுங்க! . ஒரு கொயரு பேப்பரு....அதுமு நல்ல அகலமுங்க....கத்த கத்தயா மிசினிலிருந்து உளுகுது! அட ஆமாங்கனே கத்த கத்தயாத்தே......  என்ற ஒரு ஆளுக்கு...... அதும்மு பேங்கில கணக்கு வளக்கெல்லாம் பெருசா எதுமில்லாத ஆளுக்கு குடுக்கிற பேப்பரூ.......அதுக்கு எத்தனை மரம்போச்சுன்னு தெரிலீங்க! ஏனுங்க.....! இந்த பாங்கில அச்சடிக்கிற மிசினோட ஸாப்ட்டுவேரே மாத்தி....ஒரு ரண்டு பேப்பர்ல குடுக்கறாப்பல பண்ண முடியாதுங்களா? அதென்ன அவ்வளவு கஸ்டமா? 'சுற்றுப்புறச்சூளலு சுற்றுப்புறச்சூளலு'ன்னு  ஊரெல்லாஞ்சனம் பேசுது.... பாங்கி இன்சார்ச்சோட காதுல உளுகில...

கலாச்சாரமிது...

கலாச்சாரமிது... பல வருடங்களுக்கு முன்பு  நான் விடாமல் வாரப் பத்திரிக்கைகள் நிறைய படித்துக் கொண்டிருந்த காலத்தில்....எந்தப் பத்திரிக்கை என்று ஞாபகம் இல்லை, ஏதோ ஒன்றில் ஒருவர்  அமெரிக்கா  போன்ற மேலை நாடுகளுக்குச் சென்று பார்த்தபோது அங்கு வசிக்கும் தமிழர்கள் நமது  பண்பாட்டையும் கலாச்சாரத்தையும், விடாமல் பாதுகாக்கின்றனர், எல்லா தமிழ் பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர், பட்டுப்பாவாடை அணிகிறார்கள் குழந்தைகள், தாவணி கட்டுகிறார்கள், பரத நாட்டியம் ஆடுகிறார்கள், போன்ற பல விஷயங்களை, அவையெல்லாம் இங்கில்லையே என்ற ஒரு ஏக்கத்துடனும், மேலை நாடுகளில் இருக்கின்றன என்றதொரு மகிழ்வுடனும் எழுதியிருந்தார் .... எழுதியவர் பெயரும் ஞாபகம் இல்லை! இந்தச் செய்தி நன்றாக இருப்பது போல்தான் தோன்றியது. பிறகு கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இதில் திருப்திப்பட பெரிதாக எதுவும் இல்லை என்று பட்டது. ஏனென்றால் கலாச்சாரம் என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருக்கும் பழக்கவழக்கங்கள். சில நாட்கள் கழித்து மெதுவாக மாறி, மருவி, திரிந்து அவை அந்த இடத்திலேயே வேறு பழக்கங்களாக மாறும்.... ...

சத்தம்

சத்தம் நாங்கள் முன்பு பெங்களூரில் குடியிருந்த பொழுது அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் இருந்தோம். அந்த நேரத்தில்தான் எங்கள் பாப்பாத்தி நாய்குட்டி எங்களிடம் வந்து சேர்ந்தாள். அவள் வந்தபிறகுதான் நாய்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் பற்றி ஒரு அறிமுகம் ஆரம்பமானது. பொதுவாக அவளுக்கு நம்மிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால், தன் பாஷையில் அவள் சொல்வது, நமக்கு 'வள் வள், லொள் லொள்' என்று காதில் விழும். சும்மா இருக்கும் பொழுது தேவையில்லாமல் கத்த மாட்டாள்.... நம்மிடம் ஏதாவது கூற விரும்பினால்தான் கத்துவாள். உதாரணத்திற்கு ஒரு பந்து வீசினால் ஓடி அதை பிடிப்பாள், பிறகு நாம் அந்த பந்தை மீண்டும் வீசாமல் இருந்தால் நம்மைப் பார்த்துக் கத்துவாள். அதாவது 'பந்தை வீசு' என்று அர்த்தம் என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும். உணவு வேண்டுமென்பதற்கு ஒரு வகை சத்தம், 'மணி பத்தாயிற்று இன்னும் படுக்காமல் என்ன செய்கிறீர்கள்' என்றுநம்மை மிரட்டுவதற்கு ஒருவகை சத்தம்,நாங்கள்  வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது நானும் உடன் வருகிறேன் என்று கெஞ்சுவதற்கு ஒரு வகை சத்தம் என்று பலவகை குரல்கள் இருந்தன பாப்...

பழங்கதை

பழங்கதை🏌️ சிறுவயதில் நாங்கள் பள்ளி விடுமுறையின் போது, எப்பொழுதுமே அத்தையின் ஊருக்குத்தான் செல்வோம்.  அங்கு எங்கள் வயதையொத்த பெண்கள் நாங்கள் மொத்தம் ஐந்து பேர்  இருப்போம். நான் என் தங்கை மற்றும் என் 'கசின்ஸ்' மூவரும் சேர்ந்து கழித்த விடுமுறை எல்லாம் பசுமையான ஞாபகங்கள். வெளியூர் செல்வது அல்லது வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற புதுமைகள்  இருக்காது,  வீட்டில்தான் இருப்போம் ஒரு ஒன்றரை மாதம் போல். இருந்தாலும் அவை அருமையான விடுமுறைகள்.   காரணம் மாறுதலான கிராமத்துச் சூழலும், உடன் உரையாட, சண்டை போட, சேர்ந்துகொள்ள சமவயதுத்தோழிகளான 'கஸின்ஸும்'..... எங்களுக்குள் பல பிரிவினைகள் வரும், ஒவ்வொரு விடுமுறைக்கும் ஜோடிகள் மாறிவிடும், யார் யாருக்கு சாதகமாகப் பேசுவதென்பதில்....ஆனால் பெரும்பாலான சமயங்களில் ஐந்து பேரும் ஒற்றுமையாகத் தான் இருப்போம். வீட்டு வேலை செய்வதில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம். ஊர்க் கதைகளை பேசிக் கொண்டே வீட்டுக்கும் தோட்டத்துக்கும் தினமும் இரண்டு முறையாவது நடந்து சென்று வருவோம்....... குறிப்பாக கிணற்று மேட்டுக்கு சென்று  துணிகளைத் துவைத்து அலசி வர இரண்...

வாழ்வும் வளமும்

வாழ்வும்           வளமும் மனிதன் என்ற உருவினிலே மண்ணில் வந்து பிறந்தாலே, வளம் பெற வேண்டும் வாழ்வில்,  பொருள் வளம் பெற  வேண்டும்  வாழ்வில், என்னும் எண்ணம் எப்பொழுதும்  ஏந்திய வாறு இருக்கின்றோம்! தவறும் அதிலே ஏதுமில்லை, வசதியான வாழ்க்கையிங்கு வாழ நினைப்பது தவறில்லை! அதற்குத்தேவை பணமும் பொருளும்! பிறக்கும் குழந்தை பிறந்தது முதல்  பணத்தை மட்டும் மனதில் கொண்டு  தொழிலை செய்யடா மகனே நீயும், வளத்தை மட்டும் வாழ்வென கொண்டு வளர்ந்திடு கண்ணே மகளே நீயும்! என்ற குறிக்கோளில்லாமல், செய்யும் தொழிலை செப்புடன் செய், நாணயத்துடனே நலமாய் செய், என்ற எண்ணம் மனதில் வளர்த்தால்...  செய்யும் தொழில் எதுவென்றாலும்,  என்றும் நன்றாய் அதுவும் விளங்கும்... வளமும் நலமும் தானே வந்து,  போகிற போக்கில் இயல்பாயிங்கு, வேண்டிய அளவு சேர்ந்துவிடும! அத்துடன் நிம்மதி நிலையாய் சேரும்! தவறுகள் எல்லாம் தானே, திருத்தம் கொண்டு தெளியக்கூடும், பேராசைத் தவறுகள் எல்லாம் தானே, திருத்தம் கொண்டு தெளியக்கூடும்! செய்யும் தொழிலும், சேரும் பணமும் அதுவே என்றாலும், மனதில் வைத...

கேள்வி கேட்கலாமா?

கேள்வி     கேட்கலாமா? வழக்கம் என்று வந்த பழக்கங்கள் பலவற்றை,  ஏனென்று கேள்வி, கேட்பதில் தவறில்லை. கேள்விகள் கேட்காமல் இருப்பதும் இயல்பில்லை, கேட்காத கேள்விக்கு பதிலென்பது  என்றுமில்லை! கேட்கும் கேள்விக்கு கிடைக்கலாம் பதிலன்றே, கிடைக்காமலும் போகலாம் பதிலென்ற பேருண்மை! நீண்ட நாள் கழித்து  நம்முன் நிற்கலாம்  சட்டென்று பதில் வந்து  சிரித்தவாறு முகம் மலர்ந்து! மனதிலே முதலில்  மலரும் கேள்விகள், மலருமுன் முடங்கலாம்,  இன்றுவரை வந்துவிட்ட முடக்கிடும் பழக்கத்தால். முடக்காமல் கேள்வியை மலர விடு மனமே,  மலர்ந்தால் தான் வந்திடும் கேள்விகள் வெளியே! பிறந்த நாள் முதலாய் கேள்வி கேட்ட குழந்தாய்!   பதிலொன்று வந்தது- 'கேட்காதே கேள்வியிங்கு, வழக்கத்தை மாற்றாமல்  என்றும் போல் செய்யென்று!' கேள்வியை முடக்கிடும் பழக்கம் வந்தது,  உலகத்தின் இந்த வழக்கத்தால்தானே!? இளமையும் இனிமையும் இணைந்திட்ட அன்னையும் அன்பும் அறிவும் அடர்ந்திட்ட தந்தையும், கேட்கட்டும் குழந்தைகள் கேள்விகளை நம்மிடம்.... தெரியாத பதிலுக்கு- தெரியாதென்றிடலாம்  வீரமாகக் குழந்தையி...

காபியும் தயிர்சோறும்

காபியும் தயிர்சோறும் என் அத்தை மகள் முத்தூரில் வசிக்கிறாள். பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் அடிக்கடி பார்த்துக் கொண்ட சமயங்களில், அவள் வீட்டுத் தயிர் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். கரண்டியால் எடுக்கமுடியாது, கத்தியால் வெட்டித்தான் உண்ண வேண்டும் என்று கூறுமளவிற்கு கெட்டியாக இருக்கும்! அப்பொழுதெல்லாம் அவர்கள் வீட்டில் முக்கால்வாசி எருமைப்பால் தயிர் தான். இன்று அவரவருக்கு பேரன் பேத்திகள் வந்தபிறகு, ஒருவரையருவர் பார்த்துக் கொள்வது குறைந்துவிட்டது, ஏதோ திருமண விழாக்களில் சந்தித்தால் உரையாடிக் கொள்வோம். பொதுவாக என் சுற்றுவட்டாரங்களில் என்னுடைய ஃபில்டர்காபி பிரசித்தம்.... நல்ல அடர்த்தியாக டிகாக்ஷனை  வடிகட்டி, கறந்த பாலை பொங்கக் காய்ச்சி, பொங்கி வரும்போது அதில் டிகாக்ஷனைக் கலந்து, தேவையான அளவு சர்க்கரை (எனக்கு கொஞ்சம் அதிகமாக) போட்டு சுடச்சுடக் குடித்தால் உலகத்தில் உள்ள பரம சுகங்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து மட்டுமல்ல..... இன்னொரு விஷயம் என்னவென்றால் காப்பி, டீ இரண்டும் எனக்கு கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும். தம்ளர், அல்லது பீங்கான் கப் எதுவாயிருந்தாலும், ஓரங்களில் எல்லாம் தெரி...

இயல்பு மாறலாமா

இயல்பு மாறலாமா? இயற்கை கொடுத்த இயல்பினிலே,  சிரித்துப் பேசும் தன்மையிலே பேசா மடந்தை அமைதியிலே, முந்தித் தள்ளும் வேகத்திலே பிந்தி நிற்கும் பொறுமையிலே, ஒருவருக்கொருவர் மாறிடும் குணங்கள் நிறைந்த பேரிடர்(😜) மனிதர் என்ற மானிடர்! கூடப்பிறந்த குணத்தை மாற்றுவதென்பது எங்கனம்?  மாற்ற முயன்றால் வந்திடும் சுதந்திரம் இல்லா சூழலிலே, இயற்கை மாறிய பேச்சிலும் இயல்பில்லா நடத்தையிலும், சிறு இறுக்கம் பிறக்கும் மனதினிலே.... இறுகிய மனதில் இயைந்த இல்லம் இனிதாய் இருப்பது இயலாது! கையது ஒன்றே என்றாலும் விரல்கள் எல்லாம் வேறாகும் குட்டைவிரலை நீளமாக  நீளும் விரலை குட்டையாக மாற்றுவதென்பது எங்கனம்?  தாயும் சேயும் ஆனாலும்  கணவன் மனைவி என்றாலும்  தமையன் தம்பி  தமக்கை தங்கை யாராயிருந்தபோதிலும், உடன் பிறந்த குணம், அதை  மாற்றச் சொல்லா மனம்,  அதுவே வாழ்வில் சுகம்! குடும்பம் நான் பொதுவாக ஜாஸ்தி பேசும் இயல்பு உடையவள் அல்ல. சோசியல் டைப் என்று கூற முடியாது, பிரெண்ட்லி டைப் என்றும் கூறமுடியாது. கொஞ்சம் 'அன்சோசியல் மற்றும் அன் பிரெண்ட்லி' என்று சொல்லலாம். அடிக்கடி என் தாய் கூறுவார் இ...

வௌவால்

 வௌவால் பூச்சி புழுவைத் தினமும் தின்று  பயிரைக் காப்பது மட்டுமன்று, மகரந்தமும் கூடச் சேர்த்து மரமும் செடியும் வளர்க்கும் சிநேகன், உழவருக்கு உற்ற தோழன், கொசுவை உண்ணும் கரிய நண்பன், இயற்கை கொடுத்த இரவுப்பறவை, பாலூட்டியாம் அழகுப் பறவை    வவ்வால் என்ற சின்னப்பறவை! வவ்வால்பறவை கடித்துவிடும்,   வந்துசேரும் நோய்நொடிகள், அருகில்கூட செல்லாதே அப்புறப்படுத்து அதன் வீட்டை, என்ற எண்ணம் குறுகியது, குதிரை கண்ணை அடைத்தது போல! ஓடும் விலங்கு பறக்கும் பறவை  ஊறும் பிராணி நீந்தும் மீன்கள் அனைத்தும் தேவை இவ்வுலகில்! அழித்துவிட்டால் நாமும் இல்லை! நாமே நம்மை உணர்வதென்றோ  நல்ல நாளும் அன்றே அன்றோ? வேண்டாமரமா?!  ----------------------- கடந்த 20 வருடங்களாக எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அல்லது சில நேரம் நானே வாய்ப்பை உண்டாக்கிக் கொண்டு மரக்கன்றுகளை வாங்கி, கிடைத்த இடத்தில் எல்லாம் நட்டு, முடிந்தவரை அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் செய்கிறேன். அவை அனைத்துமே நன்றாய் வளர்ந்ததாகக் கூற முடியாது. சிலது வந்தன, சிலது வந்து அழிந்துவிட்டன, சிலது வராமலே அழிந்துவிட்டன....

குளவி

குளவி கடிக்கும் குளவி  அறிவோம் நாம் காக்கும் குளவி அறிவோமா! இலையும் பயிரும் உணவாக இருக்கும் புழுவும் பூச்சியும், தானே உணவாயாகிவிடும் குளவியின் சின்னக் குஞ்சுக்கு! புழுவை கூட்டில் அடைத்து அதனுள்ளே முட்டை வைத்து கூட்டை இழுத்து மூடிவிடும் குளவிக்குஞ்சின்  தாய்க்குளவி! பொரித்து வரும் குளவிக் குஞ்சு வளரும் தானே புழுவைத் தின்று! நாம் குளவியைக் கண்ணால் கண்டதும் எதிரி என்றொரு எண்ணம்  மனதில் ஒருகணம் மின்னும்!  உண்மை அதிலே உளதாவென்று உணர்ந்து சிந்தனை செய்யலாம், பேச்சு வழக்கில் வருவதெல்லாம்  பொய்யா, மெய்யா அறியலாம்!   பறந்து வரும் குளவி சிறுவயது முதல் வீட்டில், மற்றும் விடுமுறைக்குச் செல்லும் கிராமங்களில், பெரியவர்கள் அனைவரும் குழந்தைகளிடம் 'சிர்ர்ர்' என்ற என்று மெல்லிய ஓசையுடன் பறந்து சுற்றும் குளவியைப் பார்த்தால் உடனே  'குளவி! ஜாக்கிரதை,  கடித்துவிடும் தூரப்போ!' என்று கூறுவதை பலமுறை கேட்டிருக்கிறேன். ஆகையால் குளவி என்றாலே சிறியதொரு அச்சமும்,அது நம்  எதிரி, என்ற ஒரு எண்ணமும் என் மனதில் லேசாக  இருந்தது..... பலரின் மனதில் அப்படி இருக்கக்கூடும் என்று...

சின்னஞ்சிறு சமூகம்

சின்னஞ்சிறு சமூகம் குளித்து முடித்து அறையைக் கழுவ, கண்ணில் பட்டது சுவற்றுள் நகரம், நகரின் வாயில் சுவரின் ஓட்டை, வாயில் வழியே  வெளியே வந்தது, சின்னஞ்சிறிய  எறும்பு கூட்டம்.. தரையில் கிடந்தது பூச்சியின் உடலது  எடுத்துச் சென்றது  எறும்புக் கூட்டம்! வாயில் சிறியது பூச்சி பெரியது ! பாவம் எறும்பெனப் பரிதாபப்பட்டேன். ஆனால் எறும்புகள்  அசரவில்லை, பூச்சியைப் பார்த்து  பதறவில்லை, சுற்றி வளைத்தன  பூச்சியினுடலை, திருப்பி விட்டன  'ட' வடிவில், தள்ளியும் இழுத்தும் தாங்கியும் தூக்கியும், கொண்டு சென்றன பூச்சியினுடலை. செய்யும்  செயல் செப்புடன்  முடிந்தது, எறும்புக் கூட்டம் கலைந்து, நகருள் சென்று மறைந்தது. சிந்தனை ஓட்டம் என்னுள்ளே.... பூச்சியினுடலை பார்த்ததும் அதிரவுமில்லை அஞ்சவுமில்லை,  அடுத்த காரியம் என்னென்று அக்கணமே இறங்கிய எறும்புகள்! நூற்றுக்கணக்கில் எறும்பிருந்தும், நூலிழை கூட குழப்பமில்லை, வந்து போன சுவடில்லாமல்  வந்த வேலை முடித்த கூட்டம்! சுவற்றில் நீரை அடித்திருந்தால் சிதைந்திருக்குமே அந்தக்கூட்டம்? ஆரம்பமானது என் பழக்கம் சுவரில் தரையில...

ஆசையும் அகிலமும்

ஆசையும் அகிலமும் அளப்பரிய ஆசை ஆகாய விருப்பம், திரைகடலோடியும் திரவியம் தேடு என்றொரு லட்சியம்  எல்லார் மனதிலும்! தேடி வந்த திரவியம் செய்வதென்ன பார்க்கலாம்! இன்னும் பெரிய வீடு கட்டும் இரண்டிரண்டு கார் வாங்கும், சொந்த ஊரில்  இல்லமென்றும், எந்த ஊர் சென்றாலும்  தங்க சொந்த வீடென்னும்...... கழுத்தொடியும் காசுமாலை கைகொள்ளா வளையலும், காலில் தங்கக் கொலுசும் ஆடி வரும் வேளையில், வைரத்தில் வேலை செய்து ஓடி வரும் ஒட்டியானம்! பட்டுப்பூச்சி வாழ்க்கையை பட்டுப் போகச் செய்துவிட்டு  நெய்து வந்த புடவையைக்  ஒரு வருடம் கட்டி விட்டு, மறுவருடம் பழையதிது புதியதாக வேண்டுமென்னும் அளவில்லா ஆசைகளை நிறைவேற்றும் திரவியம்! இன்று வந்த கணினி நாளை பழையதாகிவிடும், இன்று புதிய கைபேசி கண்டிப்பாய் மாறி விடும்  நாளை மறுநாளிலே! அடுத்த வீதி ஸ்கூட்டரில் கடைவீதிக்கு சின்னக்கார் பக்கத்தூருப் பெரிய கார் தூரச்செல்ல கப்பல் கார்! தன் பிள்ளை திருமணத்தில் தலை வாழை இலை போட்டு பத்தாயிரம் மனிதர் வந்து பாதி உணவு உண்டு விட்டு மீதி உணவு வீச வேண்டும்! சிலநேரம் அந்த மணம் நிலைக்காமல் போனாலோ, மறுமணத்தில் ஆயிரம்பேர் வந்த...

ஒவ்வொன்றும் ஒரு விதம்

வாரிசென்று வந்தது வருடம் ஒன்று வரிசையாக,  நல்லவேளை நின்றது நான்காவது வந்ததுமே. வேளா வேளை தவறாமல் வாய்க்குணவு கிடைத்துவிடும் பெரிதாய்த் தாங்கல் ஏதுமின்றி வளர்ந்துவிட்ட பிள்ளையெலாம் பள்ளி சென்றன உள்ளூரிலே! படிப்பில் ஒன்று படுசுட்டி! பரவாயில்லை இரண்டாவது! மற்ற இரண்டும் எப்படி என்றால்- எழுத்தென்றால் புரியாது, எண்ணென்றால் விளங்காது! ஆனால் நான்கும் சென்றன அன்றாடம் அந்தப் பள்ளிக்கு! படிக்கும் குழந்தை படித்து விடும், ஆடும் குழந்தை ஆட்டமாடும் ஒன்றிரண்டு ஊரைச்சுற்றும் வீட்டுப் பொறுப்பு கை வந்தால் அதிலே நல்ல பேரெடுக்கும். படிப்பேனில்லை பாட்டேனில்லை,  கேள்வி கேட்க ஆளில்லை, குறிக்கோளும் வைப்பதில்லை லட்சியமும் தேவையில்லை, வருகின்ற வாழ்வதனை வந்தவண்ணம் ஏற்கலாம். வளர்ந்துவிட்ட பிள்ளைகளின் வருமானத்தை நோக்கினால், ஒன்றுக்கொன்று வேறுதான்....  குறைவாய் ஈட்டும் குழந்தைக்கு  கூடக் கொடுப்பார் பெற்றோரவர்.... எளிமையான கோட்பாடு! ஏன் இல்லை  என்ற கேள்வி என்றும் இஙகே வந்ததில்லை! இருப்போருக்கு இருக்கட்டும், இல்லாருக்கு நாம் கொடுப்போம்,  இதுவேதான் வாழ்க்கையிங்கு சில காலம் முன்னாலே.... 👩‍?...

வெல்வெட் பூச்சி

வெல்வெட் பூச்சி 🐞🐛 சின்னஞ்சிறு வயது தாண்டி  சிறுமியாக இருந்த காலம், சுற்றிப் படர்ந்த நிலத்திலே மரங்களடர்ந்த பரப்பிலே, பல்லுயிரெங்கும் பெருகி செழித்திருந்த காலத்திலே... மேலிருந்து கீழே வந்து விழுந்து தெறித்த மழையிலே, கீழிருந்து மேல் வந்து நெளிந்து நகரும் புழுக்கள்,  எண்ணிலடங்கா கால்களுடன் எங்கெங்கும் ரயில் பூச்சி, செக்கச் சிவந்த நிறத்தில் நிலமெங்கும்  வெல்வெட் பூச்சி.... உலாப் போக எழுந்து வந்து ஊர்ந்து போன பூச்சிகளை, தீப்பெட்டியில் போட்டெடுத்துப் பிடித்தடைக்கும் விளையாட்டு... பின்னோக்கிப் பார்க்கிறேன் பிழையென்று உணர்கிறேன்! தீப்பெட்டி திறந்தவுடன் சின்னஞ்சிறு காலெடுத்துத் தப்பித்தோட எத்தனித்த செக்கச்சிவந்த பூச்சியே, என்றும் நீ என்னையே மன்னிக்க மாட்டாயே... வாயில்லா ஜீவனதை வதைக்காதே என்று,  யாரேனும் கூறி இருந்தால் கண்டிப்பாய் சிந்தித்து  மாறியிருப்பேன் மனதளவில்! 🐝🦟🦗🐜🐛🦋🐞🦂🕷️🕸️🐌 சிறுவர் விளையாட்டு என்னுடைய குழந்தை மற்றும் சிறுவயது பருவத்தில், காலப்பருவங்களுக்கு ஏற்ப விளையாட்டுக்கள் மாறும். எப்போதும் இருக்கும் ஸ்கிப்பிங்குடன்,  காற்று காலத்தில் பட்டம் ...

பழுது பார்த்தல்

பழுது பார்த்தல்🔨🔧 காரின் கதவு நசுங்கிப் போனால்  'டிங்கர்' என்று செய்வார்கள், அன்றைய காலத்தில்! இன்னொரு கதவை வாங்கி மாட்டு இருக்கவே இருக்கு காப்பீடு இன்றைய காலத்தில்! ஆடை கொஞ்சம் கிழிந்து விட்டால் தைத்து அணிந்தோம் அன்றைய நாளில்,    இன்று கொஞ்சம் கிழிந்தாலும் எறிந்துவிடு பழந்துணியை புதியதாக வாங்கலாம்! செருப்பின் கதையும் இதுவேதான் கொஞ்சம் பிய்ந்தால் புதிதேதான்! மாவரைத்துத்  துணிதுவைத்து, மிளகரைத்து சாறெடுத்து துணையிருக்கும் இயந்திரம், பழுதானால் பண்ட மாற்றம்! பழுது பார்த்து வேலை செய்தால்  பழையது ஓடும் பல நாட்கள்! பழுதுபார்க்கும் கலையை நீங்கி,  புதிய பொருளை மீண்டும் வாங்கி, வளமை சுருங்கி பூமியது பாலை போல ஆகிவிடும் பேரன் பேத்தி வரும்போது! 🧵🧶✂️📌🧷🥾👢👞🥿🔨🔧 நாங்கள்  ஒரு பதினைந்து வருடம் முன்பு முதன் முதலில் வாங்கிய கார் மாருதி 800. நீல நிறத்தில் பார்வைக்கு கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருக்கும் வண்டி அது. திருமணமான பின் பல வருடங்கள் நான் எவ்வளவு கேட்டும் கார் வாங்காமல் டபாய்த்த என் வீட்டுக்காரர் எங்கள் வீட்டுக்கு பாப்பாத்தி  நாய்க்குட்டி வந்ததும் ஓரிரு மாத...

சுசீலா

https://youtu.be/0xoZ1wctHug குளிர்ச்சியான குரலிலே இனிமை சேர்ந்து சொட்டுதே காதில் வந்து பாயுதே தேன் கலந்த பாடலே! தெலுங்கு பேசும் வாயிலே தெள்ளத் தெளிவு தமிழுமே கணீரென்ற குரலிலே கனிவும் கூட சேருதே! சோகத்திலே அமிழ்ந்திருக்க சுகமாகத் தூக்கிவிடும், களிப்பு வந்து கூத்தாட சமநிலைக்குக் கொண்டுவரும்.. சுற்றிலுள்ள தொல்லையெல்லாம் சற்று தூரம் சென்று விடும், சுசீலாவின் குரலமுதம்  சுமந்து வரும் பாட்டாலே! கண்ணதாசன் வரிகளை விஸ்வநாதன் ராகத்திலே இந்தக் குயில் பாடினால் இன்னலான நேரத்திலும் வீண்கவலை குறையுமே! 📻 🎼🎵🎶🎧📻📷🎼🎶🎵 தேனினும் இனிய.... நான் சிறுவயதில் ரேடியோவில் பாடல் கேட்க ஆரம்பித்தது முதல் இன்று என்னுடைய ஸ்மார்ட்போனில் கேட்கும் பாடல்கள் வரை சுசீலாவின் குரலுடனே தான் வளர்ந்து,வயதாகியிருக்கிறேன். அநேகமாக என் வயதையொத்த அனைவருக்கும் இந்த அனுபவம் தான் இருக்கும்.... அந்தக்காலத்தில் UMS என்ற ஒரு பெரிய ரேடியோ எங்கள் வீட்டில் இருந்தது, கிட்டத்தட்ட அது ஒரு இரண்டு அடி நீளமும் ஒன்றரை அடி உயரம் ஒரு அடி அகலமும் இருக்கும். இரண்டு பெரிய குமிழ்கள்..... அதில் ஒன்றைத் திருப்பினால் ஒலி அதிதமாகும்,  இன்னொ...

டையப்பர் 👶

சாயம் போன ஆத்தா சேலை தாத்தாவோட பழைய வேட்டி, துவைத்துத்  துண்டாய்க் கிழித்து வைத்தால், சின்னச்சின்னப் பயனுண்டு! சிறு மழலை வீட்டினிலே!   சின்னஞ்சிறிய குழந்தைக்கு  படுத்துக்கொள்ள போர்த்திக்கொள்ள, மேலும் கீழும் அணிந்துகொள்ள, துவைத்தால் சுளுவில் காய்ந்துவிட,  நைந்தால் தூக்கிப் போட்டுவிட, காசில்லாமல் கிடைத்திடுமே குழந்தைத் துணிமணிகளிங்கே! கிழிபடாத புடவையிலே தொட்டிலொன்றும் கிடைத்திடும்..! இந்தக் காலக் குழந்தை, அணிவது வேட்டி சேலையல்ல.... மரத்தை வெட்டித் தயாரிக்கும்  டயாப்பர் என்னும் கோமனம்! டயப்பர் அணிந்த தோலும் ஒவ்வாமையில் சிவந்து வீங்க வலியில் குழந்தை அழுது சிவக்க, புண்ணில் நாமும் மருந்தைப் பூச, '👶 இன்றுதானே பிறந்தேன்? பிறந்துமே புண்ணா? இடர்களேதான் வாழ்க்கையா?' இன்றைய உலகின் அழிவுப்பொருளே, கழிவுப்பொருளாம் பெரும் பூதம், வளரவிடாமல் தடுக்க வேண்டும், கண்ணே இன்று நீயும் நானும்! கழிவுப் பொருளில் பெரும்பங்கு, வகிப்பதென்பது டயப்பர் இங்கு! நான்கு பருத்திப் புடவை மற்றும் வெள்ளை வேட்டியில், நினைக்க இயலா நன்மை எல்லாம்  நம்மிடமே வந்துசேரும்... புதிய கோட்பாடேதுமில்லை  பழ...

ஆமைப் பெண்🐢

ஆமைப் பெண்🐢 இயற்கை விஞ்ஞான உலகத்திலே சுமார் முப்பது வருடம் முன்னாலே, cane turtle ஆமையைக் காணவில்லை பல காலம்? இருக்கா  இல்லையா சந்தேகம்! ஆமை பற்றிய எல்லாமே அறிந்து வருவேன் நானேயென்று கேரளநாட்டுப்பயணம் சென்று தனியே போனார் இளம் மங்கை விஜயா என்பதவர் பெயராம்! பழங்குடித் தலைவரைத் தேடிப்பிடித்து, அங்குமிங்கும் அலைந்து திரிந்து, காட்டிலுள்ள குகைக்குள்ளே தன்னந்தனியே பலநாள் இருந்து,  கண்டுபிடித்தார் ஆமையை! கொண்டுவந்தார் ஒன்றிரண்டை, சென்னைப் பாம்பு பண்ணைக்கு. அதிலே சிலது  முட்டையிட்டு மெல்லமெல்லக் குஞ்சு பொரிக்க, எழுபது வருடம் யாருமறியா ஆமைக்குட்டி பழக்க வழக்கம் நேரில் கண்டு பதிவுசெய்தார் விஜயா என்ற ஆமைப்பெண்ணவர்! கொண்டு வந்த ஆமை, சைவம் தான் உண்ணும் என்றிருந்த எண்ணம், மாற்றிக்காட்டும் வண்ணம், புழுவும் பூச்சியும் தின்றது,  நான் அசைவம் என்று சொன்னது,    ஆமையன்று விஜியிடம்! இன்னும் பல பாம்புகள் வேறு சில ஆமைகள், போன்றவற்றைப் பண்ணையில், பரிவுடனே தான் வளர்த்து குணங்களை கண்பார்த்து ஏட்டிலே தான் பதித்தார்! எந்தக் காடென்றாலும், விஜியுடன் சென்றால் கவலையில்லை, எல்லாத்திசையும் அ...