ஆசையும் அகிலமும்

ஆசையும் அகிலமும்

அளப்பரிய ஆசை
ஆகாய விருப்பம்,
திரைகடலோடியும் திரவியம் தேடு என்றொரு லட்சியம் 
எல்லார் மனதிலும்!
தேடி வந்த திரவியம்
செய்வதென்ன பார்க்கலாம்!
இன்னும் பெரிய வீடு கட்டும்
இரண்டிரண்டு கார் வாங்கும்,
சொந்த ஊரில்  இல்லமென்றும்,
எந்த ஊர் சென்றாலும் 
தங்க சொந்த வீடென்னும்......

கழுத்தொடியும் காசுமாலை
கைகொள்ளா வளையலும்,
காலில் தங்கக் கொலுசும்
ஆடி வரும் வேளையில்,
வைரத்தில் வேலை செய்து
ஓடி வரும் ஒட்டியானம்!
பட்டுப்பூச்சி வாழ்க்கையை பட்டுப் போகச் செய்துவிட்டு 
நெய்து வந்த புடவையைக் 
ஒரு வருடம் கட்டி விட்டு,
மறுவருடம் பழையதிது புதியதாக வேண்டுமென்னும்
அளவில்லா ஆசைகளை
நிறைவேற்றும் திரவியம்!

இன்று வந்த கணினி
நாளை பழையதாகிவிடும்,
இன்று புதிய கைபேசி
கண்டிப்பாய் மாறி விடும் 
நாளை மறுநாளிலே!
அடுத்த வீதி ஸ்கூட்டரில்
கடைவீதிக்கு சின்னக்கார்
பக்கத்தூருப் பெரிய கார்
தூரச்செல்ல கப்பல் கார்!

தன் பிள்ளை திருமணத்தில்
தலை வாழை இலை போட்டு பத்தாயிரம் மனிதர் வந்து பாதி உணவு உண்டு விட்டு மீதி உணவு வீச வேண்டும்!
சிலநேரம் அந்த மணம்
நிலைக்காமல் போனாலோ,
மறுமணத்தில் ஆயிரம்பேர் வந்து வாழ்த்து சொல்ல வேண்டும்,
உணவை வீணாக்க வேண்டும்!

சிறுகுழந்தை சின்னக்கைகள்
கொள்ள முடியா பொம்மையும்,
வயது மீறி வாங்கி வரும் விளையாட்டு சாதனம்...
இரண்டு நாளில் இரண்டுமே வாசலுக்குப் போய்விடும்.
 
சிலசாமான் நாம் மறந்து
வாங்காமல் விட்டுவிட்டால்
தொலைகாட்சி விளம்பரம்
தன் கடமை தான் செய்து,
துரத்திடும் நமையன்றே 
தூர உள்ள கடைகளுக்கு!
தேடி வந்த திரவியம்,
தொலைத்திடு விளம்பரத்தில்,
தொலைத்ததைத் தேடிடு 
திரைகடலோடியும்....

இப்படித்தான் இன்றிருக்கு வாழ்வு பெரும் மக்களுக்கு!
இருக்கும் பூமி ஒன்றுதான்!
இந்தச்சுரண்டல் தாங்குமா?
என்றெழுந்து வந்தது
புத்தம்புதிய வைரஸ்!
வீட்டுச் சிறையில் நம்மை வைத்து,
வளமாய் மீண்டும் பூமி மாற
தன்னாலான முயற்சி
தயக்கமின்றி செய்தது,
திருவிளையாடல்தான்
திருவினையாகுமோ?
எதிர்வினையாய்த் திரும்பிடுமோ?
கூறிடு நீயே கரோனா குட்டியே!


🦠🐾🦠🐾🦠🐾🦠🐾🦠🐾

"குட்டி ஆடு தப்பி வந்தா 
குள்ளநரிக்கு சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்
தட்டு கெட்ட மனிதர் கண்ணில் 
பட்டதெல்லாம் சொந்தம்,
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்!"

பட்டுக்கோட்டையார் பாடல்👆

👣👣👣👣👣👣👣👣

பூமியில் இருக்கும் பெரிய வைரஸான மனிதனை அடக்க ஒரு குட்டி வைரஸ்🦠வந்து எப்படியோ இரண்டரை மாதம் அடக்கி விட்டது🙄.
ஒரு சின்ன விடுமுறை பூமிக்கும் மற்ற விலங்கினங்களுக்கும்😀.

🤔ஏதோ ஒரு வேற்றுக் கிரகத்திலிருந்து 👻 நம்மினும் அதிக சக்தி படைத்த ஒரு உயிரினம் வந்து நம்மை எதிர்காலத்தில் அடிமைப்படுத்தினால் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன் 🤨.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி