ஒவ்வொன்றும் ஒரு விதம்
வாரிசென்று வந்தது வருடம் ஒன்று வரிசையாக, நல்லவேளை நின்றது நான்காவது வந்ததுமே. வேளா வேளை தவறாமல் வாய்க்குணவு கிடைத்துவிடும் பெரிதாய்த் தாங்கல் ஏதுமின்றி வளர்ந்துவிட்ட பிள்ளையெலாம் பள்ளி சென்றன உள்ளூரிலே! படிப்பில் ஒன்று படுசுட்டி! பரவாயில்லை இரண்டாவது! மற்ற இரண்டும் எப்படி என்றால்- எழுத்தென்றால் புரியாது, எண்ணென்றால் விளங்காது! ஆனால் நான்கும் சென்றன அன்றாடம் அந்தப் பள்ளிக்கு! படிக்கும் குழந்தை படித்து விடும், ஆடும் குழந்தை ஆட்டமாடும் ஒன்றிரண்டு ஊரைச்சுற்றும் வீட்டுப் பொறுப்பு கை வந்தால் அதிலே நல்ல பேரெடுக்கும். படிப்பேனில்லை பாட்டேனில்லை, கேள்வி கேட்க ஆளில்லை, குறிக்கோளும் வைப்பதில்லை லட்சியமும் தேவையில்லை, வருகின்ற வாழ்வதனை வந்தவண்ணம் ஏற்கலாம். வளர்ந்துவிட்ட பிள்ளைகளின் வருமானத்தை நோக்கினால், ஒன்றுக்கொன்று வேறுதான்.... குறைவாய் ஈட்டும் குழந்தைக்கு கூடக் கொடுப்பார் பெற்றோரவர்.... எளிமையான கோட்பாடு! ஏன் இல்லை என்ற கேள்வி என்றும் இஙகே வந்ததில்லை! இருப்போருக்கு இருக்கட்டும், இல்லாருக்கு நாம் கொடுப்போம், இதுவேதான் வாழ்க்கையிங்கு சில காலம் முன்னாலே.... 👩?...