அறமும் சட்டமும்
அறமும் சட்டமும் சமூகம் என்ற அமைப்பு சுமுகமாக இருக்க வேண்டி அமைத்துக் கொண்ட நடைமுறை சட்டம் என்ற வரையறை! அறம் என்ற நெறி அடங்கும் நியாயம் என்ற வரைமுறையில், எல்லாப் பொழுதும் இதனுள்ளே வர இயலா சட்டம் திட்டம்! அறத்தின்படி செய்ததை, சட்டம் சொன்னால் தவறென்று, தண்டனை மறுகணம் கிட்டிவிடும்! அறமும்நெறியும் தவறென்றாலும் சட்டம் அதை சரியென்றால் தண்டனை எதுவும் கிடையாது... நாடு விட்டு நாடு சென்றால் மாறிவிடலாம் சட்டம் திட்டம், நாடெதுவாயிருந்தாலும் அறநெறியென்பது ஒன்றே மட்டும்! நியாயம் வேண்டி மக்களெல்லாம் சட்டம் திட்டம் துணைகொண்டு தேடிப்போகும் வளாகம் நீதி காக்கும் மன்றம்! அறம் என்னும் நெறி காக்க மனசாட்சியென்ற ஒற்றைக்குரல் வேண்டிக்கொள்ளும் இடம் மனமென்ற மாமன்றம்! அறம் தவறிய சட்டம்👇🏼 இப்பொழுதெல்லாம் உலகில் நடக்கும் செய்திகள் அனைத்தும் நாம் கேட்காமலே நம் கைபேசியில் வந்துவிடுகின்றன, நிகழ்நிலை மூலம். அதில் ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா என்ற நாட்டில் சமீபமாக ஒரு சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது என்று படித்தேன். அதாவது வேண்டும் என்பவர்கள் அதற்கான அனுமதி வாங்கி யானைகளைக் கொன்று கொள்ள...