அவசரமான அமேசான்

அவசரமான அமேசான்

அவசரமான அமேசான்,
பணத்தைப் பறிக்கும் அமேசான்,    அதன் பின்னாலே நாமெல்லாம்!
ஆணையிட்டாலே போதும்
அன்றே வந்து சேரும்!
இன்னும் சிறிது நாளிலே
இந்த நிலைமை  மாறிடும் ஆணையிட்ட மறுகணமே
பொருள் வந்து சேர்ந்திடும்!
அவசரமாய் கையில் வந்து சேர்ந்துவிட்ட பொருளைக் கொண்டு
சாதித்தது என்னவென்று
என்னை நானே கேட்கின்றேன் எந்தன் மனமே பதிலை சொல்லு!
முக்கால்வாசிப் பொருளெல்லாம்
சிறிது நேரம் எந்தன் கையில்
பின்னர் போகும்  மூலைக்கொன்றாய்!

ஆலாய்ப் பறந்து ஆத்திரமாய்
அவசரமாய்ப் பணத்தைப்போட்டு
வாங்கிக் குவிக்கும்
பொருளெல்லாம்,
வீட்டின் இடத்தை அடைப்பதையல்லால்,
வேறென்ன செய்யும் அத்தனை பொருட்கள் சின்னஞ்சிறிய வாழ்நாளுல்?

வீட்டின் வெளியே எட்டிப்பார்த்து
வாழ்க்கை என்றால் என்னவென்று கொஞ்சம் கூடப் பார்க்காமல்
வெட்டிப்பொருளை வாங்கிக் குவித்தால், எப்படி அது வாழ்வாகும்?
வாழ்க்கையிது வாழ்க்கையா
நுகர்ந்தோட்டப்பந்தயமா?
குழப்பமாகுது மனமிங்கு,
சற்றே நின்று ஓய்வெடுத்தால்  சிந்தையது தெளியுமோ?


பிகு:
தாங்கள் நினைக்கும் அளவுக்கு வேகமாக டெலிவரி செய்ய முடியாத சில புதிய பார்சல் ஏஜென்சிகளின் கான்ட்ராக்டை நிறுத்தி நூற்றுக்கணக்கான நபர்களுக்கு வேலை இல்லாமல் செய்திருக்கிறது அமேசான் நிறுவனம். தங்கள் லாபம் அதிகரிக்க வேண்டி குறைந்த கட்டணம் வாங்கும் இந்த ஏஜென்சிகளை பயன்படுத்திப் பார்த்து, பிறகு மனம் மாறி நிறுத்திவிட்டது அமேசான்👇🏼

http://www.businessinsider.com/amazon-delivery-driver-contractors-layoffs-nationwide-2019-10

👇🏼 அமேசானும் நானும்

பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு கதை புத்தகம் வாசிக்க மிகவும் பிடிக்கும். எங்கள் பள்ளியில் நல்லதொரு நூலகம் இருந்தது. அங்கேதான் பொன்னியின் செல்வன் மற்றும் வேறு பல ஆங்கில புத்தகங்களையும் நான் படித்தேன். பள்ளி காலங்களில் நான் மிகவும் எதிர்பார்த்து நோக்கிக் காத்திருப்பது கதை புத்தகம் படிப்பது மட்டுமே. விடுமுறைகளிலும் அதுவே என் வேலையாக இருக்கும். சொந்தமாக கதைப்புத்தகம் வாங்கும் அளவிற்கு வசதி இல்லை. ஆகையால் என்னுடைய அடைக்கலம் எப்பொழுதும் நூலகங்களே.

இப்பொழுது ஓரளவிற்கு புத்தகம் வாங்கும் வசதி இருக்கிறது, நானும் வாங்கிக் கொள்வேன், என் கணவரும் அடிக்கடி வாங்கிக் கொடுப்பார். ஆனால் அவர் தனக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார் என்னால் அவற்றைப் படிக்க முடியாது. அதேபோல் எனக்குப் பிடித்த புத்தகங்களை அவரால் படிக்க முடியாது இன்று வரை 'பொன்னியின் செல்வன்' அவர் படிக்கவுமில்லை
படிக்க முற்பட்டதும் இல்லை.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் வந்தது மிகவும் வசதியாக இருக்கின்றது. அமர்ந்த இடத்திலிருந்து ஆர்டர் செய்தால் புத்தகங்கள் கைக்கு வந்துவிடும், இரண்டு மூன்று நாட்களில்.
இதில் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் நான் இப்பொழுது வாங்குவதில்லை, ஒரு கைபேசி வாங்கி அதில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டால்.

ஆன்லைனில் வரும் புத்தகங்களை ஒரு குற்ற உணர்வோடுதான் நான் பிரிப்பேன், காரணம் அதில் வரும் பிளாஸ்டிக் உறைகள். எவ்வளவுக்கெவ்வளவு நாம் வசதியாக வாழ முற்படுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சுற்றுச்சூழலை நாம் கெடுக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் இந்த பிளாஸ்டிக் உறைகள். நான் அவற்றை வீசி எறிவதில்லை. முடிந்தவரையில் திரும்பப் பயன்படுத்த பார்ப்பேன் வீட்டிலேயே பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் முறை ஏதாவது இருந்தால் செய்யலாம் என்று அடிக்கடி யோசிப்பேன் ஒரு ஐடியாவும் வரமாட்டேன் என்கிறது...




Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி