தோள்ல் பை

தோள்ல் பை

தோலில் ஆடை வாங்கியணிந்து, அதே தோலில் கைப்பையும்,   காலில் செருப்பும் கையில் உறையும், வாங்கிப் போடும்
சின்னக்குட்டி பெரியதங்கம்,
செவியைத்தீட்டிக் கொள்ளுங்கள்!

பாவம் அந்த விலங்கிடமிருந்து, தோலை எப்படி உரித்தார் என்று நிறுத்தி நின்று விசாரித்தால்....
தோலின் மென்மை மாறா வேண்டி உயிருடன் விலங்கு இருக்கும்போதே
அவ்வப்போது சில நேரம் தோலை உரிக்கும் வாய்ப்பும் உளது😰

செயற்கை தோலில் செய்த உடையும்
பையும் செருப்பும் உறையும்
வாஞ்சையுடன் வாங்கிக்கொண்டால்
துடிக்கும் வேதனை இல்லாமல்
பிழைக்கும் அந்த விலங்கினம்.

மாடு முதலை நரி என்று
அவர்களின் மேலே உள்ள தோலையும்
தோலைக் காக்கும் முடியையும்
எடுத்து உடைகள் செய்யும் பழக்கம் எதற்கு தோழர்களே?
தோலில் செய்த உடைகளைப் அணிந்து,
குரூரத்தின் சின்னம் என்று, கண்டிப்பாக மாறத் தேவை
என்ன வந்தது உலகில் இங்கு?
நம்மாலான சாதனை
நிறைய உண்டு நாம் செய்ய,
அதிலே வரும் கிளர்ச்சி
அணியும் உடையில் வருமா?


👇🏼 பட்டுத்துணியும்  தோல்பையும்

தமிழ் திரைப்பட ரசிகர்கள்  கிட்டத்தட்ட அனைவருமே      'அவ்வை சண்முகி' என்ற கமல்ஹாசனின் படம் பார்த்திருப்பார்கள்.
அதில் ஒரு நல்ல காட்சி.... நாசர் ஜெமினி கணேசன் வீட்டிற்கு ஊமையாக வேஷம் போட்டு சமையலுக்கு வந்துவிடுவார், அவருக்கு கமல் சப்போர்ட், பிராமணர் என்று கூறி வீட்டில் சேர்த்து விட்டிருப்பார்.
உண்மையில் அவர் மிலிட்டரி ஓட்டலில் வேலை செய்தவர்,
கறி மட்டன் எல்லாம் சமைப்பவர், மேலும்  இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்று தெரிந்ததும் ஜெமினி கணேசன் மிகவும் கோபமடைந்து, இங்கு மாமிசம் சமைப்பவர்களும்,அதை உண்பவர்களும் இருக்கக்கூடாது வெளியே உடனே போய் விட வேண்டும் என்று கூறிவிடுவார்.
சண்முகி வேடமணிந்த கமல் மிகவும் அமைதியாக மெதுவாக மென்மையான குரலில் ஜெமினி கணேசனிடம் 'நீங்க கூட தோல் செருப்பு ஷூ செய்துதானே பெரிய முதலாளியாக இருக்கிறீர்கள், தினமும் உங்களுடைய கம்பெனிக்குத் தானே போகிறீர்கள், அந்த ஷூவும் செருப்பும் எதிலிருந்து வந்தது?
மாட்டை வெட்டித் தோலை எடுத்து வந்தது தானே?' என்று கூறுவார், ஜெமினி கணேசனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் சரி நாசர் வேலைக்கு இருந்துவிட்டு போகட்டும் என்று கூறி விட்டுப் போய் விடுவார்!

மனிதனின் 'டபுள் ஸ்டான்டர்ட்' குணத்துக்கு இது ஒரு நல்ல உதாரணம்.
நாம் அனைவரும் இவ்வாறு தான் இருக்கிறோம். உணர்ந்து மாறினால் உலகம் இன்னும் அழகானதாக இருக்கும்.

எனக்குத் தெரிந்த சிலர் பட்டுத் துணியும் தோல் பொருட்களும் உபயோதப்படுத்துவதில்லை.
உயிர் வதை வேண்டாம் என்ற காரணத்தால்.
நானும் அந்த வகைதான்.
அநேகமாக தோலும் பட்டும் எடுக்கும் விதத்தைப் பார்த்தால் இன்னும் பலர் அதை விட்டு விடுவார்கள் என்பது என்னுடைய கருத்து.
பல வெளிநாடுகளில் இன்று 'ஃபர் கோட்' என்று கூறப்படும் மிருகங்களின் முடியிலிருந்து செய்யும் கோட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

மிகவும் விலையுயர்ந்த லூயி விட்டன் ஹேண்ட் பேக் முதலைத் தோலிலிருந்து செய்கிறார்கள்...தோலை எடுக்கும் செய்முறை மிகவும் குரூரமானது.

👇🏼


https://truththeory.com/2020/01/27/footage-shows-crocodiles-skinned-for-louis-vuitton-leather-bags/



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி