கைக்குட்டை

கைக்குட்டை

சின்னச் சின்ன துணித்துண்டு
விளையும் பருத்தித் துணித்துண்டு
கைக்குட்டை என்று பெயரிட்டு கையை முகத்தைத் துடைத்து
துவைத்து மடித்து வைத்தோம்
சுத்தவத்தம் காத்தோம்!

சின்னச் சின்ன காகிதம்
மரத்தை அறுத்து செய்தது
டிஷ்யூ என்று பெயர் வைத்து
கையை முகத்தைத் துடைத்து
குப்பை கூளம் சேர்க்கிறோம்
பூமி தனைத் கெடுக்கிறோம்!


எங்கும் டிஷ்யு 👇🏼

விழாக்கள் மற்றும் வீடுகளில் இன்று கிட்டத்தட்ட டிஷ்யூ இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். இந்த பத்து வருடங்களாக தான் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. வீட்டில்  வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர்கள் தங்கும் பொழுது அவர்கள் நிறைய டிஷ்யூ கொண்டுவந்து சமையலறை மேடையைத் துடைப்பதற்குக் கூட இரண்டு மூன்று டிஷ்யூவினால் துடைத்து விட்டு அலட்சியமாக வீசிவிட்டுப் போகிறார்கள். பார்க்கும்போதே பகீரென்று இருக்கும் அந்த ஒரு காகிதத்தை செய்வதற்கு எத்தனை மரத்தை வெட்டினார்கள் என்று தெரியவில்லை. சாதாரணமாக நாம் துணியை வைத்துத் துடைத்து அதனை அலசிப் போட்டால் கிட்டத்தட்ட ஒரு துணியே மூன்று மாதத்திற்கு வரும். பெரிய சிரமம் எதுவும் இல்லை. வீடுதோறும் அங்கங்கு சிறிய துணித் துண்டுகள் வைத்துக் கொள்ளலாம். சுலபமாக இருக்கிறது என்பதற்காக டிஷ்யுபேப்பரை நாம் உபயோகிக்கிறோம் அலச வேண்டியதில்லை, துடைத்துவிட்டு வீசி எறிந்து விடலாம். ஆனால் எல்லாமே அப்படி சுலபமாக வேலை செய்து எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் இருக்கத் தேவை என்ன? ஒவ்வொரு முறை டிஷ்யூவைக் கையில் எடுக்கும் பொழுதும் இது ஒரு மரத்தை வெட்டி வருகிறது என்ற எண்ணம் வந்தால், நம்மில் பெரும்பான்மையானவர்கள் டிஷ்யூவையைத் தொட மாட்டோம் என்று நினைக்கிறேன். மறுசுழற்சி செய்த டிஷ்யூவை கூட ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம்.
என் கருத்து என்னவென்றால் டிஷ்யூ பேப்பர் என்றாலே மறுசுழற்சி செய்தது மட்டும்தான் என்ற நிலைமை வந்தால் பூமியில் பசுமை குறைவது கொஞ்சம் கட்டுப்படும். எத்தனையோ விஷயங்களுக்கு காடுகளை அழிக்கிறோம் அதில் இந்த டிஷ்யூ பேப்பரும் காகிதமும் ஒன்று.
நாம் இதை இன்று உணரவில்லை என்றால் நம்  பேரன், பேத்தி, சந்ததியருக்கு நல்லதொரு பூவுலகு கிட்டாது.

Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி