Posts

Plant milk and Animal milk

Image
  Plant based milks are in the mainstream talk nowadays... As they try to take hold of a market, miniscule as it may be, an expected  volley of questions crop up, the chief being about their cost and nutrition value. Now plant based milks are taken by some people who avoid dairy milk for health reasons or allergy and intolerance to some of its components. The other segment who take this are Vegans ( for health, environment or ethics ) Costwise one has to accept that plant based milks are expensive....and we should also admit that as the market increases the cost will  necessarily come down as with any other product. And the nutrition value - let us suppose, for calculation purposes, that we consider the nutrition value of the milk from an elephant or tiger or lion or a giraffe or a hyena ...those milks will probably be more nutritious than cows' or buffaloes' for obvious reasons like large size, strength, height, cunning, persistence and other such qualities. The question...

கோழி ஓர் அன்னை..🐔

Image
  ஓரடி கூண்டில் நின்றவாறே  வாழ்வைக்கழிக்கும் லேயர் கோழி தினம் ஒரு முட்டை இட வேண்டும்- திறந்து நிற்கும் மனிதன் வாய்க்குள் அந்த முட்டை உருண்டோடவே..! ஒரிரு வருடம் ஆன பின்னே கோழியின் கழுத்தை அறுப்பதும் அவனே வறுத்து வாயில் அடைப்பதும் அவனே.... மனிதன் கையில் இந்தத் துன்பம் அடையக்கோழி செய்த குற்றம் யாவதென்று சொல்லுங்கள்! அப்படி என்ன கோழியின் முட்டை உண்ணத் தேவை வந்தது நமக்கு? புரதச்சத்து பருப்பில் உண்டு கொழுப்புமந்த எண்ணெயில் உண்டு  விட்டமின் வாழைப்பழத்தில் உண்டு  முட்டையின் ருசியும் டோஃபுவில் உண்டு....!

மீனுக்கும் மூச்சடைக்கும்...

Image
  நீரில் விழுந்த மனிதனும்  தரையில் போட்ட மீனும் இறப்பது  மூச்சடைப்பதாலே! உருவம் வேறாய் இருந்தாலும் இருவர் வேதனை ஒன்றேதான். காற்றின் பிராணவாயுவே மனிதன் மூச்சின் அடிப்படை, கடலின் பிராணவாயுவே  மீனின் வாழ்வின் அடிப்படை! கூர்ந்து பார்த்தால் புரியும் நமக்கு குடும்பமுண்டு மீனுக்கென்று!  அம்மா அப்பா அங்குமுண்டு குழந்தை குட்டி குஞ்சுகளென்று... இதையெதுவும் நினையாமல்  விழிப்பை உணர்வில் கொள்ளாமல் மீனைப் பிடித்து வெட்டுகிறோம் வறுத்து மென்று உண்ணுகிறோம்.   கேட்டால்... 'பெருமீன் திங்குது சிறுமீனை நானும் தின்றால் என்ன குறை'? கேள்வி பதிலாய் வருகிறது... ஐயா அம்மா கேளுங்க- சிறு மீன் உணவு இல்லை என்றால் பெருமீன் இறப்பது நிச்சயமே! உயிர்க்கொலை இன்றி உயிர்வாழ  நம்மால் நிச்சயம் முடியாதா....? கத்திரிக்காயும் வாழைத்தண்டும் குழம்பாய் செய்து உண்ணலாம், வறுத்தும் தொட்டுக்கொள்ளலாம்  சிறுமீன் குழம்பினைப் போலவே! #மீன்  #fishfeelpain #fishing

செடி கொடிக்கும் வலிக்குமே....!

Image
  செடிக்கும் கொடிக்கும் உயிர் உண்டே,  வெட்டும்போது வலிக்காதா என்றே கேட்கும் அன்பர்களுக்குக் கேள்வி ஒன்றை வைக்கின்றேன்-  நெஞ்சைத் தொட்டு கூறுங்கள்! ஆட்டுக்கறியும்  மாட்டுக் கறியும் பன்றிக் கறியும் சிக்கன்துண்டும் முட்டை பாலும் மீன் குழம்பும் ருசியில் மணத்தில் குறைவாய்ப் போனால்- தாவர உணவினும் .....ருசியில் மிகவும் குறைவாய்ப் போனால்,  'ஐயோ!.. செடிக்கு வலிக்குமே!  நாவின் சுவை குறைவென்றாலும், ஆடே வெட்டித் தின்கிறேன்'! அதுவே போதும் என்பீரா? இல்லை! இல்லை!  ருசிதான் வேண்டும் செடியை வெட்டித்தாருங்கள் என்று வாங்கி உண்பீரா? ☘️🌱🌿🌶️🥭🍊🍑🍉🍎🍒☘️🌱🌿 பல வருடங்களாக அசைவ உணவு உண்டவர்கள்தான் இன்று நனி- சைவமாக மாறி இருக்கும் பல பேர். அவர்களுக்கெல்லாம் தெரியும்- எனக்கும் தெரியும்...... அசைவ உணவு உண்பதற்கு ஒரே காரணம் அதன் ருசி தான், வேறு எந்த காரணம் கூறினாலும் அவை எல்லாம் சரக்குப் போக்கு தான். இதை அடித்து கூறுகிறேன்- ஏனென்றால் நானும் பல வருடங்களாக விரும்பி சிக்கன் சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு சாதம், ஆம்லெட், தயிர் மற்றும் கறந்த பாலில் பிரெஷாகத் தயாரித்த பில்டர் காபி...

இன்று அன்னையர் தினம்.....

Image
  தாய் சேய் உறவு, தாய்ப்பாசம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை, அனைத்து விலங்கினங்களுக்கும் அது உரித்தானது தான், சின்னஞ்சிறு பூச்சி முதல் மனிதர் வரை... முட்டையிலிருந்து வெளி வரும் தன் குஞ்சுகள் அனைத்தையும் முதுகில் சுமந்து செல்லும் பழக்கம் எட்டுக் கால் பூச்சியின் சில வகைகளுக்கு உண்டு... இயற்கையில் நம்மோடு சம்பந்தப்பட்ட, நாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மற்ற பல தாய்மார்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று, இந்த தினத்தில் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். முட்டை பால் மாமிசம் ஆகியவற்றின் சுவையால் மூடியிருக்கும் நம் கண்களைத் திறந்தால்தான் எண்ண முடியும். பசுவும் - கன்றும் எருமை மாடும் - கன்றும்  யானையும் - அதன் கன்றும்  ஆடும் - அதன் குட்டிகளும்  கோழியும் - அதன் குஞ்சுகளும்  சில உதாரணங்கள்.....

தாயின் துயரம்

Image
  யாரும் எனக்குத் துணை இல்லை ஊசி கொண்டு உண்டானேன் இருந்தும் குழந்தை வளர்ந்தது, நேரம் வந்ததும் பிறந்தது.  பாசம் என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன் நானன்று பிரவாகமெடுத்த பாலைதனை பாய்ந்து குடித்தது பிஞ்சுக் குழந்தை. சட்டென யாரோ வந்தார்கள் எனது மகவைப் பிடித்தார்கள் கொண்டு சென்று கொன்றார்கள் எனது மடியில் கை வைத்து  பாலைக் கறந்து கொண்டார்கள். ஐயோ..! நெஞ்சம் பதைக்கிறது துயரம் கண்ணை மறைக்கிறது  எதுவும் செய்ய வழியின்றி  பாலைக் கொடுத்தேன் மனிதரிடம்... நினைவில் நின்ற என் மகவை நானும் மறக்க முடியவில்லை பாலும் வற்றிப் போனதுமே மீண்டும் ஊசி வருகிறதே.... இன்று நின்றேன் லாரியினுள்ளே சோறும் தண்ணியும் எனக்கில்லை என் போல் நின்ற பலர் இங்கு வரிசையில் உள்ளார் என் முன்பு வெட்டிக் கொன்று தின்றிடவே காத்து நின்றார் மனிதரென்பார்..... கைப்பிடி சோற்றைத் தின்றதனால் நன்றி மறவா நாயதனைப் போற்றிப் புகழும் மனிதரேன் பாலைக் கொடுத்த என்னை மட்டும்  வெட்டிக் கொல்லப் போகிறார்? இந்தத் தண்டனை பெற்றிடவே என்ன தவறு நான் செய்தேன்?
Image
 புத்தாண்டில்.... சிந்திக்க! தாயின் வயிற்றில் கருவுற்று தாவிப் பறந்து வந்த வாழ்வு, துள்ளித்திரிந்து சுகமாக  தானே முடிவு பெற வேண்டும்? பொன்னும் பொருளும் தேவை இல்லை  மாட மாளிகை வேண்டியதில்லை  உணவும் உடையும் குடிலும் போதும்.... அதற்கும் மேலே தேவை ஒன்று- எங்கும் போகும் சுதந்திரம்! அதுவே வாழ்வின் மூச்சாகும்... கூண்டில் அடைத்த கைதிக்கு அமுதக்கடைசல் கடைந்தெடுத்து தங்கத்தட்டில் வைத்தாலும், விஷமேயாகும் அவ்வமுதம்! பூமியில் பிறந்த உயிரனைத்தும் வேண்டுவதந்த சுதந்திரமே, அதைப் பிடுங்கிவிட்டு அடைத்துள்ளோம் மனிதர் நாமே விலங்குகளை! அடைத்து வைத்த விலங்கையெல்லாம் விடுவிப்போமே நாமின்று... செடியும் கொடியும் தாவரமும் அளிக்கும் உணவு போதும் இந்தப் பூமியில் வாழ்க்கை இனித்திடவே! உணவை தினமும் இட்டு வளர்த்து- பின் கழுத்தை அறுக்கும் மாபாதகம் மறப்போம் நாம் இன்றோடு, தவிர்ப்போம் நம் வாழ்விலிருந்து. ஏன் தவிர்க்க வேண்டும்? காரணங்கள் 👇 1.ஊண் உணவு (மாமிசம்) உயிருடன் விலங்கை அறுத்துக் கொன்று பிறகு எடுப்பது. 2. முட்டை - ஆண் கோழிக்குஞ்சுகளை அரைத்துக்கொன்றுவிட்டுப் பிறகு முட்டையிட்ட கோழியையும் இறுதியில் கொ...

The Great Indian Chicken

Image
  I have developed the habit of watching atleast one movie daily, now that the Over-The -Top (OTT) platforms are so good and one has a wider choice of movies and serials to pick from. With the subtitle facilities on, there is no need to stick to one language. That the local cinema halls can be avoided too is indeed a great pleasure by itself. I still remember my youthful indignance and anger whenever the  posh cinema house switched off the AC once the movie started, in our city, during my college days. The owner believed that once the customers became engrossed in the movie (!) they will not realise that the AC has been stopped... Why is it that the majority of people who make it big financially are very small in their minds!?...🤔  A happy good bye to some of the rude ticket vendors, and to multiplex owners who do not allow our own snacks inside the halls , in order to make the maximum profit of their own (mostly lousy) food stalls. So it is home made idli dosa upma chap...

சிந்தனை செய் மனமே

Image
  ஊனும் உணர்வும் நம் போன்றே தாய் சேய் உணர்வும் நம் போன்றே வேதனை வலியும் நம் போன்றே பிரிவுத் துயரும் நம் போன்றே உள்ளன எல்லா உயிரிடமும், உண்மை இதுவே என்றே நாம் உணரும் காலம் என்று வரும்? தன் கன்றுக்காக சுரந்து வைத்த பசுவின் பாலை பிடுங்கி நாமும் சூடாய் காப்பி தேனீர் என்று குடிப்பது நியாயம் எவ்வாறு?  கன்றின் தேவை மீறிப்பாலை சுரக்க வைத்தது நாமன்றோ? பின் அதிகம் சுரக்குது என்றே கூறி பிடிங்கி குடிப்பதும் நாமன்றோ? காலம் கொஞ்சம் மறைந்த பின்னே  பசுவின் பாலும் வற்றிய பிறகு தாயும் சேயும் இரண்டையுமே கொன்று தின்பதும் நாமன்றோ? பாலை அருந்தும் அனைவருமே இந்தப் பாவம் செய்பவரே, மனமே சிந்தனை செய்துவிடு,  பாலைக் குடிப்பதை விட்டு விடு! ஆவென்றாலும் ஆடென்றாலும்  எருமை கழுதை எதுவென்றாலும் எல்லா உயிரும் நம் போன்றே அவற்றை வாழ விடு மனமே!

Plant based nutrition

Image
  Personally I think one should never  exploit animals whatever the cost to us may be. Be it tasty food or dress material or  habit or culture or nutrition or even vaccines. This approach is easy and okay for me considering my age ...not being a growing child or a young adult anymore for many decades now. But as my paediatrician friend pointed out, i cannot advocate a plant based diet to children without giving alternatives to the different perceived   benefits of an animal based diet (the phrase 'animal based diet' itself sounds cruel and heartless even to write, it is almost like saying a 'human based diet' ...🤔😯) For all the other important aspects in the nutrition of a child -  like proteins, carbohydrates, fats, vitamins and minerals there are excellent products which one can get directly from plants, without the product first going through the body of an animal that is sentient, thinks and feels just like us or maybe even more when one takes into ac...

வேலியிலோடும் ஓணான்

Image
  வேலியில் ஓடும் ஓணான்தன்னை  வேட்டியில் மடித்துக் கட்டிக்கொண்டு  ஐயோ! குடையுது என்றாராம் வேண்டப்பட்ட மனிதர் ஒருவர்.... காட்டில் மரத்தில் செடியில் கொடியில் பச்சைப் பசும்புல் வெளியிலே சுற்றித் திரியும் விலங்கையெல்லாம்  ஓரடிக் கூண்டில் அடைத்து வைத்து வெட்டி அறுத்து உண்ணும் பழக்கம்... இதனால் வந்தது   h5 n8 h5n1 h5n6 h7n9...... என்னும் வைரஸ்... போதும் பறவை வேண்டாம் நமக்கு, தாவர உணவே நமக்கமுதம் என்ற எண்ணம் மட்டும் வரவில்லை, அடைத்த பறவை கொன்றெறிந்து புதிய பறவை வளர்த்திடலாம் என்று எண்ணும் மாமனிதர்!  என்னென்பேன் மனிதர் நம்மை! நம்மிடம் சிக்கி சாவதா, வைரஸ் கிருமிக்கிரையாவதா? பாவம் அந்தக் கோழியும் வாத்தும், என்ன பாவம் செய்ததுவோ? மனிதப் பேயிடம் மாட்டிக்கொள்ள! 😥😥😥😥😥😥😥  உயிரோடு அந்தப் பறவைகளை முட்டையில் கட்டி எரிக்கும் காட்சி 👇 மனிதர் என்று கூறிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது... 😥 படங்கள் நன்றி: Indian Express 👇

Bats and Chicks

Image
In the past few decades I had developed a habit of planting trees wherever I could and I try to water them as regularly as possible. And in each session I plant atleast 2-3 of fast growing trees that give good shade and are also bird friendly. The tree Sakkarai pala maram (Ornamental cherry tree) is one of them and is a favourite  of mine, for it grows fast, gives good shade, is bird friendly and has no fuss. Very hardy.... grows anywhere and is generally useful to humans and birds alike, with its small red delicious fruits . My capacity in planning and forethought is limited.This has resulted in many of the trees that I planted and which came up well,  being cut off by the nearby houseowners, shopowners, landowners and the like. I had not planned the location right, with consideration to the nature of the people nearby. What I cannot grasp is why people do not understand the ease  of bringing up a tree and the invaluable goodness of the proximity of a tree. There is no o...

தமிழன் என்று சொல்லடா...

Image
எதனாலிந்த வழக்கம்  ஏனிந்த பழக்கம் என்ற கேள்வி ஏனடா! பழக்கமது தவறென்றால்  மாற வேண்டும் தானடா? வீறு கொண்ட தமிழா  விலங்கைத் தின்பதேனடா?  வள்ளுவரின் வாக்கினை  வாழ்வில் கடைபிடியடா! குட்டிப்புழுவைக் கொன்றெடுக்கும் பட்டுத்துணி தேவையா? அப்படியென்ன நாமெல்லாம் ஆண்டவரா சொல்லடா? புழுவை விட சேவை, என்ன செய்தோம் பூமிக்கு? அனைத்துயிர்க்கும் அன்பென்றான் அந்த நாளில் பாரதி, எந்த நாளும் சிந்தையிலே கொள்ளடா நீ அதை! சின்னஞ்சிறிய சிறகெடுத்து சிந்தைக்கெட்டா  தூரஞ்சென்று, சொட்டு சொட்டாய் தேனெடுக்கும் தேனீதனை துரத்திவிட்டு, ராணித்தேனீ காலொடித்து,  தேன் குடிக்கத்தேவையென்ன வந்ததிங்கே இப்பொழுது? வாடிப்போன பயிருக்காக வாடிப் பாடிய வள்ளலார், விளம்பியதென்ன சொல்லடா? ஜல்லிக்கட்டுக் காளையை அள்ளிக்கட்டும் வீரத்தமிழா வீரமென்றால் என்னவென்று வினவுகிறேன், சொல்லடா? வயதேறிப் போனாலந்த  காளை செல்வதெங்கடா?  இறுதி வரை வைத்திருந்து உணவளிக்கும் குணமது- அதுவும் அறம்தானடா உணரவேண்டும் நீயடா! உண்மை வீரம் என்னவென்று சொல்கிறேன் கேளடா, காளையதன் வாழ்வை நிம்மதியாய்த் தான் வாழ, கட்டி வைத்த கயிற்றினை...

சொல்லொன்று.....

Image
  உலகின் உயிரினம் அனைத்திலுமே  கொடூரமானது எதுவென்று கேட்டதும் வருமே பதிலொன்று   மூடமனிதன் தானென்று. பெண்ணை தெய்வம் தானென பேணிக்காப்பார் கோவிலிலே இல்லம் வந்து சேரந்ததுமே அடித்துத் துவைப்பார் இல்லத்தரசியை! பாலைக் கொடுக்கும் கோமாதா குலமாதா நீ எங்களுக்கென்று பாடிக்களிப்பார் பொங்கலன்று, அடித்துக் கொல்வார் மறுவருடம்! 'கணேசப் பெருமான் வணங்குகிறேன்' கன்னம் தனிலே போட்டுக் கொள்வார் நேரில் வந்தால் யானைதனை நெருப்பை வைத்துக் கொளுத்திடுவார்! அனுமான் பெருமை பாடிடவே சாலீசா தினம் சொல்லிடுவார் குரங்கைக் கயிற்றில் கட்டிவைத்து வித்தை காட்டி தான் பிழைப்பார்! பச்சைக் கிளியே பசுங்கிளியே பாட்டுப் பாடிட வா இங்கே  எனபாடம்  சொல்வார் அனுதினமும் சின்னக் குழந்தை காதிலவர், அன்றில் கிளியைக் கூண்டில் அடைத்திட்டு ஜோதிடமென்று தொழில் செய்வார்! ஊனை உண்ண வேண்டாமென சொன்னாரன்று வள்ளுவனார், திருக்குறள் தந்த தமிழ்நாடென்று தினமும் ஆடிப் பாடுகிறோம், உயிரைக் கொன்று ஊன் தின்று  இரட்டை வேடம் போடுகிறோம்!

Hesitation

Image
  I can speak, argue, debate, or shout -  on a one to one basis but cannot talk to a crowd, more so if it is formal. This hesitation kept me from addressing children regarding the rights of animals and about how we treat them -   though one of the reasons I closed shop was to do exactly that. (I was a practising ophthalmologist....) And of course in the recent past The  Corona Virus kept me back. But the wish to spread this awareness about the sufferings of animals, especially factory farmed ones and the dairy cattles was, and is, deeply rooted in my mind and the thought just refuses to go away. So as a kind of smooth and easy start, I decided to have a rehearsal and a sort of initiation of my vegan advocacy..... with my two nieces  who live in another city, as an audience,  hazarding a guess that it will give me an idea, as to how to approach a large gathering. One of the nieces is married and her husband's business is Hatcheries... I went all the sam...

Agatha Christie's Goose

Image
  I am a great fan of Agatha Christie and have read all her books including her autobiography more than once. The repeats were more enjoyable than the initial ones. It is difficult to say which I loved better, her whodunit fictions or social stories (Written under the name ' Mary Westmacott) or the two autobiographical books, one an actual autobiography and the second, a short part of her life when she went to Syria with her second husband, a renowned archeologist Sir Max Mallowan. This book was called - COME TELL ME HOW YOU LIVE. He was not knighted at that time  and was just starting his own career in archeology. He had spent the years prior to that as an apprentice under Sir Leonard Woolley at Ur in Iraq which was thought to be the capital of the Mesopotamian civilization. Agatha Christie was already famous as the Queen of Mystery, all her crime thrillers having become best sellers, exceeding the sales of The Bible. They met each other at Ur where Max was working as a man o...

Ekla Chalo Re...My Dear Vegan Friends

Image
  I forget in what context I noted and  traced this beautiful Bengali song, but listened to it a few times yesterday. Noticed the words Ekla Chalo Re somewhere in an online news news portal and it reminded me of Amitabhs song in a hindi movie called Kahaani. I traced the song on You Tube. The movie itself was a good one and I enjoyed the first view more than the second one - I always watch movies which I like, more than once. Enjoyed Twelve Angry Men about 7-8 times and maybe will again, a few more times later in life.  This initial title song in Kahaani stayed with me because of the haunting tune and the meaning .... Was written as a patriotic song in the beginnings of the twentieth century by Rabindhranath Tagore. BTW I like the way Bengalis pronounce A as O .. should it be Robindhranath..? Another reason I like Bengal is that the state gave us Raja Ram Mohan Roy. He was against Sati and Child marriage and  advocated actively against them.  Vegan advocates can...

🥼👩‍🎓 🐓

Image
  My childhood dream was to become a doctor, donn a white coat and go about serving the sick, with a smile on my face ...it astounds me now, even to think about it because in general, I am not the smiling personality and the look on my face is quite stern unless I actualy smile or laugh.  It could have started either after reading about Florence Nightingale in the school library or the sight of a tall smart lady with a white coat on her arm, daily in the bus, who got down at the Government Hospital bus stop - i still remember her face clearly. I managed to get admission into the City Medical College on my own credit, and it was quite a thrill. The course consisted of five and a half year of studies and one year of internship at the same local government hospital. After completing my first year though, i was unable to concentrate on anything i read (even fiction) and I stopped attending college. It upset my father very much, he consulted our family doctor and with his guidnace ...

வாழ விரும்பும் விலங்கு

Image
  விலங்கினை வெட்டாதே வெட்டியதைத் தின்னாதே  விலங்குவதை வேண்டாம், அதை வாதிப்பதை நிறுத்துங்கள்.. என விரும்பிக் கேட்டுக் கொண்டாலுடனே.. 'தாவர இலையில் மரத்தில் செடியில் காயில் பூவில் பழத்தில் மட்டும் இலையா உயிரெ'ன திருப்பிக் கேட்கும்  நடிப்புத் திலகம்! துடிக்கும் விலங்கின் வேதனைக்கதறல், தப்பியோடப் பார்க்கும் கால்கள், தப்பென்ன செய்தேன் நானென்று விட்டு விடுங்கள் என்னை என இறைஞ்சிக் கேட்கும் கண்கள்,  அம்மா என கத்தும் சத்தம்,  நடுங்கும் உடலின் பயத்தின் வாசம், குருதிப்புனலின் ரத்த வாடை.... இதையெல்லாம் உணரா  நீவிர், கண்ணில் காதல் மூக்கில் எதிலும் என்றும் நம்மால் உணர இயலா தாவர வலியை உணர்ந்தீரா? விலங்கின் சதையதை விரும்பி உண்பேன்  விட முடியாது பலநாள் பழக்கம் என்றுரைத்தால் தவறில்லை,  மெய்யுரை எண்ணி வணங்கி நிற்பேன்! அன்றில் இலைக்கும் செடிக்கும் வலியுண்டென சாக்கு போக்கு காரண காரியம் அனைத்தும் கலந்த பாசாங்கு.... நம்புவதெப்படி சொல்லய்யா?

பக்திப் படம்

Image
  நான் சிறு வயதாக இருக்கும் பொழுது சினிமாப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் ( இப்பொழுது மட்டும் என்ன! விட்டால் தினமும் இரண்டு படங்கள் பார்த்துக் கொண்டே என் மீதி வாழ்நாட்களை கழிப்பதற்கு நான் தயார், சந்தோஷமாக..)  படம் பார்க்கப் போவது என்பது விழா போல்- முதல் நாளில் முடிவு செய்துவிட்டு, அடுத்த நாள் காலையில் இருந்தே ஏற்பாடுகள் நடக்க வேண்டும். அதாவது உணவு தயாரிப்பு எல்லாம் முடித்து, மதிய உணவுக்குப் பிறகு கிளம்பிப்  போனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் க்யூவில் நின்று டிக்கெட் வாங்கி இரண்டு மணி ஆட்டத்திற்கு போவோம்.  கே பாலச்சந்தர் படங்கள் மிகவும் பிடிக்கும். பிறகு பஸ் பிடித்து வீடு வந்து சேர ஆறரை மணி ஆகிவிடும். முதல் நாள் இரவிலிருந்து சரியாக தூங்க முடியாமல் அதே ஞாபகமாக ஒரு சந்தோஷத்துடன் காத்துக் கொண்டிருப்போம். இதெல்லாம் முக்கியமாக 'கசின்ஸ்' வரும் பொழுது நடக்கும்- கண்டிப்பாக ஒரு விடுமுறைக்கு ஒரு படம் அல்லது இரண்டு படம் பார்த்து விடுவோம்.  விடுமுறை இல்லாத சமயங்களில் சனி ஞாயிறுகளில், சிலநேரம் பக்தி படம் மற்றும் சிவாஜி படங்கள் வந்தால் மட்டும் தான் அன்னையார் எங்களை அழைத்துச்...