மீனுக்கும் மூச்சடைக்கும்...

 


நீரில் விழுந்த மனிதனும் 

தரையில் போட்ட மீனும்

இறப்பது  மூச்சடைப்பதாலே!

உருவம் வேறாய் இருந்தாலும்

இருவர் வேதனை ஒன்றேதான்.


காற்றின் பிராணவாயுவே

மனிதன் மூச்சின் அடிப்படை,

கடலின் பிராணவாயுவே 

மீனின் வாழ்வின் அடிப்படை!


கூர்ந்து பார்த்தால் புரியும் நமக்கு குடும்பமுண்டு மீனுக்கென்று! 

அம்மா அப்பா அங்குமுண்டு

குழந்தை குட்டி குஞ்சுகளென்று...


இதையெதுவும் நினையாமல் 

விழிப்பை உணர்வில் கொள்ளாமல்

மீனைப் பிடித்து வெட்டுகிறோம்

வறுத்து மென்று உண்ணுகிறோம்.  


கேட்டால்... 'பெருமீன் திங்குது

சிறுமீனை

நானும் தின்றால் என்ன குறை'?

கேள்வி பதிலாய் வருகிறது...


ஐயா அம்மா கேளுங்க-

சிறு மீன் உணவு இல்லை என்றால் பெருமீன் இறப்பது நிச்சயமே!

உயிர்க்கொலை இன்றி உயிர்வாழ  நம்மால் நிச்சயம் முடியாதா....?


கத்திரிக்காயும் வாழைத்தண்டும் குழம்பாய் செய்து உண்ணலாம், வறுத்தும் தொட்டுக்கொள்ளலாம் 

சிறுமீன் குழம்பினைப் போலவே!


#மீன்  #fishfeelpain #fishing

Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

புலியும் முறமும்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

வாசலில் மண்புழு

டையப்பர் 👶

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd