சிந்தனை செய் மனமே

 





ஊனும் உணர்வும் நம் போன்றே தாய் சேய் உணர்வும் நம் போன்றே

வேதனை வலியும் நம் போன்றே பிரிவுத் துயரும் நம் போன்றே

உள்ளன எல்லா உயிரிடமும்,

உண்மை இதுவே என்றே நாம் உணரும் காலம் என்று வரும்?


தன் கன்றுக்காக சுரந்து வைத்த

பசுவின் பாலை பிடுங்கி நாமும்

சூடாய் காப்பி தேனீர் என்று

குடிப்பது நியாயம் எவ்வாறு? 


கன்றின் தேவை மீறிப்பாலை சுரக்க வைத்தது நாமன்றோ?

பின் அதிகம் சுரக்குது என்றே கூறி பிடிங்கி குடிப்பதும் நாமன்றோ?


காலம் கொஞ்சம் மறைந்த பின்னே 

பசுவின் பாலும் வற்றிய பிறகு

தாயும் சேயும் இரண்டையுமே கொன்று தின்பதும் நாமன்றோ?


பாலை அருந்தும் அனைவருமே இந்தப் பாவம் செய்பவரே,

மனமே சிந்தனை செய்துவிடு, 

பாலைக் குடிப்பதை விட்டு விடு!


ஆவென்றாலும் ஆடென்றாலும் 

எருமை கழுதை எதுவென்றாலும் எல்லா உயிரும் நம் போன்றே அவற்றை வாழ விடு மனமே!

Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓