சொல்லொன்று.....

 



உலகின் உயிரினம் அனைத்திலுமே 

கொடூரமானது எதுவென்று

கேட்டதும் வருமே பதிலொன்று  

மூடமனிதன் தானென்று.


பெண்ணை தெய்வம் தானென

பேணிக்காப்பார் கோவிலிலே இல்லம் வந்து சேரந்ததுமே அடித்துத் துவைப்பார் இல்லத்தரசியை!


பாலைக் கொடுக்கும் கோமாதா

குலமாதா நீ எங்களுக்கென்று

பாடிக்களிப்பார் பொங்கலன்று,

அடித்துக் கொல்வார் மறுவருடம்!


'கணேசப் பெருமான் வணங்குகிறேன்'

கன்னம் தனிலே போட்டுக் கொள்வார்

நேரில் வந்தால் யானைதனை

நெருப்பை வைத்துக் கொளுத்திடுவார்!


அனுமான் பெருமை பாடிடவே சாலீசா தினம் சொல்லிடுவார்

குரங்கைக் கயிற்றில் கட்டிவைத்து வித்தை காட்டி தான் பிழைப்பார்!


பச்சைக் கிளியே பசுங்கிளியே பாட்டுப் பாடிட வா இங்கே 

எனபாடம்  சொல்வார் அனுதினமும்

சின்னக் குழந்தை காதிலவர்,

அன்றில் கிளியைக் கூண்டில் அடைத்திட்டு

ஜோதிடமென்று தொழில் செய்வார்!


ஊனை உண்ண வேண்டாமென சொன்னாரன்று வள்ளுவனார், திருக்குறள் தந்த தமிழ்நாடென்று தினமும் ஆடிப் பாடுகிறோம், உயிரைக் கொன்று ஊன் தின்று 

இரட்டை வேடம் போடுகிறோம்!

Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி