செடி கொடிக்கும் வலிக்குமே....!


 

செடிக்கும் கொடிக்கும் உயிர் உண்டே, 

வெட்டும்போது வலிக்காதா என்றே கேட்கும் அன்பர்களுக்குக்

கேள்வி ஒன்றை வைக்கின்றேன்- 

நெஞ்சைத் தொட்டு கூறுங்கள்!


ஆட்டுக்கறியும்  மாட்டுக் கறியும் பன்றிக் கறியும் சிக்கன்துண்டும்

முட்டை பாலும் மீன் குழம்பும் ருசியில் மணத்தில் குறைவாய்ப் போனால்-

தாவர உணவினும் .....ருசியில் மிகவும் குறைவாய்ப் போனால்,


 'ஐயோ!.. செடிக்கு வலிக்குமே! 

நாவின் சுவை குறைவென்றாலும், ஆடே வெட்டித் தின்கிறேன்'!

அதுவே போதும் என்பீரா?

இல்லை! இல்லை! 

ருசிதான் வேண்டும்

செடியை வெட்டித்தாருங்கள்

என்று வாங்கி உண்பீரா?


☘️🌱🌿🌶️🥭🍊🍑🍉🍎🍒☘️🌱🌿


பல வருடங்களாக அசைவ உணவு உண்டவர்கள்தான் இன்று நனி- சைவமாக மாறி இருக்கும் பல பேர். அவர்களுக்கெல்லாம் தெரியும்- எனக்கும் தெரியும்...... அசைவ உணவு உண்பதற்கு ஒரே காரணம் அதன் ருசி தான், வேறு எந்த காரணம் கூறினாலும் அவை எல்லாம் சரக்குப் போக்கு தான். இதை அடித்து கூறுகிறேன்- ஏனென்றால் நானும் பல வருடங்களாக விரும்பி சிக்கன் சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு சாதம், ஆம்லெட், தயிர் மற்றும் கறந்த பாலில் பிரெஷாகத் தயாரித்த பில்டர் காபி அனைத்தும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் தான்......


🌶️🥭🍊🍑🌳🌱🌴🥦🍓🍒🍉


Comments

Popular posts from this blog

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

படமும் புத்தகமும்

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

Plant based nutrition

Almond coffee பாதாம் பால் காபி

தாயின் துயரம்

விருந்து

ஒரே மரம்

🥼👩‍🎓 🐓