Ariseemparupppu

 This is a mission during lockdown to get one simple CRUELTY FREE home recipe daily, using the basic items available at home. My aim is to get atleast 100.

And.....one question daily for me to ponder upon....


Today is the 7 th.


A minute to ponder 🤔

Two to cook...🌶️🌰🍅


சிந்திக்க ஒரு நிமிடம் 🤔

சமைக்க இரு நிமிடம் 🌶️🌰🍅


Yesterday in one of the various social medias, I saw the video of a man standing behind a cow, washing his face in the cow's urine, 

During my childhood there was a short period of rule by the Janata party in India and some of the central ministers then used to talk about the beneficial effects of cows urine to human beings when it is ingested which was when i first heard about this.

And later i noticed many people among my relatives also mention it in passing and now of course it seems to the bottom-line in organic agriculture.

I am neither disputing these claims nor advocating them.

🙄😃


My thoughts are more on the lines of what the cow would have wondered...

She probably is telling us this:


" HEY HUMAN,

Please do not worship my urine or me for that matter and then keep me tied up.

I can see that human beings have evolved a lot and progressed much  in science, medical facilities, comforts and even travelling into space....the list seems to be endless.

But down here on earth you are conveniently forgetting and trying to argue the fact that what we need is NOT YOUR WORSHIP AND THE FINAL CUTTING OF OUR THROATS, but OUR LIBERATED LIFE."

🤔

This question from the cow somehow reminds me of the way women are 'worshipped' in India.


🍅🌰🌶️ 🐃🐂🐄 🍅🌰🌶️


நான் இந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அதிவேகமாக செய்து முடிக்கக்கூடிய சில அகிம்சா உணவுப் பதார்த்தங்களை பற்றி தினம் ஒன்றாகக் கூற யத்தனித்திருக்கிறேன்.

குறைந்தது 100 ஆவது தேறும் என்று நம்புகிறேன்.


அதனுடன் கூடவே தினமும்  பல்லுயிர்களின் சமூக நலன் சார்ந்த ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க முடிவு செய்திருக்கிறேன்.

இன்று ஏழாவது நாள்.


நேற்று சமூக வலைத்தளத்தில்  ஒரு மனிதர் பசுமாட்டின் பின்னால் நின்றுகொண்டு அதன் சிறுநீரில் முகம் கழுவிக்கொண்டு இருந்ததைப் படம் பிடித்துப் போட்டிருந்தார்கள்.

பசுவின் சிறுநீர் மனிதன் குடிப்பது கூட  நல்லது என்று நான்  கேள்விப்பட்டிருக்கிறேன். என் பள்ளி நாட்களில் மத்திய அரசாங்கத்தில் ஜனதா கட்சி ஆட்சி புரிந்து கொண்டிருந்த பொழுது அதிலிருந்த பல அமைச்சர்கள் இதைக் கூறியதை நான் பத்திரிக்கைகளிலும் செய்தித்தாள்களிலும் படித்த ஞாபகம்.

அதன் பின்னர் பலரும் இதைக் கூற கேட்டிருக்கிறேன.

இயற்கை விவசாயத்தின் அடிநாதமாக பசுவின் சிறுநீர் விளங்குகிறது. இது போன்ற விஷயங்களை நான் ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை.

அது வேறு ஒரு தளம்.


இன்று என் சிந்தனை அந்தப் பசுவின் எண்ணங்கள் என்னவாக இருக்கலாம் என்பதே:


"அன்புள்ள மனிதர்களே!

 நீங்கள் விஞ்ஞானத்தில் வசதிகளில் மருத்துவத்தில் மற்றும் வாழ்வின் பல பரிமாணங்களில் வெகுதூரம் முன்னேறியிருக்கிறீகள் என்பது தெரிகிறது.

விண்வெளிக்குப் போகிறீர்கள், நிலவில் கால் வைத்து விட்டீர்கள். ஆனால் இங்கு கீழே பூமியில் உங்களுடன் வாழப்பிறந்த எங்களின்- விலங்குகளின் மனம் இன்னும் புரியவில்லையா, அல்லது புரியாதது போல் நடிக்கிறீர்களா என்று விளங்கவில்லை. 

நீங்கள் எங்களை பசு மாதா கோமாதா என்றெல்லாம் கும்பிடவும் வேண்டாம் பின்னர் எங்களை தலையை வெட்டித் திங்கவும் வேண்டாம்.

எங்களை சுதந்திரமாக வாழ விட்டால் போதும், எங்களை தயவு செய்து சிறையில் இருந்து விடுதலை செய்யுங்கள், இது ஒன்றே நான் வேண்டிக் கேட்பது."

🤔

இந்தக் கேள்விக்கு நாம் என்று பதில் கூறப் போகிறோம் என்று தெரியவில்லை.... மேலும் இதைக் கேட்கும்பொழுது இந்தியாவில் பெண்களின் நிலைமைதான் ஞாபகம் வருகிறது....


7️⃣

#crueltyfreecooking

#dhalrice

#அகிம்சாசமையல்

#அரிசீம்பருப்பு









Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி