மாட்டுப் பொங்கல்

 


மூச்சான சுதந்திரத்தை 

முழுகடிக்கும்

மூக்கனாங்கயிற்றிலே சிறைவைத்து, 

கொம்புக்கு சாயமடிக்கும் 

மனிதர் நம்மை 

முழுமூடர் என்றால் தவறுண்டோ சொல் மனமே!


அறைக்குள்ளே சிறைவைத்து

காலிலே கயிறு கட்டி 

தலைக்கு சாயம் அடித்து

கண்ணிரண்டும் மையிட்டு 

கண்டு களிப்பதற்கிணையன்றோ

மாட்டைக் கட்டி வைத்து அலங்கரிப்பது?


நெஞ்சிலே கை வைத்து 

நியாயமதை நினைவில் வைத்து

பொய்கலவா மெய்யை மனதார சொல் கண்ணே!

விலங்குக்குத் தேவை சாயமா சுதந்திரமா?

Comments

Popular posts from this blog

படமும் புத்தகமும்

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

🥼👩‍🎓 🐓

வெல்வெட் பூச்சி

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

Plant based nutrition

தாயின் துயரம்

விருந்து

ஒரே மரம்