காதல்
காதல்
சுற்றும் உலகம் மாறவில்லை
நிகழ்வுகள் நடக்கும் என்றும் போல
செடியும் கொடியும் கட்டிடமும்
நேற்றைப் போலே இன்றிருக்கும்.
👇🏼
காதல் என்பது ஒரு வார்த்தை இதற்கு அர்த்தம் தேடினால் அகராதியில் பல வார்த்தைகள் வரும். அதுவுமில்லாமல் அவரவர்க்கு என்று ஒரு அர்த்தமும் இருக்கும். பொதுவாக நாம் காதல் என்று கூறுவது என்னைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில் infatuation என்று சொல்லும் உணர்வினைத் தான்.
இது என் கருத்து...
சுற்றும் உலகம் மாறவில்லை
நிகழ்வுகள் நடக்கும் என்றும் போல
செடியும் கொடியும் கட்டிடமும்
நேற்றைப் போலே இன்றிருக்கும்.
காதல் வந்த கண்ணினிலே
சுற்றும் உலகம் அழகானதே
நிகழ்வுகள் நடக்கும் நடனம் போல்
செடியும் கொடியும் கட்டிடமும்
புதிய பொலிவு பெற்றிடுமே
சூரிய வெப்பம் நிலவொளியே
இசையின் வெள்ளம் மனதினிலே
காதல் ஒருநாள் மறைந்து போக
உள்ளம் அதிர்ச்சியிலுறைந்து போக
என்னது உலகம் இத்துனை மோசம்!
அறியவிலையே நாமிதுவரையில்?
அடடா உண்மை புரிந்ததுவே
உலகம் சரியிலை என்பதுவே!
சிலநாள் சென்றன துன்பத்தில்
ஒரு நாள் சமநிலை வந்ததுவே
உலகம் சுற்றுது என்றும் போல
நிகழ்வுகள் நடக்குது அதனதன் போக்கில்
அடடா உண்மை புரிந்ததுவே
உலகம் சரிதான் என்பதுவே!
மீண்டும் உலகம் அழகாய் மாறும்
மற்றோர் காதல் வரும் பொழுது
மாறுதல் எல்லாம் நம் மனதில்
அதன் போல் தெரியுது உலகமிதே!
சுற்றும் உலகம் அழகானதே
நிகழ்வுகள் நடக்கும் நடனம் போல்
செடியும் கொடியும் கட்டிடமும்
புதிய பொலிவு பெற்றிடுமே
சூரிய வெப்பம் நிலவொளியே
இசையின் வெள்ளம் மனதினிலே
காதல் ஒருநாள் மறைந்து போக
உள்ளம் அதிர்ச்சியிலுறைந்து போக
என்னது உலகம் இத்துனை மோசம்!
அறியவிலையே நாமிதுவரையில்?
அடடா உண்மை புரிந்ததுவே
உலகம் சரியிலை என்பதுவே!
சிலநாள் சென்றன துன்பத்தில்
ஒரு நாள் சமநிலை வந்ததுவே
உலகம் சுற்றுது என்றும் போல
நிகழ்வுகள் நடக்குது அதனதன் போக்கில்
அடடா உண்மை புரிந்ததுவே
உலகம் சரிதான் என்பதுவே!
மீண்டும் உலகம் அழகாய் மாறும்
மற்றோர் காதல் வரும் பொழுது
மாறுதல் எல்லாம் நம் மனதில்
அதன் போல் தெரியுது உலகமிதே!
👇🏼
காதல் என்பது ஒரு வார்த்தை இதற்கு அர்த்தம் தேடினால் அகராதியில் பல வார்த்தைகள் வரும். அதுவுமில்லாமல் அவரவர்க்கு என்று ஒரு அர்த்தமும் இருக்கும். பொதுவாக நாம் காதல் என்று கூறுவது என்னைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில் infatuation என்று சொல்லும் உணர்வினைத் தான்.
இது என் கருத்து...
Comments
Post a Comment