கைபேசி


கைபேசி


நவீன கருவிக் கைபேசி
நம் கையை விட்டுப் பிரியாது சமத்துக் கருவி என்று பெயர்
சகலமும் சொல்லும் கைபேசி!
அனைவர்கவனம் எப்பொழுதும்
அதன்மேலேயே குவிந்திருக்கும்!


யந்திரமாக மாற்றிடுமோ
நமை -
யந்திரமாக மாற்றிடுமோ
சமத்துக் கருவி கைபேசி?
பயமிப்போது அனைவருக்கும்!

பழைய தொலைபேசி சமத்தில்லை
எடுத்தால் பேசும்
வைத்தால் அமைதி
ஒன்றுமறியாக் குழந்தை அது.
இந்தச் சமத்துக்குழந்தையோ பேசினால் போதும்
தட்டச்சடிக்கும் வலை- துணைகொண்டு.

எழுதவராத கைகளுக்கு
சமத்துக் கருவி துணை இருக்கும்
அடித்துக் கொடுக்கும்
அடுக்கு மொழிகளை...

நன்றிகள் உண்டு உனக்கேதான்
மைந்தன் கொடுத்த கைபேசி
oneplus 6t சமத்துக் குழந்தாய் !
உன் துணையில்லை என்றாலே
எழுத்துலகெனக்கு எட்டாக்கனியே!

ஒருவேளை
நவீன மெல்லாம் தீங்கில்லையோ?
பழையனவெல்லாம் பெருமையில்லையோ?



👇🏼

நான் எனது மருத்துவத் தொழிலை நிறுத்திவிட்டு மீதமிருக்கும் ஆயுளை  விலங்குகளின் உரிமை பற்றிஒரு விழிப்புணர்வை சிறு குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் மனதில் பதியும் படியாக சில அடுக்கு மொழிகளை எழுதலாம் என்று ஆரம்பித்தேன்...

அது ஒரு ஃப்ளோவில் நிறைய வந்தது .
இதை எப்படிப் பரப்புவது என்று யோசித்த பொழுது முகநூலில் போடு என்று என் கணவர் கூறினார்..

எனக்கு எழுதவும் தட்டச்சு அடிக்கவும் வராது.. திக்கித் திணறித்தான் செய்வேன்.

ஆனால் என் கைபேசி எனக்கு மிகவும் உதவியது நான் பேசினால் அது வேகமாக தட்டச்சு அடித்து எடுத்து விடுகிறது.

என் மூத்த மகன் எனக்கு கொடுத்த ஒன் பிளஸ் 6 டி என்ற இந்த கைபேசி மிகவும் உதவியாக இருக்கிறான்,

இருக்கிறது என்று சொன்னதை கைபேசி தானாக இருக்கிறான் என்று மாற்றிக் கொண்டான்....😄
சரி அவன் விருப்பத்தை கெடுப்பானேன் என்று விட்டுவிட்டேன்.
அவனுக்கு நன்றியாக ஒரு பாடல் மேலே




 ?

Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓