காப்பி காஃபி

காபி குடிப்பதை விட குடிக்கப் போறோம் என்கிற நினைப்பே ஒரு சந்தோஷம்.
விடுமுறை மாதிரி ..... விடுமுறையை விட, விடுமுறை போகப் போகிறோம் என்கிற சந்தோஷம் தான் ஜாஸ்தி.

காலையில் எந்திரிச்ச உடனே ஒரு காபி, அதுக்கு அப்புறம் எப்பத் தலைவலி வந்தாலும் ஒரு காபி.

நான் காபி நல்லாப் போடுவேன். பில்டர் காபியும் சரி... ஒரு சாதா காபி, பட்டிக்காட்டுக் காபின்னு நான் சொல்லுவேன்... அந்த காபியும் சரி நல்லாப் போடுவேன்.
எங்க வீட்டிலேயும், சொந்தக்காரங்க வட்டாரத்திலும்  'அவிக' காபின்னா போதும், குடிக்காதவங்க கூட குடிப்பாங்க!

நல்லபில்டர் காபி அப்படின்னா, அப்ப கறந்த பாலைக் காய்ச்சி, பில்டர்ல புதுசா அடர்த்தியா டிகாக்ஷன் இறக்கி, பொங்கற பால்ல டிகாக்ஷனை சொட்டு சொட்டாக விட்டு சர்க்கரையைக் கலந்து சுடச் சுடக் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கனும்.


அல்லது டிகாக்ஷன் முதல்ல எடுத்து அதுக்குள்ள பொங்குற பால  ஊற்றியும் கலந்துக்கலாம்.
இதில் முக்கியமானது என்னன்னா தூள் நல்லா இருக்கணும், சிக்கரி ஜாஸ்தி இருக்கவே கூடாது. அதுக்கப்புறம் பால் அப்ப கறந்த பாலா இருக்கணும்.

மத்தபடி வேற எத்தனையோ வகை இருக்கு, காபி போடறதுல.... சும்மா தண்ணீரும் காப்பித்தூளும் பாலும் சர்க்கரையும் ஒன்னாக் கொதிக்கவைத்து வடித்து குடிச்சா அது ஒரு தனி ருசி.

பால் இல்லாமல் கடுங்காப்பி குடிக்கலாம்.
சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம்.
இன்ஸ்டன்ட் காபி குடிக்கலாம்.

போடற விதமா போட்டா எல்லா காபியும் சூப்பர் தான்!

எனக்கு என்னமோ காபி ரொம்ப விரும்புறவங்க தான் நல்லா காபி போட முடியும்னு தோணுது.
ஏன்னா அவங்களுக்கு தான் தெரியும் எப்படி குடிச்சா நல்லா இருக்கும் என்று..😃


👇


காப்பி காஃபி

செல்லக்கா செல்லக்கா!
எதெதையோ எழுதறியே?
எமக்குப் புடிச்ச காப்பி!
அதப் பத்தி எழுதக்கா
அப்படின்னு சொன்னாங்க
சரஸக்கா சரஸக்கா!
ரெண்டு பேரும் சரஸக்கா!

சரஸக்கா சரஸக்கா!
காஃபியா,காப்பியா?
எது வேனும் சொல்லக்கா?
கேட்டுக்கிட்டா செல்லக்கா!
ரெண்டுந்தான் எழுதுன்னு
சொன்னாங்க சரஸக்கா!

காப்பி ரொம்ப சுளுவுங்க
கொதிக்கிற தண்ணிங்க,
அதுக்குள்ள தூளுங்க
தூளோட சக்கரையும்
சக்கரக்கூட சுக்குங்க,
ஒரு ஸ்பூனுப் பாலச் சேத்து,
கொதியொன்னு  வந்ததும்,
வடிச்செடுத்துக் குடுயுங்க
துளித்துளியா ரசியுங்க!

காஃபின்னா பாருங்க,
அது கொஞ்சம் பவுசுங்க,
வேனுமொரு வடிகட்டிங்க!
வடிகட்டிலக் காப்பித் தூளு
தாராளமாப் போட்டு வெச்சு,
கரண்டியெடுத்து அழுத்தி விட்டு
தண்ணீரக் கொதிக்க விட்டு,
ஊத்திவெச்சு மூடிப் பாரு,
இறங்கிவிடும் காஃபிச் சாறு!

கறந்த பாலக்
காய்ச்சியெடுத்து,
காஃபிச் சாற
சொட்ட விட்டு,
சக்கர கொஞ்சம்
சேர்த்தெடுத்துத்,
ஆத்தி ஆத்திக் குடிச்சுப்பாரு!
கசப்பும் இனிப்பும் கலந்து நாக்குச் சப்புக் கொட்டுது பாரு!







Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி