சிந்திக்க ஒரு நிமிடம்

 🤔 சட்டம் மாறினால்......🙂


சில நாட்களுக்கு முன்பு ஒரு டாக்குமென்டரி படம் பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் உலகப் போரின் பொழுது ஹிட்லர் ஏற்படுத்திய பேரழிவிலிருந்து தப்பித்தவர்களை பேட்டிக் கண்டிருந்த ஒரு டாக்குமெண்ட்ரி படம்.

அதில் வந்த சில காணொளிகளை பார்த்த பொழுது.... இப்பொழுது விலங்குகளை லாரிகளிலும் ட்ரக்குகளிலும் ஏற்றிச்சென்று கொல்லும் காட்சிக்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை....

பல நாட்கள் சோறு தண்ணி இல்லாமல் எலும்பும் தோலுமாக இருந்த மனிதர்களை ரயில் வண்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் அடைத்து ஆஸ்ட்விச் என்ற ஊருக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்கள்.  போகும் முன்னே பலர் இறந்து விடுவார்கள். உயிரோடு தப்பித்தவர்களை அந்த ஊரில் இதற்காகவே கட்டிய சில கட்டிடங்களில் நச்சுக் காற்று மூலம் கொன்றுவிடுவார்கள்.


 இன்று மேற்கத்திய நாடுகளில்

ஆறு மாதங்களேயான பன்றி குட்டிகளை அப்படித்தான் கொன்று தின்கிறார்கள். அன்று நடந்தது முட்டாள்தனமான ஒரு நம்பிக்கையினால் வந்த பேரழிவு.

இன்று இது பெரும் வியாபாரம், ஏகப்பட்ட பணம் புழங்கும் வியாபாரம். மற்றும் மனித சமுதாயத்திற்கு உணவளிக்கிறோம் என்ற ஒரு சப்பைக்கட்டு .

ஏன் தாவர உணவளித்தால் மனித சமுதாயம் உயிரோடு இருக்காதா? இதைவிட ஆரோக்கியமாக இதைவிட நன்றாக இதைவிட நிறையவே உணவு தரலாம்.

ஆனால் பல ஆண்டுகளாக பழகிவிட்ட வியாபாரத்தை விட முடியாத ஒரே காரணத்தால் இதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிதாக வேறு காரணம் எதுவுமே இல்லை... ஒரு சின்ன மாற்றம், சில ஆண்டுகளுக்கு செய்தால் போதும், அத்தனையும் மாறி நல்லுணவு அளிக்கலாம் உலகம் பூராவும்.


அன்று ஹிட்லர் நடத்தியது உலக சட்டப்படி குற்றம். இன்று விலங்குகளை பேரழிவுக்கு நாம் உண்டாக்கிக் கொண்டிருப்பது சட்டப்படி குற்றம் இல்லை. இதுதான் வித்தியாசம்.... ஆனால்  மனிதன் இயற்றியது தானே சட்டம், வானத்தில் இருந்து வந்தா குதித்தது?


ஏதோ ஒரு சிறிய நாட்டிலோ அல்லது பெரிய நாட்டிலோ யாராவது ஒரு தலைவர் கொஞ்சம் சுயமான ஒரு சிந்தனையோடு நேர்மையோடும் சிந்தித்து, தைரியமாக விலங்குகளைக் கொல்வதும் மனிதர்களை கொல்வதும் ஒரே போன்ற குற்றம்தான், என்ற ஒரு சட்டம் இயற்றினால் வெகு சீக்கிரத்தில் உலகம் மாற வாய்ப்பிருக்கிறது. இப்படி மாறினால் இதுபோன்ற ஒரு நல்லுலகம் எதுவும் இல்லை என்றே நான் எண்ணுகிறேன்.


பல விதமான பிரச்சனைகளுக்கும் இந்த ஒரே முடிவின் மூலம் தீர்ப்பு வரலாம்.

சுற்றுச்சூழல் பாதிப்புகளும் பெருமளவு குறைய வாய்ப்பிருக்கிறது.


அப்படி வேறு எந்த நன்மையும் ஏற்படாமல், விலங்குகள் மட்டுமே கொடுமையிலிருந்து விடுபட்டார்கள் என்று இருந்தாலும் கூட, அது தான் சரி, அதுதான் நியாயம்.

சுற்றுச்சூழல் மற்றும் ஏனைய பிற பிரச்சினைகளுக்கு நாம்தான் காரணம். அதை நாம்தான் சரி செய்து கொள்ள வேண்டும்!


☘️🌱 62


#அதிவேகஅகிம்சாசமையல் 

#சுலபமானவெண்டைக்காய்பொரியல்

👇


https://m.facebook.com/story.php?story_fbid=1999299436886244&id=100004186202227


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

விருட்சம்

புகைபோக்கி

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி