சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

 

வீகனிஸம் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே உடனே அனைவருக்கும் இது மேற்கத்திய கருத்து, வெளிநாட்டுக் கருத்துக்களை உபயோகப்படுத்த மாட்டோம், என்று திடீரென்று தாய்நாட்டின் பேரில் ஒரு பாசம் பொங்கி வழிகிறது.


யோகா பற்றி பல புத்தகங்கள் இன்று வெளிநாட்டில் இருந்து வருகின்றன. நம் புத்தகங்களை விட மிகவும் அழகாக, நாம் புரிந்து கொண்டதை விட யோகாவைப் பற்றி அவர்கள் புரிந்துகொண்டு எழுதி இருக்கிறார்கள். அப்படி என்றால் யோகா வெளிநாட்டுக் கருத்தா? வெளிநாட்டில் உருவானதா?

அகிம்சா வெளிநாட்டு கருத்தா? 

புலால் உண்ண வேண்டாம் என்று கூறும் தமிழர்களின் உயிர் நாடி புத்தகம் - திருக்குறள், வெளிநாட்டிலிருந்து வந்ததா?

அகிம்சையும் திருக்குறளும் போதிக்கும் உயிர் கொல்லாமையை தான் வீகனிஸமும் குறிக்கிறது... அது ஒரு பெயர், ஒரு வார்த்தை, அவ்வளவே...!


உயிர் கொல்லாமையை போதிக்கும் சமண மதம் வெளிநாட்டிலிருந்து வந்ததா?

அப்படிப் பார்த்தால் கிறிஸ்துவ மதமும் இஸ்லாமிய மதமும் வெளிநாட்டிலிருந்து வந்த மதங்கள் தான். அவைகளை நாம் கைவிட போகிறோமா....?


 இன்று நம் நாட்டில் நம் கையால் தொட்டு புழங்கும் பல சாமான்கள் கார்,கைபேசி, பாத்திரம் கழுவும் இயந்திரம், மின் அம்மிகள், துணி துவைக்கும் எந்திரம், அனைத்தும் வெளிநாட்டிலிருந்து வந்தவைதான்.

ஒன்று சீனா அல்லது ஜப்பான் அல்லது மேற்கத்திய நாடுகள் தயாரித்தவை. நாம் கார்களை பயன்படுத்த வேண்டாம், நடந்தே செல்லலாம். ஏனென்றால் நம் கால்கள்தான்  நமக்கு சொந்தம். கார் என்ற ஒரு கருத்தே வெளிநாட்டிலிருந்து வந்தது. 


தமிழில் ஒலிச்சேர்க்கை செய்து திரையிடப்படும் வெளிநாட்டு படங்களை வாயைத் திறந்து கொண்டு பார்க்கிறோம், திரைப்படக் கொட்டகைகளிலேயே ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அவ்விதம் வருகின்றன.

அங்கெல்லாம் செல்லவே கூடாது.

டைட்டானிக் பட பாடல்களை இனி கேட்கவே கூடாது.


நெட்பிளிக்ஸ், அமேசான், ஸ்டார் விஜய் எல்லாம் நிறுத்தி விடுவோம்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை பார்க்கவும் கூடாது கேட்கவும் கூடாது.


 மருத்துவமனைகளில் நடத்தப்படும் அறுவை சிகிச்சைகள் நூற்றுக்கு நூறு வெளிநாட்டிலிருந்து வந்த கருத்துக்கள்.

வெளிநாட்டில் அவர்கள் கையாளும் அதே நுட்பத்தைத்தான் நாமும கையாளுகிறோம்.


கண் அறுவை சிகிச்சைகள் அனைத்தும் வெளிநாட்டு கருத்துக்கள், வெளிநாட்டு யந்திரங்களினால்தான் செய்கிறோம்.

மருத்துவமனைக்கு சென்றால் மட்டும் "ஒரிஜினல் ஃபாரின் மிஷினா? ஒரிஜினல் ஃபாரின் லென்ஸா?".. தவறாமல் கேட்டுக்கொள்கிறோம்.

நம் வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டிகள், ஏன் சிறு குழந்தைகளுக்கு கூட பிறவிப் புரையை அகற்றி, கண் அறுவை சிகிச்சை நடத்தி கண்ணில் வைக்கப்படும் லென்ஸ் வெளிநாட்டு லென்ஸ்,

அல்லது வெளிநாட்டு

தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட லென்ஸ்.

இந்திய தொழில்நுட்பம் எதுவுமே இதில் கிடையாது...!

அவற்றை எல்லாம் கண்களிலிருந்து பிடுங்கி வெளியே எறிந்து விடலாம். 


குழந்தைகளை ஆக்ஸ்ஃபோர்டுக்கும் ஹாவர்டுக்கும் படிக்க அனுப்புகிறோம்.

பல குழந்தைகள் இன்று அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் "செட்டில்" ஆகி இருப்பதை பெருமையாக பேசிக் கொள்கிறோம்.


இவையெல்லாவற்றையும் மட்டுமல்லாமல் இன்னும் எத்தனையோ நான் சொல்ல மறந்த வெளிநாட்டு வகைகளை மிகவும்  மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் "வெளிநாடு" என்று சொல்லியே ஏற்றுக் கொள்கிறோம்.


ஆனால் விலங்குகளை கொடுமைப்படுத்த வேண்டாம், அவர்களை கொன்று திங்க வேண்டாம், அவர்களை விடுதலை செய்யுங்கள் என்று கேட்டால் மட்டும் திடீரென்று இது வெளிநாட்டு கருத்து.....எங்கள் நாட்டு மாடு, எங்கள் பால் பண்ணை என்ற பெருமை வந்துவிடுகிறது. எங்கள் மாடுகளை, கன்று குட்டிகளை

நாங்கள் கொன்று திங்கத்தான் செய்வோம் என்று கூறுகிறோம். நாம் கொன்று உண்ணும் 'பிராய்லர்' கோழி என்ற கருத்து எங்கிருந்து வந்தது?  கூண்டில் கோழிகளை அடைத்து வைக்கும் கருத்து எங்கிருந்து வந்தது?


இன்று உலகம் பூராவும் எல்லா நாடுகளின் பாதிப்பும் எல்லா நாடுகளிலும் பரவியிருக்கின்றன. பார்க்கப்போனால் கேரட், முட்டைகோஸ், பச்சை மிளகாய், பீன்ஸ் இவை எல்லாம்

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு.

வெளிநாட்டில் இருந்து வந்தவைதான் 


இரட்டை வேடத்தை நாம் கலைக்கும் நிமிடம் தான் நாம் முழு மனிதனாக மாறும் நிமிடம். அதுவரை நாமெல்லாம்தான் மிருகங்கள்.....

சுலப சாம்பார்

👇


https://m.facebook.com/story.php?story_fbid=1988195881329933&id=100004186202227

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி