Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

 

The video is the making of a vegan ommelete.

Fried Bengal gram powder, onions, tomatoes, green chillies, curry leaves salt and water are mixed and then made into an ommelete.

Other optional ingredients are eno salt, ginger bits, coriander leaves and any other vegetables pieces of choice.


The taste is good especially when eaten hot, and of course all of us know that taste is always acquired.


Other ingredients that cud be added are soaked flax, and black salt which might add to the experience.











அகிம்சா ஆம்லட்...🤔 அது  என்ன..?


👇

கடலைமாவை கரைத்தெடுத்து

கொஞ்சம் அதிலே உப்புமிட்டு,

பச்சை மிளகாய் வெங்காயம்

மல்லித்தழை எல்லாமே 

சிறு சிறு துண்டாய் வெட்டி போட்டு

நன்றாய் கலக்கி அடித்து விட்டு,

ஓரமாக ஒரு மணி நேரம் ஓய்வெடுக்க விட்டுவிடலாம்...


பின்னே வந்து அடுப்பை ஏத்தி

தோசைக்கல்லை சூடாக்கி

ஊத்தி ஒருமுறை திருப்பிப்போட்டால்,

அற்புதமான ஆம்லெட்டம்மா!

நனிசைவத்தில் நனைந்தெடுத்த 

அருமையான ஆம்லட்டம்மா....

அதுவே உணவாய் அமைந்திடும், 'சைட் டிஷ்' ஆகவும் இருந்திடும்...

ஆணவமதற்கு இல்லையம்மா!


கோழியுமில்லை  கொலையுமில்லை, 

ருசியிலும் எந்தக் குறையுமில்லை

அஹிம்சையான ஆம்லட் இதுவே!


🌰🥬🌶️🌰🥬🌶️🌶️🥬🌰🌶️🥬


(முட்டையிடும் லேயர் கோழிகளும் தோட்டத்தில் முட்டையிடும் நாட்டுக் கோழிகளும் அனைத்தும் கடைசியில் கழுத்தறுபட்டு கொல்லப்படுகின்றன என்பது நாம் அறிந்த விஷயம் தான்... கோழிக்கறி நேரடி அசைவம் என்றால் கோழிமுட்டை சுற்றிவளைத்து அசைவம்...🙂)


நாவின் ருசி என்பதே ஒரு பழக்கம்தான்....நம் ஊரைவிட்டு வேறோர் இடம் சென்றால், அந்த உணவு புதியதாக இருப்பதால், பழக சில நாட்களாகலாம்.

பழகிய பின் பிடிக்கலாம்... பிடிக்காமல் போகலாம்.


அம்மாவின் கைப்பக்குவமும் சிறுவயதிலிருந்து சாப்பிட்டு பழகியதால்தான்.... பெரிதாக வேறு காரணம் இருக்க வாய்ப்பில்லை.


அதுபோலத்தான் அசைவ உணவு வகையறாக்களும், நாம் இவ்வளவு நாட்களாக சாப்பிட்டு பழகிய பால் தயிர் வெண்ணை போன்ற பொருட்களும் முட்டை முதலியவைகளும்.


திடீரென்று நிறுத்தும் பொழுது சிறிது நாட்கள் கஷ்டமாக இருப்பது போல் தோன்றும்.

பிறகு நனிசைவ உணவு வகைகள் மிகவும் ருசியாக இருப்பது போல் தோன்றும்


எல்லாமே பழக்கமும் எண்ணமும்தான் காரணம்....


இருந்தாலும் இன்னுமே முட்டை போல் வேண்டும் என்று எண்ணுபவர்கள் கருப்பு உப்பும் பிளாக்ஸ் விதைகளும் ஊறவைத்து பயன்படுத்தலாம் இதனுடன்.


#egglessommelette

#veganommelette

#crueltyfreeommelette

#முட்டையில்லாஆம்லட்

#அகிம்சாஆம்லட்

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி