விடுதலை





அல்லலான ஆட்சி 
ஆங்கிலேய ஆட்சி
அனுப்பிவிடு வெள்ளையனை ஆங்கிலேய நாட்டுக்கென்று,
வீரத்துடன் கேட்டு 
விடுதலை வேண்டுமென வெற்றியுடன் வாங்கினோம்,
நம் வாழ்வு நமக்கென்று
வீறுநடை போட்டோம்..
விடுதலை! விடுதலை!விடுதலை!

 
அடிமை வாழ்வு வாழ்ந்த போது நாமடைந்த கொடுமை,
ஜாலியன்வாலா பாகில்
அடைத்து சுட்ட அக்கிரமம்...
அதனை விடக் கொடுமை,
இன்று நாம் செய்கிறோம்
வாயில்லா ஜீவனை...
கூண்டிலே வைக்கிறோம்,
மூக்கிலே துளைக்கிறோம்
கயிறு கொண்டு கட்டி 
பாலைப்பிடுங்கிக் குடிக்கிறோம்.
பால் கொடுத்த ஜீவனை 
அறுத்து வறுத்து உண்ணுகிறோம்...
நன்றி இல்லா நரகம்
மனிதன் வாழும் உலகம்!

நாம் அடைந்த விடுதலை விலங்குக்குக் கொடுப்போமா இந்தியனே தமிழனே சிந்தனை செய்யலாமே...?










 

Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

ஒரே மரம்

வாசலில் மண்புழு

டையப்பர் 👶

சிந்தனை சோம்பேறி

🥼👩‍🎓 🐓

வெல்வெட் பூச்சி