தீபாவளி 🎉


 

தீபங்கள்  ஏற்றி எங்கும்

தீபாவளி கொண்டாடும் 

திருநிறைந்த நன்னாளில்


கன்றின் பாலை பிடுங்கிக் கொனர்ந்து

காய்ச்சிப்பின் நெய்யெடுத்துப்

பலகாரம் செய்யும் கொடுமைகள் தானின்றி,


தாவரத்திலெடுத்த குற்றமில்லா கடலெண்ணெய் மணமணக்கும் நல்லெண்ணெய்

நெய்யைப் போல் தேங்காய் எண்ணெய்...


இம்மூன்றும் கலந்தெடுத்த இனிப்பென்ன காரமென்ன


அன்னமென

இவையனைத்தும் நாம் உண்டு.... 

பட்டுப்புழுவைக்கொன்று நெய்த

பட்டாடைதனை தவிர்த்து, 

செயற்கைப் பட்டுடுத்தி...


இம்முறை தீபாவளி அகிம்சாவழி தீபாவளியாய்க்

கொண்டாடி நாம் மகிழ்வோம் குற்றமில்லா மனமுடனே!


🐏🐃🐂🐄🐖🐖🐎🐎🐥🐤🐣



நெய்யில்லா மைசூர் பாக்


1  கடலை மாவு சர்க்கரை தேங்காய் எண்ணெய் மூன்றும் ஒவ்வொரு கப்


2  தண்ணீர் அரை கப்


3  எண்ணையை லேசாக சூடு பண்ணி அதில் கடலை மாவைக் கொட்டி கிளறி தனியாக எடுத்து வைக்கவும்


4  சர்க்கரையும் தண்ணீரும் கலந்து காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன்


5  அதை எண்ணெயில் கலந்த கடலை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து அடுப்பில் கிளறிக் கொண்டே இருக்கவும்


6  பாத்திரத்தை விட்டுப் பிரிந்து வரும் பொழுது எண்ணை தடவிய தட்டில் ஊற்றி ஆறியபின் எடுக்கவும்


Vegan Mysoorpak


1.Besan powder, Oil and Sugar    

   one cup each

2.Water half cup

3.Heat the oil a bit 

4.Mix the powder with the oil 

5 .Mix the sugar and water and 

     boil to a sticky syrup  

6. Add this to the oil powder mix and on slow heat keep stirring .

7 When it comes away from the sides..pour it onto a plate smeared with oil 

8. Cut after cooling 


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி