நிம்மதியான...

 நிம்மதியான...


The pictures show the process of making a vegan omelette...tasted just like an egg omelette.


bengal gram flour ( kadalai maavu)

chillie pieces

chopped onions  

curry leaves 

salt 

turmeric powder

mix with water 

let it set for a few minutes.

 

make the ommmeltte on a tawa

cook on both sides, 

atleast 1-2 minutes for each side .


(adding veggies cut into small pieces is an option and if you want a fluffy one you can add some baking soda )



நிம்மதியான.....


அதையும் இதையும் உண்ண வேண்டும்

என்பதல்ல நனிசைவம்,

உணவில் சிலதை விட்டால் போதும் 

என்றே கூறும் நனிசைவம்.

சுளுவாய் வாழும் வாழ்க்கை

எப்படி என்று சொல்லும்,

சுகமாய் வாழும் வாழ்க்கை

எப்படி என்று சொல்லும் 

வழியாம் என்றும் நனிசைவம்.


முந்திரி பாதாம் பிஸ்தா வென்று உண்ணத் தேவை இல்லை,

இட்லி தோசை உப்மாவென்று

உண்டால் போதும் என்றும் போல...

பருப்பு சாம்பார் கூட்டென்று சோற்றைப் பிசைந்து உண்டுவிட்டு,

ரசிமும் ருசித்துப் புசிக்கலாம்,

பழத்தை மேலே விழுங்கலாம்,

தயிரும் தேவை என்றால் தாவரத்தயிரை சேர்த்துக்கலாம்.


மாலை நேரம் மங்கியதும்

முறுக்கை நொறுக்கி மொறுக்கிய பின்னே,

வெள்ளைக்காரப் பாலதுவே,  வேண்டாமது இங்கேயென்று

வெளியே தூக்கி எறிந்துவிட்டு,

காபி தேநீர் தேவை எதுவோ,

அதையும் சூடாய் குடிக்கலாம்!


இரவுத் தேவை சப்பாத்தி

என்றால்,

கிழங்கும் காயும் கலந்து, மணமணக்கும் குருமாவுடன்

பிடிக்கலாம் ஒரு பிடி என்று..


பாலைக்கொஞ்சம் அருந்தாமல்,

உறக்கம் எனக்குப் பிடிக்காதென்று,

உரக்கச்சொல்லும் நல்லோரே,

தாவரப் பாலைத் தளதளவென்று, 

ஏலம் வெல்லம் எல்லாம் போட்டு, 

கமகமவென்று குடிக்கலாம்

கவலை இன்றித் தூங்கலாம்,

குற்றமேதும் இல்லாமல்! 


பணத்தை கொண்டு கடையில் கொட்டி, 

புழுவைக் கொன்று நெய்தெடுக்கும் பட்டுத்துணிகள் வாங்க வேண்டாம்,

மலிவாய் விற்கும் பருத்தித் துணி 

வாங்கியுடுத்தால் அதுவே போதும்.

பட்டும் தேனும் பகட்டுமின்றி, எளிமையாக வாழச் சொல்லும் 

அருமையான நனி சைவம்!

செலவைக் குறைக்கும் நனிசைவம் 

சூழல் காக்கும் நனி சைவம்-

சுற்றுச்சூழல் காக்கும் நனி சைவம்!



🍋🍈🍏🥝🍇🥥🍅🍅🌶️🌰🥜


என் நனிசைவ ஆரம்பம்...


நான் ஒரு இரண்டு மூன்று வருடங்களாக சைவ உணவு மட்டும் உண்டு வருகிறேன். பட்டுப்புடவை 20 - 25 வருடங்களாக வாங்குவதில்லை.மற்றவர்கள் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் திருமணத்திற்கு எனக்கு வாங்க வேண்டும் என்று கூறினாலும் நூல் புடவை வாங்குமாறு கேட்டுக் கொள்வேன்.

ஆனாலும் ஒரு தெளிவில்லாத மனநிலையில் அசைவ உணவும்  அவ்வப்பொழுது எடுத்து வந்தேன். குடும்பத்தாருடன் உண்ணும் பொழுது அவர்களுக்குக் கம்பெனி கொடுப்பது என்ற எண்ணத்தில் எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் நான் பல வருடங்களாக ப் பழகிய அந்த உணவையும் அதனுடைய ருசியையும் விட முடியாமல் தான் என்பதும் ஒரு காரணம். 


எப்படியோ அசைவ உணவைக் கடந்த மூன்று வருடங்களாக நான் விட்டுவிட்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் இப்போது பழகிவிட்டது. 


ஆனால் இந்தக் காப்பியும் டீயும் படுத்திய பாடு இருக்கிறதே...!

அவற்றைக் குடிப்பதற்கு பசும்பால் தேவைப்பட்டது. அதைக் குடித்துப் பழகிய பழக்கம் என்னை ஆட்டி வைத்தது. மேலும் பால்தானே,அதை அருந்துவது அவ்வளவு தவறில்லை என்பது போல் ஒரு சால்ஜாப்பு அடிமனதில் இருந்தது. நாம்தான் அசைவம் உண்பதில்லையே, பாலைத் தானே அருந்துகிறோம்? என்று..

 

யூடியூபில் அரவிந்த் என்பவர், இளைஞர், முப்பது வயதுக்குள்தான் இருக்கும். ஒரு தெளிவான சிந்தனையுடன் விலங்குகள் உரிமை பற்றி கூறி வருகிறார். 

சமீபத்தில் தற்செயலாக அதைக் கேட்டேன். அவர் பேச்சைக் கேட்டதும் எனக்கு உரைத்தது, குழப்பமே தேவையில்லை, பால் அருந்துவதும் அசைவம்தான், கொடுமைதான் என்கிற உண்மை உறைத்தது.

பசுமாட்டை அதன் மூக்கில் ஓட்டை போட்டு மூக்கணாங்கயிறு மாட்டி,  கட்டி வைத்து வளர்க்கிறோம். ஆயுள் முழுக்க  கைதி போல் வைத்திருந்து பாலையும் கறந்து விட்டு, ஆண் கன்றுக் குட்டி பிறந்தால் அதை அடிமாட்டுக்கு அனுப்பிவிடுகிறோம். எப்பேர்ப்பட்ட கொடுமை என்று நினைத்தாலே நெஞ்சம் பதைக்கிறது.


இதையே நம்மை மீறிய ஒரு அந்நிய சக்தி வந்து மனிதர்களை அடிமைப்படுத்தி இதைச் செய்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது. 


அவருடைய பேச்சைக் கேட்டவுடன் என் மனதில் முடிவு தெளிவானது. முடிவு தெளிவானவுடன் மற்ற எல்லா வழிகளும் தானாகத் திறந்து கொண்டன.


பசும்பால் இல்லாமல் காபி குடித்து பழகி விட்டேன், கருங்காப்பி குடிப்பேன். இல்லை என்றால் பாதாம் பாலும் முந்திரிப் பாலும் நன்றாக இருக்கின்றன. இவற்றின் செய்முறை யூட்யூபில் ஏகப்பட்டவை மலிந்து கிடக்கின்றன.


அரைக் கோப்பை பசும் பால் ஊற்ற வேண்டிய இடத்தில் பாதாம் பால் முந்திரி பால் ஒரு இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு ஊற்றினாலே போதுமானதாக இருக்கின்றது. காபி டீ முதலியவை மிகவும் சுவையாக இருக்கின்றன. அனேகமாக சில நாட்கள் பழகிவிட்டால் பசும்பால் டீ காபியை விட இது நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். 


மற்றபடி பட்டு, தோல், பொருட்கள் இவை எல்லாம் விடுவதில் எனக்கு பெரிய சிரமம் ஏதுமில்லை. தேனும் பல வருடங்களாக நான் உண்பதில்லை. அதைப்பற்றிய ஏக்கமும் இல்லை.


அசைவ உணவும் பாலும் மட்டும் தான்  நம்மில் பலருக்கு விடுவதற்கு மிக மிக சிரமம்.

ஆனால் தெளிவான முடிவு மனதில் பிறந்தால், அடுத்த வினாடி நமக்கு வழிகள் பல புலப்படும்.  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று இதைத்தான் கூறி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நமது வாழ்வில் இனிமேல் பால் இல்லை என்ற முடிவை மட்டும் நாம் எடுத்து விட்டால் போதும், மற்றவற்றை எல்லாம் மனமும் பிரபஞ்சமும் தானாக பார்த்துக் கொள்ளும்!


பால் பொருட்கள், மற்றும் அசைவ உணவு, ஆகியவற்றின் மேல் விருப்பம்  குறைந்து, இப்பொழுது மனதிலும் குழப்பங்கள் பெரும்பாலும் மறைந்து நிம்மதியாக இருப்பது போல் தோன்றுகிறது.

மனிதர்களால் விலங்குகள் படும் அளவில்லாத துன்பத்திற்கு என்றாவது ஒரு நாள் விடியல் வரும் என்ற நம்பிக்கையில் நான் இப்பொழுது இருக்கிறேன்.









Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி