ஏன்?


 ஏன்?


விலங்கின் உரிமை யான்  பேச

காரணம் யாதென சிந்தித்தேன்...

கழிவிரக்கம் என்றார் சிலர்

கருணை என்று சொன்னார்  சிலர் 🙄

அதுவுமில்லை 🧐 இதுவுமில்லை, 

அறிவேன் நானும் அடி மனதில்!

தாங்கள் படும் துன்பத்தை வாயைத்திறந்து வார்த்தைகளால்,

வடிக்க இயலா விலங்குகள்.... 

அதனால் தானே பேசுகிறேன்

அவற்றிற்க்காக நானும் இங்கே,

நியாயம் என்றும் ஒன்றுண்டு,

நமக்கும் கீழே உள்ளோரை,

நலமாய் நடத்த வேண்டுமென்று 

நல்லோரன்று சொன்னாரே!

நவிலுகிறேன் நானே இன்று காரணம் எனக்கு அதுவே என்று!


மனிதனை என்றும் எதிர்க்கவே

இயலாதிருக்கும் விலங்கினம்....

அதைக் காக்கா விட்டால் பரவாயில்லை,

அழிக்காதிருத்தல் நலமன்றோ?

அதைவிடப் பெருநலம்,

சோதனை என்ற பெயரில் வதைக்காதிருத்தல்.

எதிர்ப்புகள் ஏதும் பேச இயலா 

ஏனைய உயிரினை மதித்திருத்தல்,

மாட்சிமையன்றோ மனிதனுக்கு!



காணொளி

--------------------


எங்கள் ஊர் அருகில் காட்டு முயல்களை வேட்டையாட சிலர் இதுபோன்ற  நாய்கள் பலவற்றைக் கூட்டி வந்து பொறி வைத்துள்ளார்கள். போலீஸ் அவர்களை பிடித்து கைது செய்துவிட்டு, நாய்களை அவிழ்த்து விட்டு விட்டனர்.

ஊர்ப்பக்கம் ஒரு சுமார் இருபது நாய்கள் போல அலைந்து கொண்டிருந்தன...


புது ஊரில் பழக்கமில்லா இடத்தில் தானே உணவு தேடத்தெரியாத நாய்கள், காட்டில் மாட்டிக் கொண்ட குழந்தைகள் போலத்தான் துன்பப்படும்.

தாங்களே சுதாரித்து பிழைக்க வேண்டும், அல்லது யாராவது அழைத்துக் கொண்டு சென்றால் அவர்கள் வீட்டில் பிழைத்துக் கொள்ளலாம். அப்படித் திரிந்து கொண்டிருந்தவற்றில் ஒன்று இந்த நாய்......







Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி