கரோனா காய்ச்சல்

கரோனா காய்ச்சல்

உலகின் மனிதர் எல்லோரும் ஒன்றே எண்ணம் ஒன்றே செயல் 
என்றே நோக்கம் வந்தது  இன்றே 
இந்தச் சாதனை செய்தது யாரு?
அந்தப் பெரியவர் பெயர் என்ன?
பெரியவர் உருவில் சிறியவர், 
சிறியவர் பெயர் கரோனா!

உயிரின் பயத்தில் தனிமனிதன்
ஆட்சி பயத்தில் அரசாங்கம்
அழிவின் பயத்தில் உலகெல்லாம்.....
ஆட்டம் காணும் நாளிதுவே!
யாரும் எதுவும் அறியாமல் குழம்பியிருக்கும் காலமிது! தினம் ஒரு செய்தி வருகிறது மெய்யும் பொய்யும் கலந்ததுவே
குழப்பம் முடியும் நாள் என்றோ? 
யாரும் கூற இயலாது!

உலகம் அனைத்தும் ஒரே நோயில் மனிதர் தவிக்கும் நேரமிது...
போரும் சண்டையும் எல்லாம்  மறந்து,
எல்லா நாட்டு மனிதர்களும் ஒன்றாய் இன்று ஒருசேர்ந்து,
அஞ்சி ஓடும் ஒரே எதிரி  சின்னஞ்சிறிய கரோனா!
மனிதரிடையே  ஒற்றுமை
கொண்டுவந்த கரோனா....
மனதை வளமாய் மாற்றிவிட்டாய்
என்ற எண்ணம் வருகிறது,
என்னைச்சுற்றி நோக்குங்கால்.....

இலாபம் ஏதுமில்லாமல்
இலவச உணவும் ஏனைய
பொருளும்,
முகத்தை மறைக்கும் முகமூடியும், 
கையைக் கழுவும் நீர்கலவையும்,
காசின்றி கொடுக்கும் பலபேரை
இங்கே நானே காண்கின்றேன்!
மனமது மகிழ்ச்சியில் மலர்கின்றேன்......
இன்று  விரிந்த மனமெல்லாம்
எதிர்கால உலகில்
பூமியிலே, 
ஏனைய மற்ற உயிர்களுக்கும் நிச்சயம் விரியும் ....நம்புகிறேன்!


🍝🥘🥙🌮🌯🍕🍟🥨🥣🍛🍜🍚🥟🥪


அடங்கிக் கிடக்கும் அனைத்துலகம்!

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே அனைவரும் இருக்கிறோம்... அனைவரும் என்றால் அனைவரும்தான்!
உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் அவரவர் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டும், இருந்தால் தான் உயிர் பிழைக்க முடியும் என்கிற நிலைமை வந்து கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகிவிட்டன!
உண்மையில் இந்த நிலைமை ஆரம்பித்து மூன்று நான்கு மாதங்கள் இருக்கும், அனைவரும் இதை மனதார உணர ஆரம்பித்து பதினைந்து நாட்கள்தான் ஆகிஇருக்கின்றன. 

எனக்கு வீட்டுக்குள்ளேயே இருப்பது புதிதல்ல,  நான் என் தொழிலை விட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது, அதிலிருந்து வீட்டிலேயேதான் இருக்கிறேன்.
திருப்பூர் மற்றும் கோவையில் மாறிமாறி இருந்துகொண்டிருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக கோவையிலேயே வசிக்கிறேன்‌. 
ஒரு வாரமாக கடைக்கு செல்ல முடியவில்லை, அது மட்டும் கொஞ்சம் சிரமமாகத் தெரிகிறது, மற்றபடி எதுவும் வித்தியாசமில்லை.
மேலும் உலக மக்கள் அனைவருமே, அலாஸ்கா முதல் ஆஸ்திரேலியா வரை என்னைப் போன்றே இல்லத்தில் அமர்ந்து, தொலைக்காட்சி மற்றும் கைபேசி, கணினி இவையின் துணையுடனே காலம் கழிக்கின்றனர் என்பதன்   ஆச்சரியம் இன்றுவரை இருக்கிறது......ஏதோ நாம் படர்ந்த உலகம் முழுதும் நிறைய மக்களுடன் ஒரே அலை வரிசையில் இருப்பது போன்ற ஒரு உணர்வு வருகிறது.
ஏனென்றால் தனிமையில் இருக்கையில் செய்யக்கூடிய விஷயங்கள், என்ற தலைப்பில் வரும் செய்திகளில் தமிழ்நாட்டு செய்தி இந்திய செய்தி மட்டுமல்லாமல் எங்கோ மூலையில் அமெரிக்காவில் இருப்பவர் மற்றும் நெதர்லாந்தில் இருப்பவர் என்று, எந்த நாட்டில் இருப்பவர்களும் அனுப்பும் செய்திகளைப் பார்க்கிறோம்.
உலகம் அனைத்தும் ஒரே பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருக்கிறது!
இது ஒருபுறமிருக்க இன்று காலை நான் பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவர் ஒரு கல்லூரியில் பெரிய பதவியில் இருக்கிறார். அவர் கூறிய செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அவர் வேலைபார்க்கும் கல்லூரியில் அவருடைய தலைமையில் தினமும் 500 பேருக்கு சாப்பாடு  தயாரித்து
சாலைகளில் சுத்திகரிப்பு வேலையை செய்யும் மக்களுக்கு   இலவசமாக அனுப்புகிறார்கள்,  என்று கூறினார்.
மேலும் முகமூடிகள் மற்றும் கையை சுத்தம் செய்யும் நீர்கலவைகள் அனைத்தும் அக்கல்லூரி தயார் செய்து அரசாங்கத்திற்கு அனுப்புகிறது.
இதுபோன்றே பல இடங்களில் கண்டிப்பாக நடந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். இது ஒரு நல்ல மனோபாவமாகப் படுகிறது. 

இதே மனோபாவத்தை விலங்குகளுக்கும் நாம் செலுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை,என்று எனக்கு ஒரு நம்பிக்கை.
என் கணவர் இதுநாள்வரை வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தில் சில்ச்சார் என்னும் ஊரில் ஒரு இளைஞர் அரசாங் அவர் ரெய்னர் கனமெஙனஞஙன்கத்திடம் அனுமதி வாங்கி தினமும் உணவு தயாரித்து தெரு நாய்களுக்கு விநியோகித்து வருகிறார் என்று கேள்விப்பட்டேன், இங்கும் அதுபோல் நாம் யாராவது செய்தால் நன்றாக இருக்கும் என்கிற ஒரு எண்ணம் என் மனதில் இருந்து கொண்டிருக்கிறது.
எப்படி இதை செயல்படுத்துவது என்று தெரியவில்லை பெரிய சாலைகளில் கடைகளையும் ஓட்டல்களையும் நம்பியிருக்கும் நாய்களுக்கு மிகவும் கடினமான ஒரு சூழல் இப்பொழுது நிலவும் என்று நினைக்கிறேன். வெயில் காலம் வேறு வந்துவிட்டது தண்ணீர் தாகமும் வாட்டி எடுக்கும்....






Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி