Posts

Showing posts from April, 2020

யானையின் நாகரிகம்

யானையின் நாகரிகம் 🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘 காடு விட்டு காடு செல்லும் கரியதொரு யானைக்கூட்டம் பயிர் விளையும் பூமி வழியே பாங்காக நடந்து செல்லும் கண்ணுக்கினிய காட்சிதனை கண்டேன் நானும், வாட்ஸ்அப் குழுமமொன்றிலே! வேடிக்கை பார்க்க வந்த வாடிக்கை கூட்டம், அமைதியாகப் இருந்திருந்தால், ஆறறிவென்று கூற அடையாளம் வந்திருக்கும்! யானைக்கூட்டம் நிம்மதியாய் வாழுமிடம் போயிருக்கும்! அமைதியாக நடந்து செல்லும் அழகான கூட்டமொன்று..... தொண்டை கிழியக் கத்திக்கொண்டு, கையும் காலும் ஆட்டிக்கொள்ளும் அநாகரிகக் கூட்டமொன்று.... அறிவு யாருக்கைந்திங்கே யாருக்குண்டு ஆறறிவு? 🤔😀 நாகரிகம் அறியாத மனிதர் வாழும் பூமியிலே  பிறந்து விட்ட பாவத்தை செய்த யானை கூட்டம் அந்தோ பாவம் பரிதாபம்! நடந்து செல்ல நிம்மதியில்லை நித்திய தொல்லை மனிதராலே! 🐘🌍🐘🌎🐘🌏🐘🌏🐘🌏 யானையைப் பற்றி படிக்கும் பொழுதெல்லாம் எனக்கு நம்மைவிட உயர்ந்த அறிவு மிகுந்த நாகரிகமடைந்த ஒரு விலங்கினைப் பற்றி படிப்பது போல உணர்வு ஏற்படும். குறிப்பாக இந்தக் காணொளியில் யானைகள்  ஒரு இரண்டு மூன்று முறை   சத்தம் போடும் மனிதர்களைத் திரும்பிப் பார்த்தன.

தொண்டைவலியும் தூதுவளையும்

தொண்டைவலி தூதுவளை மேனி எங்கும் முள்ளுடன் வேலி மேலே படர்ந்து வந்து, சித்திரம் போல்  இலையுடன் செழித்திருக்கும் தூதுவளை! இரண்டு நாளாய் தொண்டைவலி சோறுதண்ணி இறங்கவில்லை, அடித்துப் போட்ட கட்டைப் போல் அசரிக்கை தாங்க வில்லை.... பூண்டு மிளகு சீரகத்தை புளி தக்காளி உடனெடுத்து, தூதுவளை இலைகள முள்ளுடனே பறித்துவந்து, எல்லாம் சேர்த்து மையைப் போல் மின் அம்மியில் அரைத்து வைத்து..... கரிவேப்பிலை கடுகு காயத்துடன் வெங்காயம், நல்லெண்ணையில் தாளித்து, அரைத்த மையில் உப்பிட்டு கரைத்துப்போட்டு கொதிக்கவிட்டு, சொட்டு நெய்யில் குடித்து வந்தேன் நாளில் இரண்டு வேளை, நான்கு நாளில் பறந்தது தொண்டை வலி வேதனை! 🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵 சளிக்கு தூதுவளை இலைகளை  அரைத்து ரசம் வைத்துக் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், நான் அதை அவ்வளவாக செய்தது இல்லை. ஆனால் அந்தச் செடியை வளர்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு, திருப்பூரில் என் அம்மாவுடன் இருந்த பொழுது, அதிசயமாக தானே முளைத்து வந்த ஒரு செடிக்கு, அடிக்கடி தண்ணீர் விட்டு என்னென்னவோ செய்து பார்த்தும் மிக மிக மெதுவாகத்தான் அது வளர்ந்தது. ஒரு

கல்யாண வேளை

கல்யாண வேளை கல்யாணமெல்லாம்  மாறியது கரோனாக் கிருமி சொன்னபடி, இருப்பது அளவாய் இருபது பேர் மீறிப் போனால் முப்பது பேர் சிரித்துப் பேசித் தாலி கட்டி, சொந்தம் ஒன்றாய்  உணவருந்தி, கோவில் விட்டு வீடு சேர்ந்து களைப்பில்லாமல் கனிவோடு கடமையெல்லாம் பார்த்தது! தேனிலவை வீட்டிலேயே தேடிக்கொண்ட புதிய ஜோடி, வாழத்தொடங்கிய முறையின்று வேறுபட்டு வந்தது! கலாட்டா கூட்டம்  ஏதுமின்றி ஆரம்பித்த புதிய வாழ்வு, அருமையாக அமையவேண்டி அனைத்து மக்கள் வாழ்த்துக்களும் மனையிலருந்து பறந்தன மானசீக எண்ணமாக! இந்த மணம் முடிந்தது எந்தக் குறையும் இல்லாமல் பணம் நிறைய மீந்தது பெற்றோர் இருவரிடமுமே! சொந்தமெல்லாம் மகிழ்ந்தது பயணவேலை மிச்சமென்று! திருமணம் எவ்விதம் முடிந்தாலும் எல்லாம் எங்களுக்கொன்றே என்று,  இனிமையாகப் பறந்தது இளைய ஜோடிப் புறாவொன்று!  🕺👩‍❤️‍👨👫🌹💐🌹💐👫👩‍❤️‍👨💃 என் தோழி தன் கணவரின் சகோதரர் மகன் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்து விட்டுச் சென்றார் இரண்டு மாதங்களுக்கு முன்பு. என் மாமன் மகன் தன் மகளுடைய நிச்சயதார்த்தத்துக்கு அழைத்திருந்தார் கண்டிப்பாக வரவேண்டும் அக்கா என்று... நா

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

வைரஸ் வழங்கும் வாய்ப்பு கற்றது எல்லாம் வீணின்றி உற்ற துணையாய் வைத்திருக்க, என்னது கற்றோம் எதைப் பெற்றோம் என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால்..... சரித்திரம் திரும்பி வந்தது இங்கே ஆண்டுகள் நூறு ஆன பின்னே! சட்டென உலகம் ஸ்தம்பித்தது, சுதாரித்தெழ நேரமில்லை! வீட்டினுள் இருந்தால் பிழைப்பாய் மனிதா...... விடுதலை கிடைப்பதெப்பொழுதென்று, கணித்துச் சொல்வது கடினமப்பா, என்று சொன்னது வைரஸ் கிருமி! வாழ்க்கையென்றால் இதுதானா...! வல்லிய சிந்தனை வந்தது இன்று🤔! சிங்கம் புலி யானை என்று விலங்கினைக் கூண்டில் அடைத்தோம், வேடிக்கையாக்கி கேளிக்கை செய்தோம், உடன்பிறந்த உயிரையெல்லாம் கொன்று நாமும் தின்று முடித்தோம், விலங்கிடம் வாழ்ந்துவந்த கிருமி வெளியே வந்தது நம்மைத் தாக்க! 'நாமே நிலையிந்த உலகில் இல்லை' நித்திய உண்மை சத்தியமென்று விளங்கவைத்தது நமக்கது இன்று! 'மனதில் மின்னும் லட்சியங்கள், எழுந்துவரும் எண்ணங்கள், நீராய் ஓடும் நினைவுகள், எல்லாம் ஒன்றாய் சேர்த்துவைத்து, இயற்கையுடன் இயைந்த வாறு பாதை மாற்றி செலுத்திப் பாரு, எண்ணம் பின்னால் தொடரும் வாழ்க்கை எவ்வாறுள்ளதென்பதை

ஒரே மரம்

ஒரே மரம் 🌿 வீசிய காற்றில் வீழ்ந்ததும் இரண்டு வீட்டின் இடையிருந்த இரும்பு வேலி மேலே சாய்ந்து, முக்கால்வாசி சாய்ந்த நிலையில் எங்கள் வீட்டுப் பின்பக்கம் நீண்டு நின்ற முருங்கைமரம்! விழுந்த பின்னும் உயிரோடு வாழ வைக்கும் அருமை மரம்! சாளரமருகில் சிறிய இலைகள் சலசலவென்று காற்றில் ஆட, பூத்துக் குலுங்கும் வெள்ளைப் பூவில் பறந்தமரும் தேனீக்கள், கண்ணுக்கினிய விருந்தாகும் வீட்டுச் சிறையினுள்ளே நமக்கு! கண்ணென்ன கண்ணே, கண் மட்டும் இல்லை, கரோனாகாலக் கஷ்டத்தில்  வயிற்றுக்கும் விருந்தாய் வருவேன் நானே, என்றதந்த முருங்கையிலை! வானலியில் நல்லெண்ணை வாசனைக்குப் பூண்டுப்பல்லு வதக்கி விட்ட வெங்காயம் 🌰 உடன் வதங்கும் தக்காளி 🍅 இறுதியாக கை நிறைய இறங்கும் இந்த இலையும் பூவும் 🌿 அனைத்தும் வதங்கி ஆறியபின்னே மின்அம்மியில் அரைத்தெடுத்து தேவைக்களவாய் நீரைக்கலந்து அடுப்பின் மேலே கொதிக்க விட்டால் அருமையான முருங்கை சூப்! இறக்கியபின் பால் சேர்த்து உப்பும் மிளகும் உடன் சேர்த்தால் ருசியில் தூக்கும் இந்த சூப்!🍵 தேனி வந்து தேனருந்த🐝 இலையும் பூவும் மயிலுண்ண அணில்கள் ஆடி ஆட்டம் போட எட

வீட்டுச் சிறை

வீட்டுச் சிறை வாசலுக்கு வரலாம் வானம் அளக்கலாம், வீதியில் நிற்கலாம் வேடிக்கை பார்க்கலாம், வீட்டுக்குள் சென்றால் விரும்பிய திரைப்படம் காணொளியில் காணலாம்! உற்ற குடும்பம் உடன் இருப்பதாலே வேண்டுவதைப் பேசலாம் சிரித்து மகிழலாம், மற்றவரோடு நாமுறவாட    கையிலே என்றும்  கைபேசி உண்டு... தினமும் குளிக்கலாம் திண்ணையில் நடக்கலாம்... ஆயிற்று இன்றோடு மூவேழு நாட்கள் அடைப்புக்குள் நாமெல்லாம் முழுவதும் சென்று, இருந்தும் இன்னும் பண்டங்கள் உண்டு, எண்ணியதும், வேண்டிய உணவருந்திக் கொள்ள. இத்தனை இருந்தும் 'ஐயோ பத்தலை'! எப்போது கலக்கலாம் மாந்தர்தம் அலையிலே என்றொரு ஏக்கம் எல்லார் மனதிலும்... தற்கால அடைப்புக்கு இத்தனை எனில்...... சொல்லவும் வேண்டுமா ஆயுளுக்கும் அடைபடும் ஜீவனின் வேதனை? இன்றேனும் விடுதலை செய்யலாம் அல்லவா? கட்டிவைத்த நாயும் கூண்டில் உள்ள பறவையும் குப்பியிலே மீனும்  இனியேனும் வேண்டாம் விடுவித்து விடலாம்...... 🐦🦜🐘🐎🐄🐃🐖🐒🦈🐥🐣🐔 பெட்  ஷாப்பும் தெரு நாய்களும் சமீபத்திய  நிகழ்நிலை செய்திகளில்  பெங்களூரில் செல்லப் பிராணிகள் விற்கும் கடைகளில், அவற்றி

வந்தது வைரஸ்

வந்தது வைரஸ் வந்தாலும் வந்தது வைரஸ் கிருமி சொல்லாமல் சொன்னது- சோம்பேறி மனிதா, சொல்கிறேன் கேளடா! அவரவர் வேலையை அவரவர் செய்யடா! சொந்தமாய் சமைத்து பாத்திரம் கழுவி, துணியைத் துவைத்து தேவைக்குத் தேய்த்து, விளையாட்டாய் வீட்டைப் பெருக்கி முடித்து, வேலை அனைத்தும் செய்து மகிழு, செய்து பார்த்தால் தெரிந்துவிடும் வீட்டு வேலயும் சுளுவென்று!வீட்டின்பின்னே இடமிருந்தால் வேண்டிய காயைப் பயிர் செய்யலாம், பயனுள்ள வேலை அதுவேயடா! பாடம் சொல்லப்பிறந்து வந்தது புத்தம் புதிய கரோனா! அடடா வேலையை நன்றாய் நாமே ஆடிப்பாடி செய்தாலே அலுப்பென்பது இருக்காதே அறிந்துகொண்டோம் உன்னாலே! என்று சொல்வது நானில்லை எல்லா நாட்டின் மனிதரும்தானே! தனனானானே தன்னானே! 💃🕺🕴️👯👭🦸🧚🤼🏌️🏋️🚵🚴 வீட்டில் வேலை தோழி ஒருவர் பாத்திரம் கழுவிக் கழுவி கை பொத்துப் போய்விடும் போலிருக்கிறது என்று க்ரூப்பில் குறிப்பிட்டு இருந்தார், கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. சரி 'சிங்கில்' இருக்கும் ஓட்டையை அடைத்து அதில் நிறைய சோப்புத் தண்ணீர் நிரப்பி அதில் பாத்திரங்களை ஊரப் போட்டு விட்டால் சிறிது நேரம் கழித்து சிரம

புயலின் பின்னே

புயலின் பின்னே ஆட்டம் ஆடாமல் ஓட்டம் ஓடாமல் அதிவேகப் புயலிலே நின்ற இடத்தில் நிற்கிறோம்! நின்றால் பரவாயில்லை, நிந்தனை செய்யாமல் நல்லவை நடக்குமென்று சிந்தனை செய்திடுவோம்... நல்லவை என்றால் என்னவை என்று என் மனம் சொல்லுவதை நான் இங்கு வைக்கின்றேன், மாற்றுக்கருத்திருந்தால் மறக்காமல் கூறுங்கள்..... இன்றுவரை நல்லதென்றால், மனிதனுக்கு நல்லதை, மட்டும் நாம் சிந்தித்தோம். மிருகத்தைக் கொன்றோம், மருந்தினை ஆராய்ந்தோம் மிருகத்தின் மேனியிலே முடிந்தவரை நீட்டினோம் மனிதனின் ஆயுளை! நீண்டநாள் வாழ்ந்திடும நம்மால் பயனிந்த பூமிக்கு என்னவென்று எண்ணவில்லை நாமெல்லாம்? இன்று வந்த கரோனா ஸ்தம்பிக்க வைத்தது மனிதனின் வாழ்க்கையை, உலகெல்லாம் நாடெல்லாம்... ஒருநாள் ஓய்ந்திடும் கரோனாப் புயல்  ஓய்ந்தபின் வந்திடும் புதியதோர் உலகம்! புதியதோர் உலகில், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி அளவாக நாம் நுகர்ந்து அனைத்துயிர் காக்க ஆறறிவு மனிதர் நாம் அழகாக முடிவெடுத்தால் நமக்குமது நன்மையே! ஒருவேளை இச்செயலை முன்பே நாம் செய்திருந்தால்  கரோனா என்னும் புயல் மையமே கொள்ளாமல் மனிதனைத் தொடாமல் மறைந்தே இருக்குமோ?

கரோனா காய்ச்சல்

கரோனா காய்ச்சல் உலகின் மனிதர் எல்லோரும் ஒன்றே எண்ணம் ஒன்றே செயல்  என்றே நோக்கம் வந்தது  இன்றே  இந்தச் சாதனை செய்தது யாரு? அந்தப் பெரியவர் பெயர் என்ன? பெரியவர் உருவில் சிறியவர்,  சிறியவர் பெயர் கரோனா! உயிரின் பயத்தில் தனிமனிதன் ஆட்சி பயத்தில் அரசாங்கம் அழிவின் பயத்தில் உலகெல்லாம்..... ஆட்டம் காணும் நாளிதுவே! யாரும் எதுவும் அறியாமல் குழம்பியிருக்கும் காலமிது! தினம் ஒரு செய்தி வருகிறது மெய்யும் பொய்யும் கலந்ததுவே குழப்பம் முடியும் நாள் என்றோ?  யாரும் கூற இயலாது! உலகம் அனைத்தும் ஒரே நோயில் மனிதர் தவிக்கும் நேரமிது... போரும் சண்டையும் எல்லாம்  மறந்து, எல்லா நாட்டு மனிதர்களும் ஒன்றாய் இன்று ஒருசேர்ந்து, அஞ்சி ஓடும் ஒரே எதிரி  சின்னஞ்சிறிய கரோனா! மனிதரிடையே  ஒற்றுமை கொண்டுவந்த கரோனா.... மனதை வளமாய் மாற்றிவிட்டாய் என்ற எண்ணம் வருகிறது, என்னைச்சுற்றி நோக்குங்கால்..... இலாபம் ஏதுமில்லாமல் இலவச உணவும் ஏனைய பொருளும், முகத்தை மறைக்கும் முகமூடியும்,  கையைக் கழுவும் நீர்கலவையும், காசின்றி கொடுக்கும் பலபேரை இங்கே நானே காண்கின்றேன்! ம