வீடும் அறையும்

வீடும் 🚿
அறையும்


வீடென்ற புகலிடம் நிம்மதி தருமிடம்.
பெற்றவர் மற்றும் மணந்தவர்,
மணந்தவருடன் நாம் பெற்றோர்,
என்ற மக்கள் ஒன்று கூடி
குடும்ப மாக மகிழ்ச்சி காண
முயன்று கொண்டிருக்குமிடம்.

நாளில் பாதி  தொழிலுக்கு
மீதிப் பாதி வீட்டிற்கு
அதிலும் பாதி ஓய்விற்கு
மிஞ்சியிருக்கும் நேரத்தில்
குடும்பத்துடன் மகிழ்ச்சியாய்
இருக்க முயற்சி நடக்கும்!

முயன்ற நேரம்போக
இருபத்தி நாலு மணியிலே,
உடலென்னும் கோவிலை
உள்ளும் புறமும் தூய்மை செய்ய
இருப்பதோர் அரை மணி.

அரை மணிக்குத்தேவையா
ஆளுக்கொரு குளியலறை?
ஏனைய நேரம் அவ்வறை
வீனாய்க் கிடக்கப்போகிறதே?
ஆளுக்கொன்றில்லாமல்
வீட்டுக்கொன்று போதாதா
தூய்மை செய்வது சுளுவாச்சே !

அறைக்குள் அமர்ந்து நாம் குளித்தால்
அதனால் படியும் அழுக்கைக் கழுவ
போடும் ரசாயனப் பொடி யாவும்
சூழல் கேட்டை விளைவித்து
பூமியில் பல்லுயிர் பெருக்கத்தைத்
தடுக்கும் பொடியே என்பேன் நான்!



👇👇👇👇👇👇👇🏼👇👇👇👇
🛀🏊🚿🛁🚽🚿🚽🚿🛀🏊🚿

நான் வளரும் பருவத்தில் பார்த்த, குடியிருந்த வீடுகள் அனைத்திலும் குளியலறை என்பது வீட்டின் பின்புறம் சிறிது ஒதுக்குப்புறமான ஒரே அறையாக இருக்கும். ஒரு வீட்டிற்கு ஒன்றுதான்.
எத்தனை பேர் வந்தாலும் அந்த ஒரு அறை தான் எதுவும் பெரிய இடைஞ்சல் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.
அப்பொழுதும் பெரியவர்கள் அலுவலகம் சென்றார்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றார்கள், விடுமுறையில் கூட்டம் வரும், போகும், எல்லா வீட்டிற்கும்.
எல்லா வேலைகளும் நன்றாகவே நடந்தன.
பிறகு என் சித்தியின் கல்யாணத்தின் பொழுது என் சித்தப்பா வீட்டில் சிறிது  மாற்றங்கள் செய்து இரண்டு படுக்கை அறையும் அதை ஒட்டிய குளியல் அறைகளும் கட்டினார்கள்.
அது தான் நான் முதன் முதல் பார்த்த அட்டாச்ட் பாத்ரூம். பிறகு சர்வசாதாரணமாக கொஞ்சம் கொஞ்சமாக எல்லாப் பக்கமும் அப்பழக்கம் பரவி இன்று வீட்டிலுள்ள நபர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு அறையும் ஆளுக்கு ஒரு குளியலறையும் என்றாகிவிட்டது.
இது சுத்தம் செய்வதற்கும் கடினம். இது போன்ற ஒரு அமைப்பு என்பது 'கிரிமினல் வேஸ்ட்' என்ற கட்டுக்குள் தான் வரும்.
அதாவது ஒவ்வொரு அறை கட்டும் பொழுது நாம் உபயோகிக்கும் பொருட்கள், மற்றும் கட்டியபிறகுமே அதை சுத்தமாக வைத்துக்கொள்ள பயன்படுத்தும் இரசாயனங்கள் ..... எல்லாமே சூழல் கேடு தான்! அறைகளை அடிக்கடி கழுவிக் கொண்டே இருக்க வேண்டும் அவை சும்மா கிடந்தாலும் கூட.
இந்த பழக்கம் மட்டும் மாறினாலே எவ்வளவோ நன்மை நம் வாழ்க்கைக்கும் இந்தப் பூமிக்கும் என்பது என் கருத்து.
என் சிறுவயதில் நான் கவனித்த அளவில் எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் வீட்டிலும் குளியலறை ஒன்றுதான் இருக்கும்.
எந்த வீட்டிலும் இரண்டு அறைகள் இருந்து  நான் பார்த்ததில்லை.
என் தாத்தாவின் வீட்டில் மட்டும் பெண்களுக்கு ஆண்களுக்கு ஒன்று என்று இரண்டு டாய்லெட்டுகள் இருந்தன ஆனால் குளியலறை அங்கும் ஒன்றுதான்.


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி