புதிய கிருமி

புதிய கிருமி

இங்கும் அங்கும் அலையாது
அமைதியாக அகத்திலே
இருந்த இடத்தில் இருந்தவாறே
அவரவர் வேலை அழகாய்ச் செய்து,
தேவைக்களவாய் வெளியே சென்று,
தேங்கிய நேரம்  குடும்பத்துடன்
சிரித்துப் பேசி சிநேகம் வளர்த்து,
தன்னைத்தானே தானுணர்ந்து
சிந்தையில் சின்ன மாற்றம் வந்து.......

சில நாட்கள் விட்டதாலே
சிலிர்த்து நிமிரும் பூமியிலே
காற்றும் நீரும்
முன்போல் தெளிய,
மனிதனில்லா வாழ்விடத்தில்
விடுதலை உணரும் விலங்கினங்கள்
சுதந்திரமாய்
திரிந்து மகிழ்ந்து
பூமிதனில் பல்லுயிர் பெருகி
பெரியவாழ்க்கை பயின்றுகொள்வோம் சிறிய மனிதர் நாமெல்லோரும், இன்று இந்தப் இப்பூவுலகில்!

அனுவைப் போன்ற சிறிய உருவில்
பாடம் நமக்கு புகட்ட வந்த கரோனா என்னும் வைரஸ் கிருமி!
உன்னைக் கண்டு அஞ்சுவதா
உருகி நன்றி சொல்லுவதா?
என்ன நாங்கள் செய்ய வேண்டும்
என்பதை நீதான் கூறிவிடேன்!

ஒன்றுமே  செய்ய வேண்டாம்,
அருமை மனிதா  சொல்வதைக் கேள்!
இன்று போலே என்றும் நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்......
வேண்டியதெல்லாம் இயற்கையது தானே வந்து செய்துவிடும்!

ஊடக உலகில் ஒன்றாகி மனதளவில் வேறுபட்ட,     
எல்லா நாட்டு மனிதர்களும் , ஒற்றுமையாய் ஒரே நினைவாய்
நாட்கள் பலதை நகர்த்திச் சென்று,
இன்னும் அதையே எண்ணிக் கொண்டு
ஒன்றுபோலே வாழ வைத்தாய்,
உலகம் பூரா மனிதரெல்லாம்
ஒரே நேரம் விடுமுறை
சரித்திரத்தில் முதல் முறை எடுக்க வைத்தாய் நீயே
புதிய கிருமி கரோனா!


👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧👨‍👩‍👦👩‍❤️‍👨👩‍❤️‍💋‍👩👨‍❤️‍👨👫👯👭


கரோணா காய்ச்சல்

சில நாட்களுக்கு முன்பு எங்கோ சைனாவில் ஏதோ வைரஸ் காய்ச்சல் பரவுகிறது ஒன்றிரண்டு பேர் இறந்து விட்டார்கள் சரியாக செய்திகள் வெளியே தெரியவில்லை, என்ற செய்தி கேள்விப்பட்டோம். அவ்வளவாக யாரும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. திடீரென்று அது மேற்கத்திய நாடுகளுக்கும் பரவி அங்கும் சில பேர் இறந்திருக்கிறார்கள், இத்தாலி நாட்டில் மிக மிக அதிவேகமாகப் பரவி இறப்பு எண்ணிக்கை கூடுகிறது, நம் நாட்டிலும் சிலருக்கு வந்திருக்கிறது என்ற செய்தி எல்லாம் இந்த ஒரு பத்து நாட்களாக மிகவும் அதிகமாகி, கிட்டத்தட்ட ஒரு பீதி போலாகி அனைத்து அன்றாட விஷயங்களும் ஸ்தம்பித்த நிலையில், அனைவரும்  ஒருவாரமாக வீட்டிலேயே இருக்கிறோம். கேட்பதற்கு கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது. குறிப்பாக வயதானவர்களுக்கு இந்த காய்ச்சல் வந்தால் அவர்கள் இறப்பதற்கு வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கேள்விப்படுகிறோம். வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அவரவர் வீட்டிலேயே இருப்பதுதான் மிகச் சிறந்த வழி, ஏனென்றால் யாரிடமிருந்து யாருக்கு எப்பொழுது பரவும் என்று கூறமுடியாது. ஆனால் வேற்று மனிதருடைய தொடர்பில்லை என்றால் இந்த வியாதியில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

ஒரு நாடில்லை இரு நாடில்லை உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் இந்த நிலையில் ஸ்தம்பித்து சில நாடுகளில் எல்லாம் ராணுவ உதவியுடன் ஊரடங்கு சட்டம் போட்டது போல் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.
ஆனால் எல்லா விஷயங்களுக்கும் இரண்டு பக்கங்கள் இருப்பது போலவே இதிலும் இருக்கிறது என்று எனக்கு படுகிறது. வியாதி வந்த வயதானவர்கள் கண்டிப்பாக இறந்து விடுகிறார்கள் என்ற செய்தி மனதிற்கு வருத்தமாக இருக்கிறது...... இருந்தும் இன்னொருபுறம் மனிதனுடைய நடவடிக்கைகள் அனைத்தும் குறைந்துவிட்டதால் அடிப்படையான உணவு உடை இருப்பிடம் தவிர கிட்டத்தட்ட நம் ஆடம்பர நடைமுறைகள் அனைத்துமே நின்றுவிட்டன.

வாழ்க்கைக்கு அடிப்படையான எதுவும் நிற்கவில்லை முக்கியமான வேலைகள் அனைத்தும் இப்போதைக்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஒருவேளை நாம் அன்றாடம் செய்யும் நடவடிக்கை
களில் பாதிக்குமேல் அனாவசியமானவைதானோ  என்ற ஒரு சந்தேகமும் வருகிறது.நம்முடைய நடவடிக்கைகள் அனைத்தும் குறைந்ததால் பூமியில் சூழல் கேடும் சிறிது நாட்களில் நன்றாக குறைந்து விடும் என்று நினைக்கிறேன்
ஆனால் இந்த உண்மையை நமக்குப் புரிய வைக்க இவ்வளவு ஒரு மோசமான வைரஸ் காய்ச்சல் வர வேண்டியதாக இருக்கிறது
என்பது ஒரு வருத்தம்தான்..... 

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி