மனமே எல்லாம்

மனமே எல்லாம்


ராவில் உறங்கும் நேரம் நெருங்க
கால்கள் இரண்டும் நோவில் துவள,
வீட்டு வேலை  முடியவில்லை
பூட்டவில்லை மாடி அறை!
எப்படிப் போவேன் மாடிக்கு இப்படிக்  காலில் நோவுடனே?
அச்சம் மனதில் மேலோங்க அமர்ந்திருந்தேன் சில மணித்துளிகள்.....

'மனமே எல்லாம்' என்கிறாரே
முயற்சிதான் செய்வோமே!'
மனதில் எண்ணம்  மின்ன
'நோவும் இல்லை ஒன்றுமில்லை
நன்றாய் நானே உள்ளேன் இங்கு'
என்றேன் யானே எனக்குள்ளே......
எழுந்தேன், நின்றேன்!
என்ன விந்தை!
எங்கோ காணோம் வலியில் பாதி!
ஓட்டம் போனேன் மாடிக்கு
பூட்டி வந்தேன் கதவை இழுத்து,
உறங்கப் போனேன் மனம் களித்து!



💪👍💁🤸🏋️🧗🦸🏃🧘🚵🚴

மனமே எல்லாம்

எல்லாம் மனசில இருக்கு என்ற இந்த வார்த்தையை அடிக்கடி நான் கேட்டிருக்கிறேன், படித்துமிருக்கிறேன்... அதிகமாக என் அனுபவத்தில் கண்டதில்லை.
பல வருடங்களுக்கு முன் நான் பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, உடன் வேலை பார்த்த மருத்துவர் விடுமுறையில் மலையேற்றம் சென்று வந்தார்... எப்படி இவ்வளவு உயரமான மலையில் திடீரென்று ஏறினீர்கள்? உங்களுக்கு சிரமமாக இல்லையா?
என்று கேட்டேன் அதற்கு அவர் 'its all in the mind' என்றார்.
அவர் கூறியது என் மனதில் ஆழப் பதிந்தது..... மனவலிமையை வைத்துத்தான் பல காரியங்களை பலர் செய்கிறார்கள்....
நான் படித்த நிறுவனத்தின்  மதிப்பிற்குரிய தலைவர் அவர்கள் கைகள் இரண்டும் மிகவும் செயல்படாத,விரல் மூட்டுகள் மடக்க முடியாத நிலையில் இருந்தும் மனோவலிமையினால் பல அறுவை சிகிச்சைகளை செய்தார்! அவர் அடிக்கடி
'இந்த வேலைகளை செய்வது நம் கைகளல்ல, நம் மனம்!' என்று  கூறுவார்.

மிக மிக அரிதான சில சமயங்களில் நானும் என் மனதில் சொல்லிக் கொள்வேன் நான் நன்றாக இருக்கிறேன் என்று, உடனே என்  மனம் நினைத்த வேலையை என் உடம்பு     செய்வது எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது!



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி