மனிதன் மனிதனே

மனிதன் மனிதனே

உலகத் தலைவர் ஆனாலும்
நாட்டின் முதல்வர் என்றாலும்
தளபதி பொறுப்பில் இருந்தாலும்
மனதில் அனைவரும் மனிதர்களே!
உணர்ச்சிகள் உள்ள உருவங்களே!

அவரிடம் அச்சம் தேவையில்லை தயக்கமென்பது வேண்டியதில்லை.
மனதைத் திறந்து பேசலாம்
நினைத்ததை அழகாய்க் கூறலாம்..

அவரின் அல்லல் உணரலாம்
அவர்  நம் துன்பம் அறியலாம்
பேசும் விதத்தில் பேசலாம்
நினைத்த காரியம் முடிக்கலாம்!

இருவரும் நண்மை அடையுமாறு
இடைஞ்சல் இல்லா நிலை வரலாம்
இதற்குத் தேவை சிந்தையின் பலம்
இதனுடன் சேர்ந்து காலமும் நேரமும்.
இதனை உணர்ந்தோருக்கு நிச்சயமாக
தன்னினும் மேலே உள்ளோரிடமும் தன்னிடம் கீழே உள்ளோரிடமும்
இரு வேறு மனிதர் தம்மிடமும்
இனிமையான உறவிருக்கும்!

என்னிடம் இல்லை empathy..
👇🏼

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, மேற்படிப்புக்குப் பிறகு நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தின் சீனியரான தாளாளர் மகன் திருமணத்திற்கு அனைவருக்கும் அழைப்பு கொடுத்தனர்.
அதே தேதியில் என்  தம்பி திருமண 'நிச்சயதார்த்தம்' நடந்ததால் என்னால் திருமணத்திற்குச் செல்ல முடியவில்லை.
அதனால் நான் ஒரு வாழ்த்து மடலை முதலிலேயே கொடுத்திருந்தேன் அவர்கள் வீட்டுக்கு சென்று.
நான் திருமணத்துக்கு போவது போகாதது பற்றிய பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது நாம் மிகவும் சிறியவர் தானே அவ்வளவு பெரிய ஒரு நிறுவனத்தில் நூற்றில் ஒருவர் என்ற எண்ணமும் என் அடிமனதில் இருந்தது.
நான் போனாலும் போகாவிட்டாலும் பெரிய மாற்றம் இல்லை என்று.....
இருந்தும் நான் என் தம்பியின் நிச்சயம் முடிந்து திரும்பி வந்த பிறகு ஒரு கண்ணுக்குப் புலப்படாத மாற்றம்  தெரிந்தது தாளாளர்  என்னிடம் நடந்து கொண்ட முறையில்.
எனக்கு அடிமனதில் மெலிதாகப் பட்டது நான் திருமணத்திற்குப் போகாதது தான் காரணம் என்று.

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான் அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. இதை ஆங்கிலத்தில் 'ஈகோ' என்று கூறுவார்கள், அது நம் அனைவருக்குமே இருக்கிறது.

அவர்கள் ஒருவேளை அதற்கு முன் அவர்கள் சொந்தத்தில் நடந்த இன்னொரு திருமணத்திற்கு நான் சென்றது கூட ஞாபகம் வந்து அதன் காரணமாகவும் அவர்கள் லேசாக எரிச்சல் அடைந்து இருக்கலாம். இதெல்லாம் நானாக யூகம் செய்ததுதான். சில நேரங்களில் நம் யூகங்கள் சரியாக இருக்கும்.
இதிலிருந்து என் முடிவு என்னவென்றால் மனிதர்களைப் பொருத்தவரை அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், என்னதான் பார்ப்பதற்கு ஒரு இயந்திரத்தைப் போல வேலை செய்பவர் போல தோன்றினாலும் அவர்கள் மனதிலும் உணர்ச்சிகள், கோபதாபங்கள், எரிச்சல் அனைத்தும் இருக்கும் என்று.
இது அன்று எனக்கு லேசாகத் தான் புரிந்தது, இன்று இன்னும் கொஞ்சம் விளங்குகிறது.

இன்னும் சமீபத்தில் நான் 'அமேசான் பிரைம்: இல் பார்த்த ஒரு நல்ல நிகழ்ச்சி.
'அலெக்ஸ் இன் வொண்டர்லந்து' என்பது அதில் அலெக்சாண்டர் பாபு என்பவர், இளையராஜாவைப் பற்றி குறிப்பிடும்பொழுது நம் எல்லோரைப் போலவும் எப்படி அவரும் இளையராஜாவின் இசையில் மயங்கிப் போகிறார் எப்பொழுதும், என்பதையெல்லாம் விளக்கி விட்டு பிறகு ஒன்று கூறுகிறார்.
ராஜா அவர்களிடம் 'கோரஸ்' பாடுபவர்கள் கிட்டத்தட்ட இருபது முப்பது வருடங்களாக ஒரே நிலையில் இருப்பதாகவும் சில நேரங்களில் அவர்கள் விரக்தி அவர்கள் தொணியில் தெரிவதாகவும், கடைசியில் பார்க்கப்போனால் அனைவரும் மனிதர்கள் தானே அவர்களும் ஒரு வாய்ப்பு எதிர்பார்த்துக் கொண்டே இருப்பவர்கள்தானே.... என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறுவது உண்மை. அடிப்படையில் நாம் எல்லோரும் மனிதர்கள், உணர்ச்சிகள் உள்ள மனமுடையவர்கள், சின்னச் சின்ன கோபம் தாபம் ஏக்கம் எல்லாம் அனைவரையும் பாதிக்கும், வெளியில் தெரிகிறதோ இல்லையோ......




Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி