ஆளுமை


ஆளுமை

நல்ல உயரம் சிவந்த நிறம்
நிறைந்த கூந்தல் விரிந்த கண்கள்...
பார்க்கும் பார்வைக்கினிய உருவம்
உடுத்தும் உடையில் இருக்கும் நேர்த்தி
அனைத்தும் கொடுத்தது
அழகிய தோற்றம்!

தோற்றம் தருமா ஆளுமை என்பது?
தராதென்றே நினைக்கின்றேன்....

சின்னதான உருவமும்
சுமாரான நிறமும்
நேர்த்தி என்று எதுவும் இல்லா
விழியும் மூக்கும் வாயும் முகமும்....
இருந்தும்,
அவர் நடையில் பேச்சில்
பார்க்கும் விதத்தில்
வெளியே  தெரியும்
மனத்தின் வலிமை
எல்லாம் சேர்ந்தது,
அவருக்கென்றோர் ஆளுமையானது!

55

ஆளுமை என்றால் இவர்👇🏼

ஒருமுறை டிவியில் திரைப்பட நடிகை லட்சுமி அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி   தன் நினைவலைகளைக் கூறினார்.
அவர் கூறியது ராஜராஜசோழன் படப்பிடிப்பின் பொழுது தனக்கு ஏற்பட்ட அனுபவம்.
வீட்டிலிருந்து சூட்டிங் இடத்திற்கு அன்றாட உடையில் வந்த சிவாஜி கணேசன் அவர்கள் லட்சுமியுடன் பேசிவிட்டு மேக்கப் அறைக்கு சென்றார்.
அவர் ராஜராஜ சோழனாக உருமாறி வெளியே வந்து நின்றவுடன் அவரைப் பார்த்த லட்சுமி கொஞ்சம் அதிர்ந்து விட்டதாக கூறினர்.
உயரத்தில் சிவாஜி தன்னை விட மிக அதிக உயரமில்லை,  தன்னுடன் முதலில் பேசிக் கொண்டிருந்தபொழுது சாதாரண சிவாஜியாக தெரிந்தவர் ராஜராஜ சோழனாக உருமாறி வெளியில் வந்தவுடன், மிக  உயரமான ஒரு அரசரைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது என்று கூறினார்.
சிவாஜிகணேசன் மனதுக்குள் ராஜராஜசோழனாகவே மாறியதால் அவர் மனதில் இருந்த அந்த உணர்வுகள் அவர் நடையிலும் பேச்சிலும் தானாக வெளிப்பட்டு அதே உருவம் மிகப் பெரிய உருவம் போல ஒரு பிரமை ஏற்பட்டதாக லட்சுமி கூறினார்.

நான் இன்று அதை நினைத்துப் பார்க்கும்போது  அதுதான் ஆளுமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் என தோன்றுகிறது. ஏனென்றால் பல நேரங்களில் பார்க்க அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் ஆளுமை நமக்கு பெரிதும் கவர்ச்சிகரமாக இருப்பதில்லை.
சிலருடைய முகத்தோற்றம் கண் மூக்கு என்று தனித்தனியே பெரிய அழகு இருக்காது, ஆனால் மொத்தமாக அவரை பார்த்தாலோ பேசினாலோ நம் மனதில் அவரைப் பற்றி ஒரு பிரமிப்பு ஏற்படும்.
நான் நினைத்துக்கொள்வேன் அடிக்கடி.... ஆளுமை என்பது புறத்தோற்றத்தைவிட அந்த மனிதர் தன்னை பற்றி மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது அவர் நடை உடை பாவனைகளில் வெளிப்பட்டு அவருக்கு ஒரு ஆளுமையைக் கொடுக்கிறது என்று.




Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓