ஒவ்வாமை

ஒவ்வாமை

பழமொழி எல்லாம் மெய்யல்ல
ஆனால் பொய்யா மொழியொன்றதிலுண்டு!
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'

பல நோய் பெருகும் நம்நாட்டில்
இந்நோய் கொஞ்சம் குறைவாகும்
ஒவ்வாமை என்பது அதன் பெயரே!
'வளர்ந்த' மேலை நாடுகளில்
எதற்கெடுத்தாலும் ஒவ்வாமை
எதெடுத்தாலும் 'அலர்ஜி '
உயிரையும் வாங்கும் சிலநேரம்
ஒவ்வாமை எனும் நோயதுவே!யுஎஸ்ஏவில்  இருக்கையிலே
தொல்லை கொடுக்கும் ஒவ்வாமை
மெட்ராஸ் வந்ததும் குறைந்துவிடும்!
காரணம் என்ன நாமறியோம்!

சிந்தனை என்ன செய்துமே  விளங்கவில்லை காரணமே,
சுத்தம் சுத்தம் எனும் பெயரில் சுற்றுச்சூழல் எல்லாமே நுண்ணுயிரின்றிப் போய்விட்டதோ?
அதனால் வருதோ ஒவ்வாமை?
எதற்கெடுத்தாலும் மேற்கின் பின்னே
ஓடிச்செல்லும் நம் நாடும்
இன்னும் சிறிது காலத்தில் ஒவ்வாமை இருப்பிடம் ஆகிடுமோ?

அளவை மிஞ்சி எதுவந்தாலும்
அதுவே விஷமாய் மாறிடலாம் சுத்தமும் அதிலே சேருமம்மா!
கிருமிகள் எல்லாம் போகும் வண்ணம்
கழுவிக்கொண்டே இருக்க வேண்டும்
கைகள் இரண்டையும் என்று கூறும்
நம்மைச் சுற்றும்
விளம்பரமெல்லாம்
வியாபாரம் ஒன்றே குறியென்று,
அறிந்து கொள்வீர் குழந்தைகளே!
அறுவை செய்யும் மருத்துவருக்குக் கண்டிப்பாகத் தேவை கிருமி இல்லா கைகள் இரண்டு!
அன்றாட வாழ்வில் அனைவருக்கும் தேவையில்லை
கிருமிகள்நாசம் செய்த கைகள்!


அமெரிக்க உறவினர் கூறியது 👇🏼

சமீபத்தில் நான் சென்னை சென்றிருந்தேன் என் மாமன் மகளுடைய மகன் திருமணத்திற்காக.
அருமையாக ஏற்பாடு செய்திருந்தார் என் 'கஸின்'.
இரண்டு நாட்கள் அங்கு தங்கி அந்த திருமண விழாவை நாங்கள் மிகவும் ரசித்தோம். அதிலும் காலையில் முகூர்த்தம் முடிந்த பிறகு அளித்த பிரேக்ஃபாஸ்ட் அது போன்ற ஒரு அருமையான உணவை நான் சாப்பிட்டு வெகு நாட்களாயிற்று.
ஒரே ஓட்டலில் மேற்கத்திய நாடுகளின் உணவு மற்றும் தென்னிந்திய உணவு இரண்டையும் நன்றாக செய்யமுடியும் என்பது கொஞ்சம் வியப்பளித்தது!

அப்பொழுது என் மாமன் மகளின் தங்கை அமரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கே தன் மகனுக்கு அடிக்கடி வரும் 'அலர்ஜி' இங்கு வந்தவுடன் குறைந்து விடுகிறது என்று கூறினார்.
அவரே சிறிது யோசனையுடன் ஒருவேளை அங்கு ஓவராக சுத்தம் பார்ப்பதாலோ என்னவோ என்றும் ஒரு கருத்துக் கூறினார்.
அதில் கொஞ்சம் விஷயம் இருப்பதாக எனக்குப் படுகிறது.
எதிலும் ஒரு அளவு என்பதுபோல் சுத்தம் என்பதிலும் ஒரு அளவு இருக்க வேண்டும். நாம் ஏதோ அறுவை சிகிச்சை செய்வது போல கையை எந்நேரமும் கழுவிக்கொண்டு இருப்பது அவ்வளவு நல்லதல்ல என்று நினைக்கிறேன்.
அதுவும் இப்பொழுது குப்பிகளில் வரும் ஆன்டி-செப்டிக் சொல்யூஷன்ஸ் கண்டிப்பாக தினமும் கைகளில் போடக்கூடாது.
அவற்றிற்கே சில பேருக்கு அலர்ஜி வரக்கூடும்.
டிவியில் வரும் விளம்பரங்கள் எல்லாமே நம் பணத்தைப் பறிப்பதற்காக மட்டுமே வருகின்றன என்பதை என்றும் ஞாபகத்தில் கொள்வது நலம்!








Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி