சகிப்பும் விருப்பும்

சகிப்பும் விருப்பும்

என் மகனுக்கும் எனக்கும் நடந்த ஒரு டெலிபோன் உரையாடலுக்குப் பின் நான் அவனுக்கு எழுதிய ஒரு சிறு பாடல் 👇🏼

இயற்கை மனிதனைப் படைத்தது இவ்வாறேயென அறிவாய் மகனே!
இயற்கை கொடுத்த இயல்பிருக்கு,
இதனை மாற்ற நினைத்தாலும்
அவ்வப்போது தலைதூக்கும் உள்ளே உள்ள இயல்பதுவே!

கேள்விகள் கேட்பது, ஏனென்று கேட்க நினைத்துக் கேட்டாலும், கேள்விக்குப் பதிலே கிடையாது.
கேளிதை  மகனே சின்னத்தம்பி
கேள்விகள் ஆயிரம் உண்டிங்கு
பதில்கள் கிடைப்பது கடினமப்பா!

அடிப்படை குணமென ஒன்றுண்டு,
அதனை அந்த மனிதன்,
தானே எண்ணி முயன்றால் கூட
குணத்தை மாற்ற முடியாது.
ஆகையினாலே நாமெல்லாம் அதை மனதில் வைக்கத் தேவையில்லை,
அவரவர் வாழ்க்கை உண்டிங்கே அதனை மகிழ்வுடன் களிப்போமே!

இன்னும் ஒன்று கூறுகிறேன் செவியை நீயும் தீட்டிக்கொள்
சொல்வதை மட்டும் நீயே
ரகசியமாக வைத்துக் கொள்!
சக மனிதனை சகிப்பதென்பது
எனக்கும் மிகவும் கடினமே!

விலங்கினம் எல்லாம் எனக்குமே விருப்பம் மிகவும் ஆனதே, மனிதரில் எடுத்துக்கொண்டால்
மனதிலே விருப்பம் என்பது சிலரிடம் மட்டும் உள்ளதே!
இவ்வாறென என்னையே இயற்கை ஏன் படைத்தது?
எல்லா மனிதரை விரும்பும் குணம்
எனக்கு ஏன் வரவில்லை?
இதையே நானும் இன்றுவரை
அறிய முடியவில்லையே!

மனிதர், மகன், நான் 👇🏼

எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் விலங்குகள் என்றால் கொஞ்சம் அன்பு அதிகம்.
எனக்கு மனிதர்கள் மீது வெறுப்பில்லையென்றாலும்,நாம் மறு எண்ணமின்றி சின்னத்தனமாக செய்யும் பல காரியங்கள் பிரியத்தைக் குறைக்கிறதென்றே எண்ணுகிறேன்.அனேகமாக மற்ற மனிதர்களுக்கும் என்னைப் பார்க்கும் பொழுது இவ்வாறே தோன்றும். உலகம் ஒரு கண்ணாடி என்றுதானே கூறப்படுகிறது!

ஆனால் விலங்குகளின் நடத்தையில் என்றும் ஒரு ஒழுங்கிருக்கும்.
இயற்கை அவர்களுக்கு அமைத்த சட்ட திட்டத்தை அவர்கள் பெரும்பாலும் மீறுவதில்லை.
முக்கியமான ஒரு 'பாயின்ட்' என்னவென்றால் பணப்பிரச்சினை இல்லை அவர்களுடன்.
அதைவிட முக்கியம் 'ஸ்மால் டாக்' மற்றும் 'பார்மாலிட்டீஸ்' வேண்டியதில்லை ....எனக்கு இதுதான் மிகவும் பிடித்தது.
அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் உறவில் ஒரு உண்மைத்தன்மை இருப்பது போல் உணருகிறேன்.

Born free என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன், சிறுவயதில் அந்தப் படமும் பார்த்திருக்கிறேன்.
அது அனாதையாக்கப்பட்ட சிங்கக் குட்டியை எடுத்து வளர்த்ததைபற்றிய ஒரு உண்மைக்கதை.
ஜாய் அடாம்ஸன் என்ற ஒரு பெண்மணி அதை வளர்த்தவர்,
கிட்டத்தட்ட ஒரு செல்லப் பிராணி போல எல்சா என்ற அந்த சிங்கக்குட்டியை அவர் வளர்த்து வந்தார்.

ஆனால் வேறுவழியின்றி அதைத் திரும்ப காட்டுக்குள் விட வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தபோது அவரும் கணவரும் கொஞ்சம் கொஞ்சமாக அதைப் பழக்க எண்ணி நான்கைந்து நாட்கள் காட்டுக்குள் விட்டு விட்டு சென்றனர்....பிறகு திரும்பி வந்தபொழுது வேட்டையாடத் தெரியாததால் உணவு உண்ணாமல் எல்சாவின் உடம்பு மிகவும் இளைத்திருந்தது.
ஆனால் இவர்களைப் பார்த்த உடன் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள் என்ற கோபம் துளியும் இல்லாமல் உடனே குதித்து ஓடி வந்து அவர்களிடம் பிரியமாக தன் பாசத்தையும் அன்பையும் காட்டியதாக எழுதி இருந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு அந்த குட்டி வேட்டையாடப் பழகி காட்டில் வாழத் தொடங்கி விட்டது. சில வருடங்களில் துணையும் தேடி கொண்டதாக எழுதியிருந்தார். அது துணை தேடிய பின் ஒருமுறை இவர்கள் காட்டிற்கு சென்று எல்சா என்று கூவிய பொழுது, சில மணிநேரங்கள் கழித்து தன் துணையான ஆண்சிங்கம் தூரத்தில் நிற்க எல்சா மட்டும் வந்து இவர்களை பார்த்து விட்டு சென்றதாகவும் எழுதி இருந்தார்........ நம்ப முடியவில்லை அல்லவா? ஆனால் அதுதான் உண்மை.

இதுதான் விலங்குகளின் குணம் போலும்...
சிங்கமாக இருந்தாலும் நாய் குட்டியாக இருந்தாலும் அன்பை காண்பித்து வளர்த்த பிராணி எத்தனை நாட்கள் கழித்து வந்தாலும் அதே பிரியத்துடன் குதித்து ஓடி வருவது.
மனிதர்களிடம் நடக்குமா என்பது சந்தேகம்.....








Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி