முகராசி

முகராசி

முகராசி என்பதொரு
மூட நம்பிக்கையென
முன்பு முனைப்பாயிருந்தேன்,
ஆனால் மனம் அதில்
முனைந்தது
ஆய்ந்தது
அதிலே மெய்யும் சிறிதுண்டென
அறிந்தது
ஆச்சரியமடைந்தது!

எதுவோ எண்ணம் அதுவே வருமது முகத்தில்
அதன் எதிரொலிதான் முகராசி என்றொரு தெளிவு,
இன்றது வந்தது
உண்மை என்றே இதனை எண்ணுகிறேன்!

ஆதலினால் புன்னகை தவழும்
முகமும்
அன்புடன் நோக்கும் விழிகளும்
அடுத்த ஜென்மத்திலேனும்
அளித்திடுவாய் நீ ஆண்டவனே
 🙏

👇🏼என் முகராசி


'அவர் மிக இனிமையான மனிதர் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பார்க்கலாம் நன்றாக உரையாடுவார்'என்று பிறர் கூறக் கேள்விப்பட்டு நான் யாரையாவது
(உ_ம்  மருத்துவர் )
பார்க்க செல்லும் பொழுது அந்த உணர்வு எனக்கு வந்ததில்லை. அவர் கூறியது போல இனிமையானவராக இல்லாமல் கொஞ்சம் 'உம்' என்ற முகத்துடன் முசுட்டுத்தனமான ஒரு நடத்தையைக் கவனித்திருக்கிறேன்... எனக்கு பல நாட்கள் ஆச்சரியமாக இருக்கும்.... என்னடா அப்படிக் கூறினார்கள் இவர் இப்படி இருக்கிறார் என்று.....!

மிக மிக சமீபத்தில்தான் எனக்கு திடீரென்று ஞானோதயம் வந்தது, இது நம் முகத்தை வைத்து அவர் நடத்தையில் மாறுதல் வருகிறது என்று.
பிறர் நம்மிடம் எப்படி நடக்கிறார் என்பது நம் நடத்தையைப் பொறுத்துத்தான் வரும் என்பதெல்லாம்.....
நாம் 'கண்ணாடி போன்றது உலகம் உன்னைத்தான் பிரதிபலிக்கும்..... அது.... இது' என்றெல்லாம் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் எந்த விஷயமாக இருந்தாலும் நாம் மனதார உணர்வதற்கு நம் அனுபவமே வழி காண்பிக்கும். நான் உணர இத்தனை வருடங்கள் ஆயிற்று எனக்கு வாழ்க்கையில்.
என் முகம் பாவனைகளும் என் முக அமைப்பும் தான் அவர்களிடம் அப்படி ஒரு நடத்தையைத் தூண்டி இருக்கலாம் என்பது என் கணிப்பு. இப்பொழுது சிரித்த முகத்துடன் பிறரை அணுகலாமா என்ற ஒரு யோசனை வருகிறது, ஆனால் இயற்கையிலேயே இல்லாத சிரிப்பு எப்படி முகத்தில் வரும்? இது ஒரு பிரச்சனை தான்!




Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி