கெடாது நெகிழி

கெடா நெகிழி

நெகிழி நெகழி என்றுரைத்தால்
அழகி அழகி என்றே செவியில்
விழுகின்றதே சில நேரம்...
அழகோ இலையோ நானறியேன், அழுகல் மட்டும் ஆகாது
எத்தனை வருடம் ஆனாலும்.

மனிதனுக்காயிரம் பயனென்றாலும்,
இதனாலிந்தப் பூமிக்குக்
இன்னலன்றி வேறில்லை.
எந்தப் பொருளாய் இருந்தாலும்
அழுகிமக்கிப் போனாலே
பூமியினுள்ளேதான் கலந்து
புத்துயிர் உரமாய் மாறிடும்.
மாறுதலில்லா எப்பொருளும்
மரிக்கச் செய்யும் பூமியின் உயிரை,
நிலத்தில் நீரில் எதிலுமே
நிலைக்க முடியாதெவ்வுயிரும்
மக்கா நெகிழிப் பொருளாலே!

அதனால் மனிதர் நாமும்
அறிவுகள் ஆறின் துணையோடு,
நெகிழிப் பொருள் எதுவாயினும்
மறுசுழல் முறையோடு
மீண்டும் மீண்டும் பயன்படுத்தி,
பூமியின் மாசைக் குறைத்தோமென்றால்,
பல்லுயிர் பெருகி வளமாகி,
நமக்கே நண்மை பயக்கும் நாளை,
சுயநலமான நோக்கில் கூட
நெகிழிப்பொருள் ஆகாது!


நம்மால் இயன்றது...👇🏼

ஏறத்தாழ நூறு வருடங்களாக நெகிழி நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்டது. அதனால் இனிமேல் நெகிழி இல்லாத வாழ்க்கை உருவாகுமா என்று தெரியவில்லை.
ஆனால் நெகிழியினால் வரும் கெடுதல்களை இன்றைக்கு நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்... அக்கெடுதல்கள் வராமல் தடுக்க நாம் முயற்சி செய்யலாமா என்று பார்த்தல் நலம்.... குறிப்பாக ஒரே ஒருமுறை மட்டும்  உபயோகத்து விட்டு வீசிவிடும் நெகிழிப் பொருட்களால் பூமி மிகவும் மாசடைகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் எந்த நெகிழிப் பொருளாய் இருந்தாலும் பூமிக்கு கெடுதல் தான்.
இருந்தும் இதைத் தடுப்பதற்கு  தனிமனித அளவில் முயற்சி எடுத்து இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களே!

நான் இன்னும் எடுக்கவில்லை, வெறும் நினைவிலேயே நின்று கொண்டிருக்கிறேன் .  ஆனால் தீவிரமாக இதை பற்றி சிந்தித்து நான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்...
நெகிழிப் பைகள் அதாவது நாம் மளிகை சாமான்கள் அடைத்து கொடுக்கும் பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் வாங்கும் குப்பிகள், வெறும் பிளாஸ்டிக் பைகள் எதுவாகினும் வீசி எறியாமல் அதையெல்லாம் தனியாக சேர்த்து வைத்து மறுசுழற்சி செய்பவர்களிடம் ஒப்புவிக்க வேண்டியது நம் தலையாய கடமை என்று தான் நான் நினைக்கிறேன். அதனுடன் கூடவே முடிந்தவரை நெகிழிப் பொருட்கள் வாங்காமல் இருக்கும் பொழுது அவைகளின் தயாரிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்பிருக்கிறது.
மளிகை சாமான்களை கூட சிறு துணிப் பைகளில் கட்டி வாங்கிக் கொண்டு வந்துவிடலாம், எண்ணெயை பாத்திரங்களில் வாங்கி வரலாம். இன்று நிறைய கடைகள் அவ்வாறு கொடுக்கின்றன.

தனி ஒரு மனிதராக நாம் மட்டும் செய்து என்ன பிரயோஜனம் என்பது போன்ற நம்பிக்கையற்ற எண்ணங்களை ஒதுக்கி விட்டு நாம் ஒருத்தர் செய்தால் நம் திருப்தியாவது மிஞ்சும் அல்லவா.. அதை நினைத்து செய்யலாம்!
சிறுதுளி பெருவெள்ளம் ஆகலாம்!

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி