துவாரகையும் உஷையும்



துவாரகையும் உஷையும்

துவாரகா செல்லலாம் உணவருந்தி வரலாம்,
தோழியரே வாருங்கள்
என்றழைத்தார் எங்களை,
உஷா என்ற பெண்மணி கேரளத்துப் பைங்கிளி!

சைவமென்ன அசைவமென்ன
அனைத்துமிருந்தது அங்கே,
அன்பைக் கூடக் கலந்து,
அருமையாகக் கொடுத்தாள்   தோழி எங்கள் உஷா!

வயிறு முட்டத் தின்று விட்டு
வசதியாகச் சாய்ந்தோம்
அரைத்தூக்க நிலையில் அழகாகக் கனவுலகம் சென்றுவிட எண்ணி....

உணவெல்லாம் செரிமானம் ஆக வேண்டும் சரியாக, போகலாமே நீச்சலுக்கு வாருங்கள் பெண்களே என்றழைத்தார் தோழியவர்!

அறுபதான வயதையும் பெருத்து விட்ட உடம்பையும்,
எண்ணி எண்ணித் தயங்கினோம் எங்களிலே சிலர்,

தயக்கமென்ன பெண்களே
குளமிருக்கு மாடியில்,
யாரும் பார்க்க முடியாது விரைந்து நீங்கள் வாருங்கள்
விளித்தார் எங்கள் தோழி!

இறங்கினோம் நாங்கள்  உறுதியான நால்வர்.
குளமதைத் தொட்டதும்
தண்ணீர் மேல் பட்டதும்,
கனத்திருந்த மேனியது
காற்றாக மாறியது,
அறுபதென்ற வயது
இருபதெனத் தோன்றியது!

காற்றான மேனியது நீரில் ஆடியதை, கண்திறந்து பார்க்காமல் செவிகொண்டு கேட்டால்,
சிற்றிளம் கன்னியர் சிலர் குளிக்கின்றார் குளத்திலே,
என்றெண்ணி இருப்பார்,
யார் அங்கே இருந்தாலும்!

நீச்சல் என்றால் என்னவென்று,
அறிந்திராத நாங்கள்,
நீராடிக் களிப்பதைக்,
இரு விழியால் கண்டதும்
கேரளத்துக் கட்டழகி சாதனாவும் இறங்கினார்..
நால்வரானோம் ஐவராக!

மிதக்கும் மங்கையரே!
மிதந்தது போதும்
அறைக்குள் வாரும்,
சுடான காப்பி
குண்டான போண்டா காத்திருக்கு அங்கே,
அலுக்கா அன்புடன்
அழைத்தார் உஷா.

அன்புக்கு அடிபணிந்து போண்டாவும் காபியும்,  அருந்திவிட்டுக் கிளம்பினோம்,
அருமையான விடுமுறை கிடைத்ததொரு மகிழ்ச்சியுடன்!

உஷைக்கு நன்றி!

 👇🏻

துவாரகா

அதிநவீனசாதனங்கள் வந்துவிட்ட இக்காலத்தில், பழைய பள்ளித் தோழிகளுடன் தொடர்பு கொள்வது மிகச் சுலபமாக இருக்கிறது, குறிப்பாக வாட்ஸ்அப் மூலம்.

ஆகையால் கிட்டத்தட்ட நாற்பது வருட இடைவெளிக்கு பிறகு இந்த மூன்று நான்கு வருடங்களாக பள்ளியில் உடன் படித்தவர் எல்லாம் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறோம்.

நேற்று கோவையில் ஒரு சந்திப்பு நடந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறிய விடுமுறை  கிடைத்த உணர்வு.

எங்கள் தோழி உஷா என்பவருடைய அண்ணா கோவை சாய்பாபா காலனியில் துவாரகா என்றொரு home stay இல்லம் வைத்திருக்கிறார்.

உஷா எங்கள் அனைவரையும் அங்கு அழைத்திருந்தார்.

அவ்வளவு  அன்புடனும் அக்கறையுடனும் எங்களை உபசரித்தார்... ஏதோ நாங்கள் எல்லாம் ஒரு முக்கிய விருந்தினர் மாதிரி, ராஜ உபசாரத்துடன் நடத்தப்பட்டோம்.

என்னிடம் நான் காணும் பல குறைகளில் ஒன்று இந்த விருந்தோம்பல் என்னும்  உணர்வு, அது என்னிடம் துளிக்கூட இல்லை என்பதே.
ஆனால் இந்தக் குறையைப் பற்றி நான் பெரிதாக கவலைப்பட்டதில்லை அதை மாற்ற வேண்டும் என்று எண்ணியதுவுமில்லை.
உஷா எனக்கு நேர் எதிர் மறை!

👇
துவாரகையும் உஷையும்

துவாரகைக்கு வாருங்கள் உணவருந்திச் செல்லலாம், அழைத்தாள் எங்களை
உஷை என்ற தோழி, கேரளத்துப் பெண்மணி!

சைவமென்றும் அசைவமென்றும்,
பார்த்துப் பார்த்து
சமைத்துப்,
பரிவைக் கூடக் கலந்து
பரிமாறினாள் எங்கள்
அருமைத் தோழி உஷா!

வயிறு முட்டத் தின்று விட்டு  வசதியான நாற்காலியில்
சாய்ந்துகொண்டோம் அழகாக
கனவு காண ஏதுவாக!

உணவெல்லாம் செரிமானம் ஆக வேண்டும் சரியாக, போகலாமே நீச்சலுக்கு வாருங்கள் தோழியரே, அழைத்தார் அருமை உஷா!

அறுபதான வயதையும் பெருத்து விட்ட உடம்பையும்,
எண்ணி எண்ணித் தயங்கினோம் எங்களில் சிலர்,

தயக்கமென்ன பெண்களே
குளமிருக்கு மாடியில்,
யாரும் பார்க்க முடியாது விரைந்து நீங்கள் வாருங்கள்
விளித்தார் எங்கள் தோழி!

இறங்கினோம் நாங்கள்  உறுதியான நால்வர்.
குளத்தைத் தொட்டவுடன்
தண்ணீர் பட்டவுடன்,
கனத்திருந்த மேனியது
காற்றாக மாறியது
அறுபது வயது
இருபதெனத் தோன்றியது!

காற்றான மேனியுடன் நீரில் நாங்கள் ஆடியதை, கண்திறந்து பார்க்காமல் செவிகொண்டு கேட்டால்,
சிற்றிளம் கன்னியர்  குளிக்கின்றார் குளத்திலே,
என்றெண்ணி இருப்பார் யார் அங்கே இருந்தாலும்!

நீச்சலறியா நால்வர்
நீராடிக் களிப்பதைக்,
கண்ணிலே கண்டவுடன் கேரளத்துக் கட்டழகி சாதனாவும் இறங்கவும்
நால்வரானோம் ஐவராக!

மிதக்கின்ற கன்னியரே!
மிதந்தது போதும்
அறைக்குள் வாரும்,
சுவையான காப்பி
குண்டான போண்டா காத்திருக்கு அங்கே!
அதே அன்புடன்
அழைத்தார் உஷா.
அன்புக்கு அடிபணிந்து போண்டாவும் காபியும்,  அருந்திவிட்டுக் கிளம்பினோம்,
அருமையான விடுமுறை கிடைத்ததொரு மகிழ்ச்சியுடன்!

உஷைக்கு நன்றி!
🙏














Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி