எள்ளு

நம் நாட்டின் கிட்டத்தட்ட  எல்லாப் பகுதிகளிலும் ஏதோ ஒரு வடிவில் எள்ளைப் பயன்படுத்துகிறோம்.

நம்ம ஊரில் எள்ளுருண்டை பிரசித்தம்.
உணவுடன் சேர்த்து உண்ணும் எள்ளுப்பொடியும் பல இல்லங்களில் இருக்கும்.

எள்ளுருண்டை ஏதோ பெரிய மாபெரும் வித்தை என்று எப்பொழுதும் எனக்கு ஒரு நினைப்பு இருந்தது.எனக்கு அது பிடிக்கும், என் இளைய மகனுக்கும் மிகவும் பிடிக்கும்.
ஆனால் எப்படி செய்வதென்று தெரியாமல் இருந்தது.
ஒருநாள் என் தோழியின் அம்மாவிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
மிகவும் சுலபமாக இருந்தது. எள்ளை வறுக்கும் பொழுது மட்டும் கொஞ்சம் கருக விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், படபடவென்று வெடிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவேண்டும்.
பிறகு வெல்லத்தைப் பொடித்து இரண்டையும் ஒன்றாக மீண்டும் பொடித்து இறுக்கமாக கையால் உருட்டிப் பிடித்தால்,அதுதான் எள்ளுருண்டை!

நான் கண் மருத்துவத்திற்கு பிரத்தியேகமாக படித்துக்கொண்டிருந்த பொழுது, உடன் படித்த தோழி ஒருவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர், விடுமுறைக்குச் சென்று திரும்பும் பொழுது அவர் அம்மா பிடித்துக் கொடுத்த இனிப்பு உருண்டைகள் எடுத்து வந்திருந்தார். எள்ளுருண்டை என்பதுபோல்தான் கூறினார்கள், ஆனால் அதில் கோதுமை மாவு ராகி மாவு முந்திரி பிஸ்தா என்று பலவகை கலந்து, உடன் எள்ளும் இருந்தது.
இந்த உருண்டையை சாப்பிட்டால் ஒன்றுடன் நிறுத்த முடியாது, ஒரு இரண்டு மூன்று சாப்பிட்டால்தான் திருப்தியாக இருக்கும், அவ்வளவு அருமையாக இருந்தது.
அது என்ன, எப்படி செய்வது என்று எனக்குத் தெரியாது.
😊

👇

எள்ளு

அம்மா என்ன செய்கிறாள்
எள்ளுருண்டை பிடிக்கிறாள்,
அப்படியேவா பிடிக்கிறாள்
பொடி செய்து பிடிக்கிறாள்,
அப்படியேவா பொடித்தாள்
வறுத்தபின் பொடித்தாள்,
அப்படியேவா வறுத்தாள்
சுத்தம் செய்து வறுத்தாள்.

வெறும் எள்ளா பிடிக்கிறாள்
வெல்லம் சேர்த்து பிடிக்கிறாள்,
அப்படியேவா சேர்த்தாள்
அதையும் பொடித்து சேர்த்தாள்,
நெய்யும் சேர்த்துப் பிடித்தாளா?
இல்லை இல்லை இல்லையே,
எள்ளிலுள்ள எண்ணெய் போதும்!
வேறென்னவெல்லாம் சேர்த்தாள்
ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை!

எப்படி இருந்தது உருண்டை?
தேனாய் இனித்தது எள்ளுருண்டை !🤸
ஏழையின் உருண்டை எள்ளுருண்டை,
தினமும் ஒன்று  கொடுத்தால்
குழந்தை வளரும்🧗 உறுதியுடன் !🏋️

எப்படி அந்த உறுதி?
இப்படித் தான் தங்கமே,
எள்ளின் உள்ளே சுண்ணாம்பும்,
கலந்திருக்கும் ஊட்டச்சத்தும்,
இரும்பும் சேர்ந்து சத்தாகும்,
எலும்புக்கெல்லாம்  தெரிஞ்சுக்கோ !

இனிப்பென்றாலாகாது என்று கூறும் இளையோரே!
எள்ளுப்பொடி செய்யச்சொல்லி சோற்றுடன் பிசைந்து உண்ணுங்கள்!
எள்ளு மல்லி சீரகம்
காய்ந்த மிளகாய் கருவேப்பிலை
அனைத்தும் வறுத்துக்கொண்டு,
புளியுடன் உப்பு, கொஞ்சம் இனிப்பு, சேர்த்துப்
பொடித்தால் எள்ளுப்பொடி!



Comments

Post a Comment

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி