ஆடை


ஆடை

பட்டுப்பூச்சி முட்டையிட்டு
வெளியில் வந்த பட்டுப்புழுவும் - முப்பது நாட்கள் இலையைத் தின்று,
மீண்டும் மீண்டும் இலையைத் தின்று ,

கூட்டுப்புழுவாய் மாறும் அன்று,
பட்டுப்புழுவின் வாயில்,
சுரக்கும் நூலாம் ஆயிரம் அடி, தன்னைத் தானே சுற்றிச் சுற்றி
ஓடி ஓடி..... ஓடி ஓடி.....
மூன்றே நாளில் கட்டிக்கொள்ளும்
கூட்டுப் புழுவாய்த் தன் கூட்டை!

தானே பின்னியக் கூட்டுக்குள்ளே  உணவில்லாமல் அந்தப்புழுவும்  
இறக்கை உள்ள பூச்சியென்று
மாறிப்பறக்க இருபது நாட்கள்!

கூட்டை பிரித்துப் பட்டுப்பூச்சி
பறந்து பறந்து வெளியே சென்று,
தேடிக்கொள்ளும் துணையொன்று,
தொடங்கும் அழகாய் தன் வாழ்வை.. 

ஆனால் மனிதன் விடவில்லை,
அங்கும் கண்டான் சுயநலமே ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே,

பட்டுப்பூச்சி நானேயென்று
மாறிப் பறக்கக் காத்திருக்கும் கூட்டுப்புழுவின் வீட்டுக்கூட்டை, கொதிக்கும் நீரில் வீசிப்போட்டு
உள்ளே இருக்கும் புழுவைக்கொன்று
நூலைத் தானே
வெளியே இழுத்து
நெய்து கொண்டான் வேட்டி சேலை!

வேட்டி சேலை பாவாடை
பட்டுதனிலே செய்ததென்று
ஆடுகிறோமே நாமெல்லாம்,
புழுவைக் கொன்று, அதன் வீட்டைப் பிரித்து எடுத்த நூலதுவே, என்ற,
உணர்வே  இல்லாமல்....😨

பிகு :
ஆடினேனே நானும் அன்று
எனக்குத் திருமணம் ஆன நாளில்
ஆறாம் அறிவு விழித்தெழவே
ஆனதிங்கு இத்தனை வருடம்
😰.

👇🏼
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நான் பட்டு புடவை வாங்குவதில்லை.
முன்பு வாங்கியவைகளும் முக்கால்வாசி என்னிடம் இல்லை, ஒன்றிரண்டு இருக்கின்றன அவற்றை எப்பொழுதாவது உடுத்துவேன்.
அதையும் இனி நிறுத்திவிடுவேன்.

உண்பதற்குக் கொல்வதை ஏற்றுக் கொள்ளும் மனம் உடுப்பதற்கு கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இருந்தாலும் உணவில் நான் அசைவத்தை விட்டு விட்டேன், சில மாதங்கள் ஆகிவிட்டன.
பாலையும் தயிரையும் நெய் போன்றவற்றையும் நிறுத்திவிட முயற்சி செய்கிறேன் முடியவில்லை.அன்றாட பழக்கம் என்பது அவ்வளவு வலிமை வாய்ந்தது விடுவதென்பது சுலபமில்லை.

என் மகனின் திருமணத்தின் போது நான் இரண்டு நூல் புடவைகள் தான் எடுத்து உடுத்தி இருந்தேன் எனக்கு அது திருப்தியாக இருந்தது.

எனக்கு இயல்பிலேயே அதிக அலங்காரத்தில் நாட்டம் இல்லாததால் பட்டுப்புடவை தவிர்ப்பது மிகவும் சுலபமாகவும் வசதியாகவும் இருக்கிறது....
அதில் விருப்பமுள்ளோருக்கு இது மிகவும் கஷ்டம் என்பது எனக்கு புரிகிறது.


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி