விட்டால் பறக்கும்

ஏறக்குறைய நாம் அனைவருமே ஏதோ ஒரு கட்டாய சிறையில் நம் மனதை அடகு வைத்து இருக்கிறோமோ?
மனிதனாகப் பிறந்தால் பணமீட்டுவது பொருளை வாங்குவது போன்ற வைகளைத் திறம்படச் செய்தால்தான் முழு மனிதனாக க் கருதுகிறோம்.
அல்லது கட்டாயமாக ஏதோ ஒரு லட்சியத்தை வைத்து அந்த லட்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்...  வருவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனத்தை நாம் யாரும் வரவேற்பதில்லை. இதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை.

'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்று எப்பவோ சொல்லிவைத்த ஒரு மொழியை வைத்துக் கொண்டு பொருள் தேடுவது ஒன்றே வாழ்க்கை என்று நினைக்கிறோம்.

கண்டிப்பாக நாம் உலகத்தில் வாழ கொஞ்சம் உழைக்க வேண்டும் பொருளும் சேர்க்க வேண்டும்.
ஆனால் எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வில்லையோ என்று எனக்கு தோன்றுகிறது... என் உள் மனதுக்கு தோன்றுகிறது.
அவரவருக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி வாழ்க்கையை நடத்த வேண்டியது தான்.....
நான் நினைப்பது சரியா என்று எனக்கே இன்னும் விளங்கவில்லை.

👇
விட்டால் பறக்கும்

அறிவும் மனமும் மூளையும் அடைந்து கிடக்கும் கைதி போலே,
பொருளீட்டும் பணியெனும் கூண்டுக்குள்ளே.
கூண்டின் கதவைத் திறந்ததும்
மூன்றும் பறக்கும் வெளியிலே!

கூண்டை விட்டுப் பறக்கும் மூன்றும்
புதியதோருலகம் காணும்,
விரிந்த வானும் உயர்ந்த மலையும்
தெளிந்த நதியும் அடர்ந்த சோலையும்...

கூண்டெனும் சின்னச் சிறையினை, 
உலகே இதுவென்றெண்ணியே,
இத்தனை நாளும் இருந்தோமே!
அடடா உலகம் எத்தனை அழகு?
விரிந்த சோலையும்
பரந்த வெளியும்
இறுதியிலேனும் கண்டோமே!
இதையே இறை என்றழைத்தாரோ!



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி