ஆணும் பெண்ணும்



ஆணும் பெண்ணும்

ஆங்கில அறிஞர் யாரோஒருவர்,
என்றோ எழுதிய வாக்கென்பது,
கால்பந்தாகும் ஆணின் நட்பு
உதைபடுமே அது அங்குமிங்கும்.
உருளும் ஓடும் நட்பெனும் பந்து,
என்றும் இருக்கும் பந்தெனவே
உருட்டவும் ஓட்டவும் ஆண்களுக்கு.
கண்ணாடிப் பொம்மையாய்க்
கைக்குள் வைத்து, பெண்கள் போற்றும் அருமை நட்பு,
ஒரு நொடி கீழே விழுந்தாலும் உடைந்து போகும் அந்நட்பு!

மேலே சொன்ன வாக்கில் மெய்யும் கொஞ்சம் உள்ளதென
மெல்லப் பட்டது என் மனதில்.
நெருங்கிய நண்பன், வெறும் நண்பன்
பாகுபாடில்லை ஆண்களினிடையே,
எல்லா நட்பும் ஏறக்குறைய நல்ல நட்பே என்பார்கள்!
நெருங்கிய தோழி அருமைத் தோழி
யாராகவே இருந்தாலும்,
வேறுபாடென்று வந்தாலே முக்கால்வாசி பெண்களின் நட்பு
முறிந்து விடும் அக்கணமே!

அவனுக்குச் சொன்னாய் எனக்கில்லை,
அவனை அழைத்தாய் என்னையில்லை
அவனுடன் சென்றாய் என்னுடனில்லை....
என்பது போன்ற சிறு சண்டை
ஆண்களிடையே வந்தாலும்
நட்பதிருக்கும் அப்படியே.
பெண்களிடையே இச்சண்டை,
வந்தால் முறியும் அன்றே நட்பு.

ஆணின் இந்தப் பெருந்தன்மை,
அவரே வளர்த்துக்கொண்டதா?
இயற்கை கொடுத்த பரிசளிப்பா?
எதுவாய் இருந்தபோதிலும் அவரின் இந்தப் பெருந்தன்மை அருமையான குணவன்மை!👏

ஆனால் இந்தப் பெருந்தன்மை, ஆணிடமிருந்து பெண்ணுக்கு நீளவில்லை இன்றுவரை,🙄
வாழ்வின் எந்த முகத்திலுமே!
காரணம் என்ன கூறுங்களேன்
நீங்கள்தான்ஆண் சிங்கங்களே!
நம்மை மீறி விடுவாளோ
என்ற பயமே காரணமோ?🧐
ஆணுக்கு எதிர் 'அண்' அல்லவோ?🤔
பெண்ணென ஏன் வைத்தாயோ?😁



👇🏼
நான் பள்ளி, கல்லூரி படிக்கும் காலங்களில் 'ரீடர்ஸ் டைஜெஸ்ட்' என்கிற அமெரிக்க மாத இதழ் அடிக்கடி எனக்குக் கிடைக்கும். நான் மிகவும் விரும்பி அதைப்படிப்பேன்.
அதில் முதல் பக்கத்தில் அறிஞர்களின் வாக்குகளை வெளியிடுவார்கள். சிலது மிகவும் நன்றாக இருக்கும். அதில் ஒரு வாக்கு ஆண் மற்றும் பெண்ணின் நட்பை பற்றி யாரோ எழுதியது,ஆணின் நட்பை கால்பந்துக்கும் பெண்ணின் நட்பைக் கண்ணாடி பொம்மைக்கும் ஒப்பிட்டு எழுதியிருந்தார்கள், யார் என்று மறந்து விட்டேன், என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அது உண்மை என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

நான் என் கணவர் மற்றும் மகன்கள், நண்பர்களை எப்படி நடத்துகிறார்கள், அவர்கள் நட்பு எப்படி நீடிக்கிறது என்று பார்க்கும் பொழுதெல்லாம் இந்த வாக்கை நினைத்துக் கொள்வேன்.
என்னைச் சுற்றி இருக்கும் பெண்களின் நட்பும் எப்படிப் போகிறது என்பது சில நேரங்களில் என் கண்ணில் படும். இந்த இரண்டு விதமான நட்புகளையும் ஒப்பிடாமல் என்னால் இருக்க முடியவில்லை.

இது கிட்டத்தட்ட நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கவனித்து வந்த ஒரு மனித இயல்பு.
மிகவும் சரியான வார்த்தைகளால் வடிக்க முடியாத ஒரு வித்தியாசம் ஆண்களின் நட்புக்கும் பெண்களின் நட்புக்கும் இருப்பதாக எனக்குப்படும்.

என் கணிப்பு சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் இந்தக் கருத்து நிலையாக என் மனதில் என்றும் இருக்கிறது... எனக்கு அது சரி என்று படுகிறது.



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி