துரித உணவு

எல்லா இந்தியர்களையும் போல, கிட்டத்தட்ட எல்லா மனிதர்களையும் என்று சொல்லலாம், எனக்கும் தோசை அதுவும் ரோஸ்ட் தோசை என்றால் மிகவும் பிடிக்கும்.

என் மூத்த மகன் என் வயிற்றில் இருந்த பொழுது எனக்கு கிட்டத்தட்ட தினமும் ரோஸ்ட் தோசை சாப்பிட வேண்டுமென்ற அளவில்லாத ஆசை, வெறி என்று சொல்லலாம் இருந்துகொண்டே இருக்கும்.

நாங்கள் அப்பொழுது பம்பாயில் இருந்தோம், ஒரு சிறிய அறையில் குடியிருந்தோம்.
என் கணவர் பிஎச்டி படித்துக் கொண்டிருந்தார்.
நான் அப்பொழுதுதான் எம்பிபிஎஸ் முடித்து, பயிற்சி மருத்துவராக மிகவும் சிரமப்பட்டு பம்பாய்க்கு ட்ரான்ஸ்பர் வாங்கி சென்றிருந்தேன்.
என் கணவர்தான் அலை அலை என்று அலைந்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கினார்.

அடிக்கடி மாவரைத்து தோசை சுட முடியவில்லை அந்த அறையில்... அப்படியே சுட்டாலும் அது ரோஸ்ட் போல இருக்காது....

எனக்கு ஹோட்டலில் வாங்கி கொடுக்க இவருக்குப் பிரியமில்லை, ஏதாவது தொற்று வந்துவிடும் என்று கூறுவார்.

அது சாக்குப்போக்கு என்ற சந்தேகம் இன்றுவரை எனக்கு இருக்கிறது- ஏனென்றால் இவருக்கு அப்பொழுதெல்லாம் ஹோட்டலில் உண்ணுவது பிடிக்காது.

அன்று பிடித்த தோசை பைத்தியம் இன்றுவரை என்னை விடவில்லை,எந்த  ஹோட்டலில் எப்பொழுது போய் அமர்ந்தாலும் அனைவரும் மெனு கார்டை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள், நான் எடுத்தவுடன் ரோஸ்ட் அல்லது மசால் ரோஸ்ட் என்று ஆர்டர் கொடுத்து விடுவேன்.
யோசனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை! 🤗

👇

துரித உணவு

தக தக வெனத் தங்க நிறத்தில்
மொறு மொறு வெனக் கையில்
நொறுங்கி
மண மண வென வாயில் மணக்க...
தோசை..... ரவா தோசை...

இஞ்சி மிளகு மணக்க வைக்க,
நெய்யும் எண்ணையும் நிறக்கவைக்க,
சுவையும் சேர்த்து சட்னி கொடுக்க,
தனித்துவமானதொரு துரித உணவு,
சுலபமானது நாம் செய்யும் பொழுது!

மாவும் அரைக்க வேண்டாம்  புளிக்கக் காக்கவும் வேண்டாம்!

உப்பு சேர்த்த நீரிலே,
ஒன்றுக்கொன்று சமமாக
அரிசி மாவும் மைதா மாவும் ரவையும் அளந்து சேர்த்து,
பாலைப் போலக் கரைத்தெடுத்து,
இஞ்சி மிளகு  சீரகம்
கருவேப்பிலை கொத்து மல்லி
சிறு சிறு துண்டா வெட்டிப் போட்டு....

தோசைக் கல்லை அடுப்பில்  வைத்து,
கரைத்த மாவைக் கையில் எடுத்துக்
கோலம் போலத் தெளித்துவிட்டு,
நன்றாய் நன்றாய் வெந்தபின்னே,
எண்ணெயுடன் திருப்பிப் போட்டு  ,
நெய்யைக் கொஞ்சம் பூசிவிட்டு,
அழகாய் மடித்துத் தட்டில் வைத்துக்
கொடுக்க வேண்டும்
குருமாவுடன்!


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி