எட்டப் பார்வை

எந்த விஷயத்தைப் பற்றியுமே அதனுள்ளே இருப்பவர்களை விட  தூர நின்று பார்ப்பவர்களுக்கு ஒரு சரியான பிடிப்பு கிடைக்கும்.

இது கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே தெரிந்த ஒருவிஷயம் என்றாலும் பல நேரங்களில் இதை நாம் மறந்து விடுகிறோம்.
வாழ்வின் அன்றாட சச்சரவுகளில் நாம்  அமிழ்ந்து போய் இருக்கும்பொழுது மனதில் குழப்பம் இருந்தாலும் அதை எப்படி தீர்ப்பது என்று புரியாத மனநிலையில் தான் இருப்போம்.
இதுபோன்ற சூழல்களில் நாம்
கொஞ்சம் முயற்சித்து மனதளவில் தூர நின்று நோக்கும் பொழுது ஒரு தெளிவான பார்வையும் தீர்க்கமான முடிவும் கிடைக்கும்.

 எட்டப் பார்வை என்பது ஒரு மனநிலை தான்..... சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், உள்ளே நடக்கும் நிகழ்வுகளும் அப்படியே அது அதன்படிதான் நடக்கின்றன,ஆனால் நாம் அவற்றைப் பார்க்கும் பார்வை.... கொஞ்சம் விலகிப் போய் பார்க்கிறோம் அவ்வளவே. இப்படி ஒரு மன நிலையை நாம் பயிற்சி செய்து வரவழைத்துக் கொண்டோம் என்றால் வாழ்க்கை இன்னும் சுலபமாகவும் இன்னும் கொஞ்சம் நிம்மதியாகவும் ஆகிவிடும்.
இதை நான் பலமுறை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

👇

தூரப் பார்வை

ஆடியும் ஓடியும் ஆடும் ஆட்டம்
காலும் கையும் என்ன ஆகும்
யாரும் சொல்லல் ஆகா,
ஆடி ஆடிக் களைத்தோருக்குத்
தெளிவிருக்காது...
அவ்வப்போது எடுக்கும் முடிவில் குழப்பமிருக்கும்.
தள்ளி நின்று பார்ப்போருக்குத்
தெரியும் எல்லாமே!

வாழ்க்கை ஓட்டம் அவ்வாறே, சுழற்சியான நிகழ்ச்சிக்குள்ளே
சென்று நாமும் அமிழாமல்,
ஆட்டம் குறைத்து அமைதியில் நின்று,
விலகிச்சென்று பார்த்தாலே
விளங்கும் எல்லாமே!
விலகி நிற்கும் மனதில்
ஒரு நிம்மதி வந்து சேருமே!





Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

மாட்டுப் பொங்கல்

நகரும் 🐌 நத்தை

வாசலில் மண்புழு

டையப்பர் 👶

அரிசீம்பருப்பு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd